வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஆழ்ந்த இரங்கல்
ஜகார்த்தா: இந்தோனேசியாவில் பஸ் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், பயணிகள் 16 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பயணிகள் 35 பேரை ஏற்றிக்கொண்டு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பயணிகள் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 16 ஆக அதிகரித்தது என அதிகாரிகள் தெரிவித்தனர். தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து, யோக்யகர்த்தா நகரத்திற்கு பஸ் சென்று கொண்டிருந்த போது விபத்து நிகழ்ந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
ஆழ்ந்த இரங்கல்