உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆப்கானிஸ்தான் பேச்சு நடத்தும் நிலையில் ஏவுகணை ஏவியது பாக்.,

ஆப்கானிஸ்தான் பேச்சு நடத்தும் நிலையில் ஏவுகணை ஏவியது பாக்.,

காபூல்: ஆப்கானிஸ்தானுடன் மூன்றாம் கட்ட அமைதி பேச்சு நடந்து வரும் நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நேற்று பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தான், மறுபக்கத்தில் ஆப்கானிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. ஆப்கானிஸ்தான் நிர்வாகத்தை, 2021ல் தலிபான் பயங்கரவாத அமைப்பை கைப்பற்றியது. அப்போது அதற்கு பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள தெஹ்ரிக் - இ - தலிபான் பாகிஸ்தான் எனப்படும் பாகிஸ்தான் தலிபான் பயங்கரவாத அமைப்பினர், பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆப்கானிஸ்தானில் உள்ள அந்த அமைப்பின் தலைவர்கள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து இது, பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையேயான மோதலாக வெடித்தது. தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வந்தாலும், முழுமையான போர் நிறுத்தம் தொடர்பாக இரு தரப்பும் இரண்டு கட்டங்களாக ஏற்கனவே பேச்சு நடத்தின. அவை தோல்வியில் முடிந்த நிலையில் நேற்று துருக்கியின் இஸ்தான்புல்லில் மூன்றாம் கட்ட பேச்சு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் தரப்பில் இருந்து ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், தொடர்ந்து, 15 நிமிடங்கள் இது நீடித்ததாகவும், தலிபான் அமைப்பு நேற்று கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ