உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இதையெல்லாம் பதக்கம்னு தந்து ஏமாத்துறாங்க பெரியப்பா; ஒலிம்பிக் மானத்தை வாங்கினார் அமெரிக்க வீரர்!

இதையெல்லாம் பதக்கம்னு தந்து ஏமாத்துறாங்க பெரியப்பா; ஒலிம்பிக் மானத்தை வாங்கினார் அமெரிக்க வீரர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: பாரிஸ் ஒலிம்பிக்கில் தமக்கு வழங்கப்பட்ட வெண்கலப்பதக்கம் தரமானதாக இல்லை என்று குற்றச்சாட்டை கூறி உலகை தடதடக்க வைத்து இருக்கிறார் அமெரிக்க வீரர் நைஜா ஹூஸ்டன்.

பதக்க வேட்டை

பெரும் எதிர்பார்ப்பு மற்றும் வரவேற்புகளுக்கு இடையே பாரிசில் தொடங்கிய ஒலிம்பிக் போட்டி நாளையுடன் முடிகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து கலந்து கொண்ட வீரர்கள் போட்டிகளில் சாதனை படைத்து, பதக்க வேட்டை நடத்தியுள்ளனர்.

தரமற்ற பதக்கம்

இந்நிலையில், ஒலிம்பிக்கில் வாகை சூடியவர்களுக்கு அளிக்கப்பட்ட பதக்கங்களில் குறைபாடு இருப்பதாகவும், அவை தரமற்று இருப்பதாகவும் பகீர் குற்றச்சாட்டு வெற்றி பெற்ற வீரர்களிடம் இருந்தே எழும்ப ஆரம்பித்து இருக்கின்றன. கடந்த 29ம் தேதி நடந்த ஸ்கேட் போர்டிங் விளையாட்டில் அமெரிக்காவைச் சேர்ந்த நைஜா ஹூஸ்டன் வெண்கலம் வென்றார்.

இன்ஸ்டா வீடியோ

அவரின் வெற்றியை அந்நாட்டு மக்கள் கொண்டாடியது ஒரு பக்கம் இருக்கும் நிலையில், தான் வாங்கிய வெண்கல பதக்கத்தின் தரம் எப்படி இருக்கிறது ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு கலகலக்க வைத்து இருக்கிறார் ஹூஸ்டன். இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறி இருப்பதாவது;

பொலிவில்லை

பதக்கம் தரமற்று, அதன் பொலிவையும், வண்ணத்தையும் இழந்துவிட்டது. ஒலிம்பிக் பதக்கங்கள் என்றாலே பார்ப்பதற்கே அழகாக, தரமாக இருக்கும். புத்தம் புதியதாக அனைவரையும் கவரும் வண்ணத்தில் காணப்படும்.

நிறம் மாறியது

ஆனால் இம்முறை அளிக்கப்பட்ட பதக்கத்தில் தரம் குறைவு. கைகளில் வைத்திருந்த போது வியர்வையால் நனைந்து வெண்கலப் பூச்சு உதிர்ந்து, அதன் நிறம் மாற ஆரம்பித்துவிட்டது, நாம் எதிர்பார்க்கும் தரம் இந்த பதக்கத்தில் இல்லை என்று கூறி உள்ளார்.

கவலையில்லை

இவர் மட்டுமல்ல... இந்த ஒலிம்பிக்கில் பிரிட்டனுக்கான முதல் பதக்கத்தை பெற்றுத் தந்த நீச்சல் வீராங்கனையுமான ஸ்கார்லெட் மெவ் ஜென்சன் இதே குற்றச்சாட்டை வெளிக்கொணர்ந்து இருக்கிறார். பதக்கம் தரமற்றவையாக இருந்தாலும் அதை பற்றி கவலையில்லை, எப்படி இருந்தாலும் அது ஒரு பதக்கமே என்று தெரிவித்துள்ளார்.

கிளம்பியது பஞ்சாயத்து

போதிய குளிர்சாதன வசதி இல்லை, வீரர்களின் அறைகளில் உருப்படியான ஏற்பாடுகள் இல்லை என நடப்பு ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட வீரர்கள் புகார் தெரிவித்து இருக்கின்றனர். இது தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வரும் வேளையில் தற்போது பதக்கத்தின் தரத்திலும் பஞ்சாயத்து கிளம்பி இருப்பது அடுத்தக்கட்ட சர்ச்சைக்கு வழி வகுத்து இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Thirunavukarasu SIVASHANMUGANANTHAN
ஆக 11, 2024 12:15

பிரான்ஸ், பாரிஸ் லாசப்பல் என்ற இடத்துல தமிழர்களின் நகைக் கடைகள் நிறைய உண்டு, பிரான்ஸ் ஒலிம்பிக் கமிட்டி தமக்குத் தேவையான பதக்கங்களை அங்கே ஆடர்பண்ணிச் செய்திருக்கலாம், ஒரிஜினலாகக் கிடைக்கும் தங்கம் வெள்ளி வெண்கலம் மூன்றும்


RAJ
ஆக 10, 2024 15:11

போங்கடா நீங்களும் உங்க பெடலும்....


Angappan
ஆக 10, 2024 14:35

உலகில் எங்கு எது நடந்தாலும் அதில் தேவையில்லாமல் நம் ஊர் மக்களை கேவலப்படுத்தி சந்தோஷப்படும் உங்களைப்போன்றோரை எந்த லிஸ்ட்ல் சேர்ப்பது?


Thesabimani
ஆக 10, 2024 14:06

இந்தியா கூட்டணி


SUBRAMANIAN P
ஆக 10, 2024 13:41

என்னய்யா இது, நம்மூரு ரேஷன் கடையில பொங்கலுக்கு குடுத்த அரிசி, எல்லாம் தரமில்லைன்னு சொல்றமாதிரி இல்ல... இருக்கு இது.. ஒருவேளை, பதக்கம் செய்யுற ஆர்டர் கான்ட்ராக்ட்டு நம்மாளுங்க எடுத்திருப்பாங்களோ?


Ramesh Sargam
ஆக 10, 2024 12:08

அங்கேயும் ஊழலா...??


seshadri
ஆக 10, 2024 11:24

இது இந்தியாவில் நடந்து இருந்தால் இந்தி கூட்டணி மோடியை ஒரு வழி ஆக்கியிருப்பார்கள்.


RAMAKRISHNAN NATESAN
ஆக 10, 2024 11:07

காங்கிரசின் காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி ஊழல் உலகப்புகழ் பெற்றதாகும் ..... அதே போல் ஒலிம்பிக் கமிட்டியில் நடந்துள்ளதா ????


SRIRAM
ஆக 10, 2024 19:58

தேடி பாருங்க மாடல் ஆசாமிகள் இருக்க போறாங்க.....


Kasimani Baskaran
ஆக 10, 2024 10:51

ஒலிம்பிக் கிராமத்தில் ஏர் கண்டிஷனர் இல்லை என்பதால் இந்தியா சொந்தச்செலவில் வாங்கி அனுப்பியது நினைவில் இருக்கலாம்.


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ