உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிரதமர் மோடியின் உதவியை நாடும் பாகிஸ்தான் பெண்

பிரதமர் மோடியின் உதவியை நாடும் பாகிஸ்தான் பெண்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கணவர் தன்னை கைவிட்டு டில்லியில் இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாகவும், தனக்கு நீதி கிடைக்க பிரதமர் மோடி உதவி செய்ய வேண்டும் என பாகிஸ்தானிய பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.பாகிஸ்தானின் கராச்சி நகரைச் சேர்ந்தவர் நிகிதா. இவருக்கும், அந்நாட்டை சேர்ந்த விக்ரம் என்பவருக்கும், ஹிந்து பாரம்பரிய முறைப்படி கராச்சியில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த பிறகு 2020 பிப்.,26 ல் நிகிதாவை இந்தியாவுக்கு விக்ரம் அழைத்து வந்தார். இவர், நீண்ட கால விசாரவில் மத்திய பிரதேச மாநிலத்தில் வசித்து வருகிறார். அதே ஆண்டு ஜூலை மாதம் விசாவில் பிரச்னை எனக்கூறி, நிகிதாவை அட்டாரி எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு வலுக்கட்டாயமாக அனப்பிவைத்துள்ளார். அதன் பிறகு அவரை , விக்ரம் தொடர்பு கொள்ளவில்லை. தன்னை அழைக்க முயற்சிக்கவில்லை என நிகிதா குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக நிகிதா வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது: என்னை அழைத்துக் கொள்ளும்படி பல முறை விக்ரமிடம் வலியுறுத்தினேன். ஆனால், ஒவ்வொரு முறையும் அவர் மறுத்து வருகிறார்.திருமணம் முடிந்து கணவர் வீட்டிக்கு வந்த போது, மாமியார், மாமனார் உள்ளிட்டோரின் நடவடிக்கைகள் முற்றிலும் மாறின. எனது உறவுப்பெண் ஒருவருடன், விக்ரமுக்கு திருமணத்தை மீறிய உறவு உள்ளது. இதனை மாமனாரிடம் தெரிவித்த போது, ஆண்கள் அப்படி செய்வது வழக்கம். அதில் ஒன்றும் செய்ய முடியாது எனத் தெரிவித்தார்.எனக்கு நீதி கிடைக்காவிட்டால், பெண்கள் அனைவரும் நீதி மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இழந்துவிடுவார்கள். ஏராளமான பெண்கள், திருமணமான பின்பு உடல் மற்றும் மன ரீதியாக பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். அனைவரும் எனக்கு ஆதரவாக நிற்க வேண்டும். எனக்கு நீதி கிடைக்க பிரதமர் உதவி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். விக்ரம் டில்லியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் இரண்டாவது திருமணம் செய்ய முயற்சி செய்வதாக குற்றம்சாட்டியுள்ள நிகிதா, இது குறித்து புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக மபி ஐகோர்ட் அமைத்த சட்ட உதவி மையம் விசாரணை நடத்தியது. விக்ரமுக்கும் அவர் திருமணம் செய்ய உள்ள பெண்ணுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், சமரச முயற்சி தோல்வியடைந்தது.இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில், பாதிக்கப்பட்ட பெண் இந்தியாவைச் சேர்ந்தவர் இல்லை என்பதால், இந்த விவகாரம் பாகிஸ்தான் சட்ட வரம்பில் வருகிறது. விக்ரமை பாகிஸ்தானுக்கு நாடு கடத்த உத்தரவிடும்படி தெரிவித்து இருந்தது.இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனவும், அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் ஆஷிஸ் சிங் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

கரீம் பாய், ஆம்பூர்
டிச 08, 2025 09:54

உலக தலைவன் ஆசிம் முனீர் கிட்ட முறையிடு. அவன் ஆவன செய்வான்


Indhuindian
டிச 08, 2025 07:19

Do not show any sympathy for Pakistan Muslims for everyone of them is trained to be a hater of India and may be to be a terrorist. Do not fall for the crocodile tears they shed for remaining in the country.


Kalyanasundaram Linga Moorthi
டிச 08, 2025 00:45

this is another way of terrorism. if notice the guy name is vikram - how come he is still following Hinduism particularly from pakistan. super drama. may be she is also part of bomb incidents.


Kumar Kumzi
டிச 07, 2025 23:57

அந்த கேடுகெட்டவனின் சொத்துக்களை பறிமுதல் செய்து அந்த பெண்ணுக்கு வழங்க வேண்டும்.. அத்தோடு அப்பெண்ணுக்கு இந்திய அரசாங்கம் விசா வழங்கிடணும்


சிட்டுக்குருவி
டிச 07, 2025 23:24

விசாவில் பிரச்னை எனக்கூறி, நிகிதாவை அட்டாரி எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு வலுக்கட்டாயமாக அனப்பிவைத்துள்ளார்.இது அரசால் நடக்கவில்லை .குடும்பத்தினரால் நடந்தது .இவர் நாட்டைவிட்டு சென்றிருக்கக்கூடாது .விசா பிரச்சனையை இங்கிருந்தே தீர்த்திருக்கவேண்டும் .மறுபடியும் விசா பெற்று இந்தியா வந்து பிரச்சனையை தீர்த்துக்கொள்ளவேண்டும் .ஒரு தவறான எண்ணம் நீதித்துறையிலும் ,காவல்துறையில் நடப்பதாக தெரிகின்றது .எந்த ஒரு மனிதரும் தங்கள் நாட்டில் இல்லாமல் வெளிநாட்டிற்கு சென்று வாழ்ந்தால் அந்த நாட்டு சட்டங்களுக்கே உட்பட்டவராவார் .கிரிமினல் குற்றங்களில் வெளிநாட்டவர் ஈடுபடும்போது நம்நாட்டில் விசாரித்து தண்டனை கொடுப்பதில்லையா ?சிவில் சட்டங்கள் மட்டும் ஏன் வெளிநாட்டவருக்கு பொருந்தாது .? சட்டம் தெரியாதவர்கள் எல்லாம் நாட்டின் சட்டவள்ளுநர்களாக இருப்பதால்தான் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றார்கள் .வெளியுறவுத்துறை இதில் தலையிட்டு ஆவண செய்யவேண்டும் .அந்த பெண்மணிக்கு விசா அளித்து முடிந்தால் அரசு சட்ட உதவி அளித்திடவேண்டும் .


நிமலன்
டிச 07, 2025 22:33

இந்துவாக இருந்தாலும் அந்த நாட்டில் பிறந்து வளர்ந்தாலே அந்த நாட்டின் குணம் வந்துவிடும் போலிருக்கிறது. சரி இதற்கு மோடிஜி அரசு என்ன செய்ய முடியும். இந்த விஷயம் வெட்ட வெளியில் வந்த பிறகு அவனுடன் சந்தோஷமாக வாழ முடியுமா. பேசாமல் அந்த ஆளை விவாகரத்து செய்து விட்டு கிடைக்கும் நஷ்ட ஏட்டில் மறுமணம் செய்து கொள்வது நல்லது.


சமீபத்திய செய்தி