உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் மோதல் முற்றியது: காபூல் மீது பாக்., விமானப்படை குண்டு வீச்சு

பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் மோதல் முற்றியது: காபூல் மீது பாக்., விமானப்படை குண்டு வீச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பாகிஸ்தானிய தலிபான் அமைப்பினரை குறிவைத்து பாகிஸ்தான் விமான படையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ம் ஆண்டு, அமெரிக்க படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து, அங்கு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதையடுத்து அங்கு தலிபான்கள் பல்வேறு கட்டுப்பாடு களை விதித்து வருகின்றனர். இந்த சூழலில், காபூலில் உள்ள பாகிஸ்தானிய தலிபான் அமைப்பினரை குறிவைத்து பாகிஸ்தான் விமான படையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த தாக்குதலுக்கு அமெரிக்க ராணுவம் உதவி செய்துள்ளது என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. காபூலில் இரண்டு சக்திவாய்ந்த குண்டு வெடிப்புச் சத்தங்கள் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நிகழ்ந்தது. நகரின் வான்வெளியில் ஒரு போர் விமானத்தின் சத்தம் கேட்டதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். கிழக்கு காபூலில் உள்ள பாகிஸ்தானிய தலிபான் அமைப்பு தலைவர் நூர் வாலி மெஹ்சூத்தை குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என்று உயர்மட்ட புலனாய்வு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது நூர் வாலி மெஹ்சுத் பாதுகாப்பாக இருக்கிறார். இருப்பினும் அவரது மகன் தாக்குதலில் கொல்லப்பட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமிர்கான் முட்டாகி, எட்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள நேரத்தில், இந்த சம்பவம் நடந்துள்ளது. ஏற்கனவே, பாகிஸ்தானுக்கும், தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் மேலும் பதற்றமான சூழலை உருவாக்கும் என சர்வதேச அரசியல் வல்லுநர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Anand
அக் 10, 2025 11:00

அமெரிக்கா அழிந்தால் உலகம்


ASIATIC RAMESH
அக் 10, 2025 10:52

அனைத்து போர்களுக்கும் பின்னணியில் இந்த பேரிக்காய் நாடுதான் இருக்கும். பின்னர் அதுவே முடிவுக்கு கொண்டுவந்து நோபல் கேட்கும்.....


Ramesh Sargam
அக் 10, 2025 10:48

டிரம்புக்கு நோபல் பரிசு கிடைக்கும் நேரத்தில் மீண்டும் ஒரே போரா? ஏம்பா இப்படி சதி செய்கிறீர்கள்.


ஜெகதீசன்
அக் 10, 2025 10:39

தீவிரவாதிகள் எங்கு இருந்தாலும் அழிக்கப்பட வேண்டியவர்களே. இதற்கு அமெரிக்க நிர்ப்பந்தமே காரணமாக இருக்கும்.


சமீபத்திய செய்தி