உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போரில் வெற்றி பெற்றதாக பாக்., தம்பட்டம்; ராணுவத்துக்கு நன்றி என கொண்டாட்டம்

போரில் வெற்றி பெற்றதாக பாக்., தம்பட்டம்; ராணுவத்துக்கு நன்றி என கொண்டாட்டம்

இஸ்லாமாபாத் : இரு நாடுகளுக்கு இடையே தற்காலிக போர் நிறுத்தம் மட்டுமே அறிவிக்கப்பட்ட நிலையில், போரில் வெற்றி பெற்றதாக கூறி, 'ராணுவத்துக்கு நன்றி தெரிவிக்கும் தினம்' என்ற பெயரில், பாகிஸ்தான் தம்பட்டம் அடித்து நேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டது.ஜம்மு - -காஷ்மீரின் பஹல்காமில், 26 பேரை பாக்., பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இதற்கு பழிவாங்கும் விதமாக, 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற ராணுவ நடவடிக்கையை துவங்கிய நம் நாடு, பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை தகர்த்தது; 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, இந்தியாவுடன் பாக்., ராணுவம் மோதலில் ஈடுபட்டதால், இரு தரப்பிலும் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல் தொடர்ந்தது. இந்தியா மீதான தாக்குதலுக்கு, 'இரும்பு சுவர்' என்ற பொருள்படும் வகையில் பாக்., பெயர் சூட்டியது. மூன்று நாட்கள் நீடித்த இந்த தாக்குதலில், பாக்.,கில் இருந்து நீண்ட தொலைவு ஏவுகணைகள் ஏவப்பட்ட ஆறு முக்கிய விமானப்படை தளங்கள் மற்றும் இரண்டு ரேடார் மையங்களை நம் படையினர் நேற்று முன்தினம் காலையில் தகர்த்தனர். இதையடுத்து, பிற்பகலிலேயே போரை நிறுத்த பாக்., இறங்கி வந்தது. இதையடுத்து, தற்காலிக போர் நிறுத்தத்துக்கு இந்தியாவும் ஒப்புக்கொண்டது. ஆனால், இந்த போரில் வெற்றி பெற்று விட்டதாக பாக்., கூறி வருகிறது. அந்நாட்டு அரசு வானொலியான 'ரேடியோ பாகிஸ்தான்' வாயிலாக பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் செய்தி வாசிக்கப்பட்டது. அதில், 'இந்தியாவின் ஆக்கிரமிப்புக்கு ஆப்பரேஷன் இரும்புச் சுவர் வாயிலாக தகுந்த பதிலடி கொடுத்த ராணுவத்துக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நன்றி தினம், நாடு முழுதும் மே 11ல் கொண்டாட பிரதமர் ஷெரிப் அழைப்பு விடுத்துள்ளார். கடவுளுக்கும் பாக்., ராணுவத்தின் இணையில்லா துணிச்சலுக்கும் நன்றி செலுத்துவதோடு, போரில் உயிரிழந்தவர்களுக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்தும்படி, மத குருமார்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்' என கூறப்பட்டது. இதன்படி, போரில் வெற்றி பெற்றதாக கூறி, பாகிஸ்தானில் நேற்று கொண்டாட்டங்கள் நடந்தன. பாக்.,கின் பஞ்சாப், சிந்து உள்ளிட்ட கிழக்கு பகுதியில் உள்ள மாகாணங்களில் பாக்., கொடிகளை ஏந்தியபடி பலர் வீதிகளில் சென்றனர். சிந்து மாகாணத்தில் உள்ள ஹைதராபாதில் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். போர் நிறுத்த அறிவிப்பையே, வெற்றி பெற்றதாக கொண்டாடி வரும் பாக்.,கின் செயல், உலக நாடுகளால் வித்தியாசமாக பார்க்கப்படுகிறது.

அமைதி பேச்சுவார்த்தை

போர் நிறுத்தம் தொடர்பாக, அந்நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், “இந்தியா - பாக்., இடையிலான நீண்டகால பிரச்னைகளான நீர்வளப் பகிர்வு, காஷ்மீர் பிரச்னை உள்ளிட்டவற்றை தீர்ப்பதற்கு, அமைதி பேச்சுக்கான வழியை ஏற்க வேண்டும். பிராந்திய நலனுக்காக இந்தியாவுடன் ஏற்பட்ட புரிந்துணர்வை பாக்., நேர்மறையாக அணுகும். இக்கட்டான தருணத்தில் துணை நின்ற, நம்பகமான நண்பரான சீனாவுக்கு நன்றி தெரிவிக்கிறேன். மேலும், அமெரிக்கா, பிரிட்டன், துருக்கி, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரெட் உள்ளிட்ட நாடுகளின் தலைமைகளுக்கும் நன்றி,” என கூறினார். இதுபோல, பாக்., ராணுவ அமைச்சர் க்வாஜா ஆசிப் கூறுகையில், “போர் நிறுத்தம் வாயிலாக அமைதி பேச்சுக்கான பாதை திறந்ததாக கருதுகிறோம். எனவே, மூன்று முக்கிய பிரச்னைகளான காஷ்மீர், பயங்கரவாதம், சிந்து நதிநீர் ஒப்பந்தம் ஆகியவை குறித்து, எதிர்கால பேச்சின்போது விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

Durai
மே 14, 2025 09:04

Yes


V SURESH
மே 13, 2025 17:58

என்ன வேண்டுமானாலும் கொண்டாடட்டும், 50000 கோடி ரூபாய் இழப்பு பாகிஸ்தானுக்கு. புதிய கடன் 8000 கோடி ரூபாய்


Ganapathi Amir
மே 13, 2025 14:21

அவர்கள் கொல்லப்படாமல் உயிர் வாழ்கிறார்கள் அல்லவா..? அதுவே அவர்களுக்கு பெரிய வெற்றிதான்..


Sivagiri
மே 12, 2025 22:50

ஒருவகையில் சரிதான் . பாகிஸ்தான் தனது ராணுவ வீரர்களையோ, பொதுமக்களையோ, இந்தியாவின் எதிரிகளாக ஆக்காமல், இந்தியாவின் தாக்குதல்களுக்கு ஆளாகாமல், டெரரிஸ்டுகளை கூலிக்கு ஏவி விட்டு , அனைத்து பழியையும் டெரரிஸ்ட் மேல் வருமாறு - தந்திரமாக நாடகம் ஆடி தன் நோக்கங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது, ஆனால், இதன் மூலம் நமக்கு, பொதுமக்கள், மற்றும் ராணுவ வீரர்கள் இழப்பு, பொது சொத்துக்கள் சேதம் ஏராளம் - ராணுவ செலவுகள் ஏராளம், நமது மக்களின் கடுமையான உழைப்பினால் சேர்த்த வரிப் பணம் - போர் தளவாடங்கள் வாங்க, மற்றும் பயங்கரவாத தடுப்பு - மற்றும் ராணுவ நடவடிக்களுக்கு, செலவிட வேண்டியதாகி விட்டது . . . அதோடு உள்நாட்டில் பல குழப்பங்கள், இன - மத மோதல்கள் - அரசியல் விளையாட்டுகள் - எதிரி பெரியவனா சிறியவனோ - நீண்ட காலத்துக்கு விட்டு வைப்பது - நாமே நம்மை தாக்கிக் கொண்டு தற்கொலை செய்வதற்கு சமம் . . .


Rathna
மே 12, 2025 21:09

ஜின்னாஹ்வின் பொய்யால் கட்டமைக்கப்பட்ட ஒரு நாடு எப்படி இருக்கும். தீவிரவாதிகளை மற்றும் கழுதைகளின் மட்டும் ஏற்றுமதி செய்யும் ஒரே நாடு.


Arun Raghavan
மே 13, 2025 01:29

Well said. Only four legged or TWO LEGGED ... also. Pathetic useless terrorist country.


MUTHU
மே 12, 2025 20:19

பொம்பளை கத்துகின்றதை பாருங்கள். இஸ்ரேல் இவர்களை நாகரீகமற்றவர்கள் என்று கூறியது சரியே.


ramesh
மே 12, 2025 20:19

நாம் டிரம்ப் கேட்டு கொண்டதால் தான் போர் நிறுத்தம் அறிவித்தது மிக பெரிய தவறு .தரை படையை உள்ளே அனுப்பி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிடித்து இருக்க வேண்டும் . அதுவரையில் போர்நிறுத்தம் நடந்து இருக்க கூடாது .அதை கைப்பற்றி இருந்தால் அங்கே தீவிரவாதிகளுக்கு முகாம் போட இடம் இருந்து இருக்காது . அந்த அந்த நாட்டு மக்கள் அவர்கள் ஆட்சியாளர்கள் சொல்லுவதை தான் நம்பும்


Yes your honor
மே 12, 2025 17:58

பொய்சொல்லியே பழக்கப்பட்டவர்களுக்கு இதெல்லாம் மிகவும் சகஜமானதாகத் தான் இருக்கும். மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை அறிவித்தபொழுது, தமிழக முதல்வர்கூட அதற்கு தனக்குத் தானே வெற்றி வெற்றி என்று கூறவில்லையா? ஈழத் தமிழர்கள் போரில் மடிந்து கொண்டு இருந்தபொழுது, அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி, தன்னைச் சுற்றி ஏர் கூலர்களை வைத்துக் கொண்டு, ஒரு அரைமணிநேரம் படுத்து ரெஸ்ட் எடுத்துவிட்டு, தனக்குத் தானே வெற்றி வெற்றி என்று கூறவில்லையா?, இதை சோ அவர்கள் கூட பலமாக கிண்டல் செய்திருப்பார், அதுபோலத் தான் அனைத்துமே. திராவிடம் தமிழத்தில் உருட்டினால், மூர்க்கம் பாக்கிஸ்தானில் உருட்டுகிறது. நண்பர்களுக்குள் இதெல்லாம் சகஜம் தானே.


Narayanan
மே 12, 2025 16:58

அவர்கள் மறைமுகமாக நமது ராணுவத்திற்கு நன்றி சொல்கிறார்கள் . கொல்லாமல்/ நாட்டை அழிக்காமல் விட்டீர்களே என்று. இங்கே நமது ஸ்டாலின் பேரணி நடத்தியதால் பாகிஸ்தான் பயந்து போரை நிறுத்தியதாக கருணாஸ் காமடி பண்ணிக்கொண்டு இருக்கிறார் .


Madurai Veeran
மே 13, 2025 01:56

ஸ்டாலின் யாரு கருணாஸ் யாரு


Sudhakar NJ
மே 12, 2025 16:40

இந்த தற்காலிக போர் நிறுத்தம் இன்னும் ஒரு இரண்டு நாட்களுக்கு தள்ளி வைத்திருந்தால் அப்பொழுது தெரிந்து இருக்கும், யார் உண்மையாக வெற்றி பெற்றார்கள் என்று.


சமீபத்திய செய்தி