உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் அமைதியான முறையில் அதிகார மாற்றம்: ஜோ பைடன் உறுதி

அமெரிக்காவில் அமைதியான முறையில் அதிகார மாற்றம்: ஜோ பைடன் உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: '' அமெரிக்காவில் அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடக்கும்,'' என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் களமிறங்கிய டொனால்ட் டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். அவருக்கு வாழ்த்து குவிந்து வருகிறது. ஜனநாயக கட்சி சார்பில் களமிறங்கிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தோல்வியடைந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bg746842&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், தேர்தலுக்கு பிறகு நிருபர்களிடம் அதிபர் ஜோ பைடன் கூறியதாவது: 200 ஆண்டுகளுக்கு மேலாக உலக வரலாற்றில் சுயாட்சியில் அமெரிக்கா மிகப்பெரிய சோதனையை எதிர்கொண்டு உள்ளது. மக்கள் அமைதியாக ஓட்டளித்து தங்கள் தலைவரை தேர்வு செய்கின்றனர். ஜனநாயகத்தில் மக்களின் விருப்பமே எப்போதும் மேலோங்கும். அதிபராக தேர்வு செய்யப்பட்டு உள்ள டிரம்ப்பை நேற்று அழைத்து பாராட்டு தெரிவித்தேன். அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடப்பதை, அவரது குழுவினருடன் இணைந்து பணியாற்ற எனது நிர்வாகத்திற்கு உத்தரவிடுவேன் என அவரிடம் தெரிவித்து உள்ளேன். மக்களும் அதனை விரும்புகின்றனர். கமலா ஹாரிஸ் எனது கூட்டாளி. பொது சேவகர். அவர் தனது முழுமனதுடன் கடுமையான முயற்சியில் ஈடுபட்டார். தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டதற்காக அவருக்கும், அவரது குழுவினருக்கும் வாழ்த்துகள். மக்களின் முடிவை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அமெரிக்க தேர்தல் முறையின் ஒருமைப்பாடு பற்றிய கேள்விகள் இனி வராது என நம்புகிறேன். அந்த முறை நேர்மையானது. நியாயமானது. வெளிப்படையானது என்பதை நம்பலாம். ஜன.,20ல் அமெரிக்காவில் அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடக்கும். இவ்வாறு ஜோ பைடன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ManiK
நவ 08, 2024 14:07

Just leave now itself...Good things can't wait to Jan 20


Kasimani Baskaran
நவ 08, 2024 05:50

வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஜனாதிபதியாகும் திசையன்விளை டிரம்ப் நாடாருக்கு பாராட்டுக்கள்


J.V. Iyer
நவ 08, 2024 04:40

அய்யா உங்கள் கட்சி மத பயங்கரவாதிகள், கம்யூனிஸ்ட்கள், தீவிரவாதிகள் கூடாரமாகி விட்டதே? இதைப்பற்றி வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ் போன்ற பத்திரிக்கைகள் எழுதுமா? இவர்களெல்லாம் அமெரிக்காவை விட்டு ட்ரம்பினால் விரட்டி அடிக்கப்பட்டவுடன் என்ன செய்வதாக உத்தேசம்? ஒபாமா, அவர் மனைவி, கிளிண்டன், ஹிலாரி போன்றவர்கள் ஒழிந்தால்தான் உங்கள் கட்சி புனிதமடையும்.


தாமரை மலர்கிறது
நவ 07, 2024 23:47

அதிகார மாற்றம் நடக்காதுன்னு சொல்லித்தான் பாரேன்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை