உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அதிருப்தியா? அச்சமா? பாகிஸ்தான் ராணுவத்தில் குழப்பம்; வீரர்கள் பலர் ராஜினாமா

அதிருப்தியா? அச்சமா? பாகிஸ்தான் ராணுவத்தில் குழப்பம்; வீரர்கள் பலர் ராஜினாமா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: இந்தியா - பாகிஸ்தான் இடையில் பதட்டம் ஏற்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தில் அதிகாரிகள் உள்பட பல ராணுவ வீரர்கள் ராஜினாமா கடிதங்களை ராணுவ தளபதிக்கு அனுப்பி உள்ளனர். இது பாக்., ராணுவத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=21pz74d3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0காஷ்மீரில் பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கையால் எல்லையில் பதட்டம் நிலவுகிறது. மேலும் இந்திய எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல் அதிகரித்துள்ளது. இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை குவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை நடந்து வருகிறது. இரு நாடுகள் இடையே போர் ஏற்படுமோ என்ற சூழல் உருவாகி உள்ளது.

பல்வேறு காரணங்கள்

இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தில் பல அதிகாரிகள் , வீரர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதில் 100 க்கும் மேற்பட்டோர் உயர் பொறுப்பில் உள்ளவர்கள், 500 ராணுவ வீரர்கள் தங்களின் ராஜினாமா கடிதங்களை ராணுவ தளபதி செய்யது ஹசீம் முனீருக்கு அனுப்பி உள்ளனர். ராணுவ தளபதிகளின் முன்னுக்குப்பின் முரணான உத்தரவுகள், மனஅழுத்தம், மற்றும் பல்வேறு காரணங்களால் ராணுவ வீரர்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான் இடையில் பதட்டம் ஏற்படுத்துவதை சில வீரர்கள் விரும்பவில்லை. ராணுவத் தளபதிகள் தெளிவான வழிமுறைகளை வழங்கத் தவறிவிட்டனர், இது குழப்பத்தையும் , பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று சிலர் கூறுகின்றனர். வீரர்களின் ராஜினாமாவால் பாகிஸ்தான் ராணுவ வட்டாரத்தில் ஒரு அசாதாரண சூழலை ஏற்படுத்தி உள்ளது. லெப்டினன்ட் ஜெனரல் உமர் அகமது புகாரி தலைமையில் இயங்கும் 11வது படைப்பிரிவு, இந்திய-பாகிஸ்தான் எல்லையின் பாதுகாப்பிற்கு முக்கிய பொறுப்பாக விளங்குகிறது. புகாரி 2024 முதல் இந்தப் படையை வழிநடத்தி வருகிறார். இந்த மோசமான நிலைமை குறித்து லெப்டினன்ட் ஜெனரல் புகாரி ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீருக்குத் தெரிவித்தார்.

ராணுவ தலைமை கடும் எச்சரிக்கை

இதற்கு ராணுவத் தலைமையகம் கடுமையாக எச்சரித்துள்ளது. ராஜினாமா செய்யும் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நெருக்கடியான நேரத்தில் ராஜினாமாக்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும், இது இராணுவ விதிகளை மீறுவதாகும் என்றும் ராணுவ தளபதி அலுவலக தரப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

VENKATESAN
ஏப் 28, 2025 18:27

ராணுவ கோழைகளே ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் எங்காவது ஓடிவிடுங்கள்.


Ramasamy vs
ஏப் 28, 2025 18:01

தவறான தலைமை வழிகாட்டுவதால் பாக்கிஸ்தான் அழிவு ஆரம்பம்


sankaranarayanan
ஏப் 28, 2025 17:43

பாகிஸ்தான் ராணுவத்தில் பல அதிகாரிகள் , வீரர்கள் ராஜினமா செய்துள்ளனர். இதில் 100 க்கும் மேற்பட்டோர் உயர் பொறுப்பில் உள்ளவர்கள், 500 ராணுவ வீரர்கள் தங்களின் ராஜினாமா கடிதங்களை ராணுவ தளபதி செய்யது ஹசீம் முனீருக்கு அனுப்பி உள்ளனர்.அவனவன் வாழ்க்கையில் பொழைச்சா போதும் என்றே இருக்கிறான் இதிலே ராணுவம் சேர்ந்து உயிர் துறக்க வேண்டுமா என்ற கேள்வி அங்கே இப்போது நிகழ்கிறது நாவடக்கம் இல்லாத பாகிஸ்தான் தளபதியை அந்நாட்டு அரசு உடனே நீக்காவிடில் பாகிஸ்தானுக்கு பெரும் பாதிப்பு நஷ்டம் விரைவில் இவனாலேயே வந்து சேரும் பிறகு வருந்தி பயனில்லை


Srinivasan Narayanan
ஏப் 28, 2025 17:19

இதுக்கும் திராவிட மாடலுக்கும் என்னடா சம்பந்தம். நல்லா இருக்கும் உங்க தேச பக்தி.


TRE
ஏப் 28, 2025 16:39

இந்தியாவில் உள்ள மோடி, அமித்ஷா, ராஜ்நாத் என எல்லாறையும் அனுப்பவும்....


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஏப் 28, 2025 19:00

மூர்க்ஸ் சொந்த பெயர் உள்ளவங்க போவாங்க, நீ பொத்திட்டு இரு


Yes your honor
ஏப் 28, 2025 15:50

பாகிஸ்தானிடம் இந்தியாவிற்கு எதிரான ஒரு போரை நடத்தும் அளவிற்கு தெம்பு இல்லை. அவர்களின் எண்ணெய் கையிருப்பு, அன்னியச் செலாவணி கையிருப்பு, உணவு தானியக் கையிருப்பு என்று அணைத்து வளங்களும் திராவிட மாடல் போன்று பரிதாபமான நிலையில் உள்ளது. ராணுவ வீரர்கள் இறந்தால் அவர்களின் குடும்பங்களுக்கு எந்த ஒரு பலனும் கிடைக்க வாய்ப்பில்லை. ஏனெனில், சட்டியில் ஒன்றும் இல்லை. இதை புரிந்துகொண்டுள்ள வீரர்கள் ராஜினாமா செய்து வருகிறார்கள்.


sathu
ஏப் 28, 2025 15:13

தமிழ் நாட்டில் உள்ள சீமார், தளபபாதி, பால்டாயில், அப்பு என எல்லாறையும் அனுப்பவும்.... தமிழ் நாடாவது உருப்படும்.


vijay,covai
ஏப் 28, 2025 14:44

போர் நடந்தால் உயிர் போய்விடும் என்று தெரியாதா ?


Rajah
ஏப் 28, 2025 14:06

இந்தப் பிரச்சனையைத் தீர்த்து ராணுவ வீரர்களுக்கு தைரியமூட்டி உற்சாகப்படுத்த தமிழத்தில் பலர் இருக்கின்றார்கள். பாகிஸ்தான் ராணுவத்தில் சேரவும் தயாராக இருக்கின்றார்கள். பாகிஸ்தானும் சேர்ந்துதான் திராவிடம் என்பதை மறந்து விடாதீர்கள்.


R. SUKUMAR CHEZHIAN
ஏப் 28, 2025 13:31

போர் வந்ததும் எங்கள் பாரத நாட்டிடம் சரன் அடையுங்கள் குறைந்து உங்கள் உயிருக்கு உத்திரவாதம், இல்லை என்றால் வெறி பிடித்த ஜிகாதிகளை போல அடிபட்டு சாக வேண்டியதுதான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை