உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் அப்பாவி மக்கள் 10 பேரை கொன்ற பாக்., ராணுவம்

பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் அப்பாவி மக்கள் 10 பேரை கொன்ற பாக்., ராணுவம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையின் போது அப்பாவி மக்கள் 10 பேர் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தப்படும் என பாகிஸ்தான் கூறியுள்ளது.பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. அவர்களை கட்டுப்படுத்துவதற்காக ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hi8ipcwb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் அந்நாட்டின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் கட்லாங் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு வந்தவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் சிலருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.இச்சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து உள்ள பாகிஸ்தான் ராணுவத்தினர், இச்சம்பவம் குறித்து விசாரிக்கப்படும் எனக்கூறியுள்ளது. மேலும், இத்தாக்குதலில் பயங்கரவாதிகள் பலர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ராமகிருஷ்ணன்
மார் 31, 2025 12:39

அவர்களை எவ்வாறு வேறுபடுத்தி பார்ப்பது


கண்ணன்
மார் 31, 2025 10:10

ஒருவர்கூட உயிருடன் இருக்கக்கூடாது அதற்காகத்தான் அங்கு ராணுவம், தீவிரவாதிகள் மற்றும் மக்கள் உள்ளனர்


Appa V
மார் 30, 2025 18:54

பாகிஸ்தானிய ஷாபாஸ் ஷெரீப் அரசாங்கம் ராணுவ நடவடிக்கைகளை கண்டு கொள்வதில்லை ..இம்ரான் தனியாக குடைச்சல் தருகிறார் .TTP தனியாக குடைச்சல் தருகிறது...விரைவில் பாக்கிஸ்தான் சிதறும் வாய்ப்பு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை