உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா போர் தொடுக்கும் அச்சம்: கடும் சரிவை சந்தித்தது பாக்., பங்குச்சந்தை!

இந்தியா போர் தொடுக்கும் அச்சம்: கடும் சரிவை சந்தித்தது பாக்., பங்குச்சந்தை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் மோதல் அதிகரிக்கும் அபாயம் காரணமாக, பாகிஸ்தான் பங்குச் சந்தை 3,500 புள்ளிகளுக்கு சரிவை சந்தித்தது.கடந்த ஏப்.22ல் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள், சுற்றுலாப்பயணிகள் மீது தாக்குதல் நடத்தினர். அதற்கு தக்க பதிலடி தருவதற்கு இந்தியா தயாராகி வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் தகவல் அமைச்சர் அட்டா தரார், இந்தியா 24 முதல் 36 மணி நேரத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளது என்று இன்று கூறியிருந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=sgy2p811&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நிலை காரணமாக பாகிஸ்தான் பங்குச்சந்தை இன்று பெரும் சரிவை எதிர்கொண்டது.பாகிஸ்தான் பங்குசந்தை புள்ளி விபரங்களின் படி,பி.எஸ்.எக்ஸ் 3,500 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது.பங்குகளின் விலை நாள் முழுவதும் கீழ்நோக்கிய போக்கைத் தொடர்ந்தது, இறுதியாக குறியீட்டெண் 111,326.57 இல் முடிவடைந்தது. மொத்தம் 3,545.61 புள்ளிகள் அல்லது 3.09 சதவீதம் சரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

pixidigit
மே 12, 2025 13:07

கெட்ட கேட்டுக்கு பங்கு சந்தை ஒன்னு தா குறைச்சல்


Yes your honor
மே 01, 2025 18:14

போர் போர் என்று கூக்குரலிடுவதால் ஒன்றும் பெரிய பயனில்லை. ஒரு போர் என்று ஆரம்பித்துவிட்டால் அது வருடக் கணக்கில் கூட தொடரலாம். பொருளாதாரம், நாட்டின் முன்னேற்றம் என்று அனைத்தையும் பலியிட வேண்டிய நிலைமைகூட வரலாம். அதனால் தான் யாருக்கும் ஒரு அரை விடும் முன்பு சிறிது யோசிக்க வேண்டியதாகிறது. தண்ணீரை நிறுத்தியாகிவிட்டது. இதேபோன்று பதட்டம் இன்னும் சிறிது நாட்களுக்கு பக்கீஸ்தானில் தொடர்ந்தால், இன்று பங்குச் சந்தை, நாளை ஜிடிபி, மறுநாள் தண்ணீர் இல்லாததால் உள்நாட்டில் கலகம் என்று தினம் தினம் அணுஅணுவாக பாக்கிஸ்தான் சிதைய ஆரம்பிக்கும். பலசாலி சிறிது காலம் பசியாக இருந்தாலும் உயிர்வாழ்வான், நோயாளி? உலகின் முதன்மை நோயாளியான பாக்கிஸ்தான் மெல்ல இறக்க ஆரம்பித்து உள்ளது.


spr
ஏப் 30, 2025 23:36

நேரடியாகப் போர் என்பதனை விட ஒசாமா பின் லேடனைச் சுட்டுக் கொன்றாற் போல இந்த பயங்கர வாதிகளையும் அவர்களைத் தூண்டி விட்டவர்களையம் போட்டுத் தள்ள வேண்டும் இஸ்ரேலை உதவிக்கு அழைக்கலாம் பாகிஸ்தான் மக்களிடம் உங்களுக்கும் எங்களுக்கும் பகையில்லை ஆனால் உங்கள் நாட்டுத் தலைவர்களால் வழிநடத்தப்படும் பயங்கரவாதிகள் எங்கள் நாட்டு மக்களைக் கொன்றதால் அவர்களே எங்கள் எதிரி எனவே நீங்கள் பயங்கர வாதத்திற்கு எதிரானவர்கள் என்று காட்டிக் கொள்ள அவர்களைக் காட்டிக் கொடுங்கள் என்று பாகிஸ்தான் மக்களையே இதற்கு உதவ கோரிக்கை வைக்கலாம் பல நல்லவர்கள் இதற்கு உதவலாம்


thehindu
ஏப் 30, 2025 23:35

பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆப்கானிஸ்தானை காரணம் காட்டி தங்கள் காலரை உயர்த்திக்கொண்டு நாட்டுமக்களுக்கு எதிராக போர் தொடுக்கும் இந்து மதவாத கும்பல்


pixidigit
மே 12, 2025 13:17

அட ஸ்லீப்பர் செல்லே


வாய்மையே வெல்லும்
ஏப் 30, 2025 21:15

அடிலெய்டு பொய்யாச்சாமி பாக்கிஸ்தான் வளமான நாடு என கருதி அவரும் அவரை சார்ந்த நபர்கள் அனேகர் பாகிஸ்தான் பங்குச்சந்தையில் பணம் இழந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது


Ramesh Sargam
ஏப் 30, 2025 21:05

அங்கே சாப்பாட்டுக்கே வழி இல்லையாம். இதில் பங்குச்சந்தையாம்...


தாமரை மலர்கிறது
ஏப் 30, 2025 20:50

இந்தியா பாகிஸ்தானுடன் நேரடியாக மோத தேவை இல்லை. ஆப்கானிஸ்தானை உசுப்பேத்தி விட்டாலே போதும். அவர்களுக்கு தேவையான ஆயுதங்களை இந்தியா சப்ளை செய்யும். பாகிஸ்தானுக்கு வேண்டிய குடைச்சலை பலுசிஸ்தான் மற்றும் ஆப்கான் வீரர்கள் கொடுப்பார்கள். அமெரிக்கா உக்ரைனை உசுப்பேத்தி, ரசியாவுடன் சண்டை போடுகிறது. பிலிப்பைன் மற்றும் தைவானை உசுப்பிவிட்டு சீனாவுடன் போடுகிறது. நாமும் இதே ஸ்டைல் தான் கடைபிடிக்க போகிறோம்.


pixidigit
மே 12, 2025 13:16

சீனா பாகிஸ்தானை உசுப்பேத்தி விட்டு இந்தியாவோடு சண்டை போட வைத்து ரசிக்கிறது.


Suresh Velan
ஏப் 30, 2025 20:34

ஏங்க பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் பங்கு சந்தை என்று ஒன்று இருக்கிறதா .இவனுக , இன்டர்நேஷனல் லெவெலில் டிசிப்ளின் ஆக ஒர்க் பண்ணவே மாட்டானுகளே , இதெல்லாம் ஒரு நாடு, இதற்கு இப்படிப்பட்ட நியூஸ் தேவையா ?


சமீபத்திய செய்தி