வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அணு ஆயுதம் உங்களைக் காப்பாத்திருமா அடிப்படைவாதிகளே ??
பயலுக கிலி பிடித்து திரியுரானுங்க.
இஸ்லாமாபாத்: ''இந்திய ராணுவம் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் எங்கள் படைகளை தயார் நிலையில் வைத்துள்ளோம்,'' என, பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் க்வாஜா முகமது ஆசிப் நேற்று தெரிவித்தார்.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாக்., இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4gvu2tdt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், பாக்., ராணுவ அமைச்சர் க்வாஜா முகமது ஆசிப் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:இந்திய ராணுவம் எந்தநேரத்திலும் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் எங்கள் படைகளை வலுவூட்டி தயார் நிலையில் வைத்துள்ளோம். போர் உருவாகும் சூழல் இருப்பதை அரசிடம் விளக்கி உள்ளோம். 2 - 4 நாட்களில் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது. எங்களுக்கு நேரடி அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம். எந்தவிதமான சூழலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
அணு ஆயுதம் உங்களைக் காப்பாத்திருமா அடிப்படைவாதிகளே ??
பயலுக கிலி பிடித்து திரியுரானுங்க.