உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போலீஸ் வாகனம் மீது ராக்கெட் தாக்குதல்: பாகிஸ்தானில் 11 பேர் பரிதாப பலி

போலீஸ் வாகனம் மீது ராக்கெட் தாக்குதல்: பாகிஸ்தானில் 11 பேர் பரிதாப பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் போலீஸ் வாகனம் மீது பயங்கரவாதிகள் ராக்கெட்டுகளால் தாக்கியதில், 11 பேர் உயிரிழந்தனர். 7 பேர் பலத்த காயமுற்றனர்.பாகிஸ்தானில் லாகூர் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரஹீம் கான் என்ற இடத்தில் இரண்டு போலீஸ் வாகனங்கள் சேறும், சகதியுமான சாலையில் சிக்கி கொண்டது. அப்போது அந்த பகுதி வழியாக பயங்கர ஆயுதங்களுடன் சென்ற ஒரு கும்பல், போலீஸ் வாகனம் மீது ராக்கெட்டுகளால் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், 11 போலீசார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 7 பேர் பலத்த காயமுற்றனர்.

உயிரிழப்பு அதிகரிக்கலாம்

காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. தாக்குதலுக்கு பிறகு, அந்த கும்பல் தப்பியோடினர். தப்பிய கும்பல், போலீசாரில் சிலரை பிணைக்கைதிகளாகவும் பிடித்து சென்றனர். தாக்குதல் நடத்தியவர்கள் கொள்ளையர்களா, ஏதேனும் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களா என்ற விவரம் வெளியாகவில்லை.

நடவடிக்கை

பாகிஸ்தானில் ஏராளமான பயங்கரவாத அமைப்புகள் செயல்படுகின்றன. அவை, அவ்வப்போது போலீஸ், ராணுவத்தை தாக்குவதும், பிணைக்கைதிகளாக பிடிப்பதும் வழக்கம். பிணைக்கைதிகளை மீட்க முழு வீச்சில் நடவடிக்கை எடுக்குமாறு பஞ்சாப் மாகாண முதல்வர் மரியம் நவாஸ் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Kumar Kumzi
ஆக 23, 2024 13:01

எப்படி மனிதனாக வாழ்வான்


KRISHNAN R
ஆக 23, 2024 12:23

நல்ல வேளை......இவர்கள் நாடு கேட்டு தனியா போய் ட்டார்கள்


Ramesh Sargam
ஆக 23, 2024 12:01

வினை விதைத்தவன் வினை அறுப்பான். அதுபோலத்தான் பாகிஸ்தான் நாட்டிலும். பயங்கரவாதத்தை வளர்த்து இந்தியா போன்ற நாடுகளில் தாக்குதல் நடத்தினார்கள். இன்று அவர்கள் வளர்த்த அதே பயங்கரவாதிகள் அவர்கள் நாட்டிலும் தங்கள் திறமையை காட்டுகிறார்கள்.


Rasheel
ஆக 23, 2024 11:55

குல வழக்கப்படி, தீவிரவாத பாம்புக்கு பால் வார்த்தான், அனுபவிக்கறான்.


தமிழ்வேள்
ஆக 23, 2024 10:56

வெள்ளிக்கிழமை மத்தியான்னம் , பிரியாணி நேரத்துக்குத்தானே குண்டு வைப்பது குல வழக்கம் ? இது என்ன காலையிலேயே ?


Anand
ஆக 23, 2024 13:37

இனி காலையிலும் குண்டு வைக்கலாம் என குல வழக்கத்தை சிறிதே மாற்றி உத்தரவிட்டுள்ளார் தலைமை.


Jysenn
ஆக 23, 2024 09:51

அது ஏன் "பரிதாப" பலி?


Duruvesan
ஆக 23, 2024 09:44

ஆக வில்லனுக்கு வில்லன், பாம்புக்கு பால் ஊத்தி வளர்த்தார்களாம், அது கொத்திடுச்சி


M Ramachandran
ஆக 23, 2024 09:03

வினை அதன் செயலாற்றுகிறது


Kumar Kumzi
ஆக 23, 2024 08:53

வெள்ளிக்கிழமை என்றாலே மூர்க்க காட்டேரிகளுக்கு கொண்டாட்டம் தான்


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ