உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பட்டும் திருந்தாத பாகிஸ்தான்: இந்தியா தாக்கி அழித்த பயங்கரவாத முகாம்களை மீண்டும் அமைப்பது கண்டுபிடிப்பு

பட்டும் திருந்தாத பாகிஸ்தான்: இந்தியா தாக்கி அழித்த பயங்கரவாத முகாம்களை மீண்டும் அமைப்பது கண்டுபிடிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்கி அழிக்கப்பட்ட பயங்கரவாதிகளின் முகாம்களை பாகிஸ்தான் அரசு மீண்டும் கட்டமைக்க தொடங்கியிருப்பது உலக நாடுகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்த இந்திய ராணுவம், 100 பயங்கரவாதிகளை கொன்று குவித்தது. இந்தத் தாக்குதலில், விமான கடத்தல், புல்வாமா வெடிகுண்டு தாக்குதல் போன்ற பயங்கரவாத சம்பவங்களுக்கு முக்கிய மூளையாக செயல்பட்ட யூசுப் அசார், அப்துல் ரவூப், முதாசிர் அகமது ஆகியோரும் கொல்லப்பட்டனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ogvniz7f&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த தாக்குதலை தொடர்ந்து இந்திய எல்லைகள் மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியது. இதனை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது. மேலும், பாகிஸ்தானுக்குள் நுழைந்து அந்நாட்டின் விமானப்படை தளங்களை இந்திய விமானப் படை சேதப்படுத்தியது. பயங்கரவாத முகாம்களை தவிர, பாகிஸ்தான் அரசின் வேறு எந்த கட்டமைப்பையும் நாம் தாக்கவில்லை என்று இந்திய ராணுவம் கூறியுள்ளது. அதுமட்டுமில்லாமல், இந்த ஆபரேஷனின் போது தாக்கி அழிக்கப்பட்ட பயங்கரவாத முகாம்களின் செயற்கைகோள் படங்களை ராணுவம் தரப்பில் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதையும், பயங்கரவாத செயல்களை பாகிஸ்தான் ஊக்குவிப்பதாக உலக நாடுகளிடையே இந்தியா எடுத்துரைத்து வருகிறது.இந்த நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்கி அழிக்கப்பட்ட பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்கள், ஆயுத ஏவுதளங்களை பாகிஸ்தான் அரசு மீண்டும் கட்டமைக்க தொடங்கி இருப்பது உலக நாடுகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அந்நாட்டின் உளவுத்துறையும் இணைந்து இந்த பயங்கரவாத உள்கட்டமைப்புகளை மீண்டும் உருவாக்கும் பணியை மேற்கொண்டு வருவதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

ராமகிருஷ்ணன்
ஜூன் 29, 2025 08:59

பாகிஸ்தானின் அரசு வேலை தானே தீவிரவாதமும் பயங்கரவாதமும், அதற்கு செலவழிக்காமல் வேறெதுக்கு செலவு செய்வது, மக்கள் பிச்சைகாரர்களாக இருந்தாலும் பயங்கரவாதம் தான் முக்கியம்


Ramesh Sargam
ஜூன் 28, 2025 20:10

அப்ப Operation Sindoor Part II ready.


nagendhiran
ஜூன் 28, 2025 19:39

நாயை குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் அது வாலை குழைச்சிட்டு எதையோ திண்ணதான் போகும்.....


Pandi Muni
ஜூன் 28, 2025 20:13

அது போர்க்கிஸ்தானாச்சே நாயில்ல பன்றி


Iyer
ஜூன் 28, 2025 19:24

பாகிஸ்தானை நாம் பல்முனை தாக்குதல் செய்து அழிக்கவேண்டும். பலூசிஸ்தான் மக்களை தூண்டிவிட்டு பாக்கிஸ்தான் ராணுவவீரர்களை கொள்ளவேண்டும்.


Manaimaran
ஜூன் 28, 2025 18:44

முழையிலேயே கிள்ளி எறி


Rajarajan
ஜூன் 28, 2025 17:22

கட்டத்துறைக்கு கட்டம் சரியில்ல. நம்மகூட மோதறதே பொழப்பா போச்சு. மறுபடியும் வாங்கி கட்டிக்க போறாங்க. அடியாத மாடு படியாது.


GMM
ஜூன் 28, 2025 17:13

கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. தீவிர வாதிகளுக்கு உலகம் முழுவதும் உபசரிப்பு. பணம், பாஸ்போட், விசா, குடியுரிமை எதுவும் தேவையில்லை. எப்போதும் இயங்கி கொண்டு இருப்பர். இந்தியா, அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுக்கு தீவிரவாத இயக்கத்தை நிறுத்த கிடைக்க வாய்ப்பு தவறிவிட்டது. எதிரிகள் இல்லாத போதும் கூட, சீனா ரஷ்யா மற்றும் வடகொரிய தன் நாட்டை கவனிப்பது இல்லை. பட்டு ஒருபோதும் பாகிஸ்தான், வங்கதேச, காசா ஆக்கிரமிப்பாளர்கள் திருந்த மாட்டார்கள். கட்டாய பாட பிரிவு அப்படி.


Kumar Kumzi
ஜூன் 28, 2025 16:55

மூர்க்க காட்டேரி நாட்டை ஒழித்துக்கட்ட வேண்டும்


ديفيد رافائيل
ஜூன் 28, 2025 16:55

அடுத்தவங்க பேச்சை கேட்டு பார் stop பண்ணா இப்படி தான். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுதும் கைப்பற்றும் வரை pakistan ஐ நாசமாக்கியிருக்கனும்.


Anand
ஜூன் 28, 2025 16:44

ஐஎம்எப் -ல் உடனடியாக நிதி பெற்றது எதற்காம்? இவனுங்களை சொல்லி குற்றமில்லை, இவனுங்களுக்கு துணைபோகும் அமெரிக்கா மீது தான் அணுகுண்டு போடணும்.... என்றாவது ஒரு நாள் அது நடக்கும்.


சமீபத்திய செய்தி