உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாகிஸ்தான் மாணவர் போராட்டம் பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன

பாகிஸ்தான் மாணவர் போராட்டம் பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், கல்லுாரி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக வெளியான தகவலையடுத்து, மாணவர்கள் தொடர் போரட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானில், பஞ்சாப் மாகாணத்தின் லாகூரில் கல்லுாரி மாணவி ஒருவரை, அக்கல்லுாரியின் காவலாளி பாலியல் பலாத்காரம் செய்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது, மாணவர்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.மாகாணம் முழுதும் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 'இதற்கிடையே, கல்லுாரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பரவும் தகவல் வதந்தி என, மாகாண முதல்வர் மரியம் நவாஸ் தெரிவித்துள்ளார். மாணவர்கள் தங்களின் போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.மரியம் நவாஸ் விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்த மாணவர் அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் இது வன்முறையாக மாறியது. அப்போது போலீசார் நடத்திய தடியடியில், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர்.இதற்கிடையே, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்ட 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, பொதுமக்கள் ஒன்றுகூடவும் மாகாண அரசு தடை விதித்துள்ளது.மாணவர்களின் தொடர் போராட்டம் எதிரொலி காரணமாக, பஞ்சாப் மாகாணம் முழுதும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களுக்கும் மூன்று நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது.வங்கதேசத்தில், சமீபத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டம் காரணமாக, ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
அக் 19, 2024 20:08

மமதா இப்படி நினைக்கக்கூடும். அங்கேயும் பாலியல் பலாத்காரமா என்று.


raja
அக் 19, 2024 05:30

எப்படியோ மூர்க்கர்கள் ஒழிந்தால் உலகுக்கு நல்லது...


நிக்கோல்தாம்சன்
அக் 19, 2024 04:38

எங்கே போனாலும் அப்பாவி பெண்களே மீண்டும் மீண்டும் இலக்காவது வேதனைக்குரியது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை