மேலும் செய்திகள்
விளையாடிய குழந்தைகள் குண்டு வெடிப்பில் பலி
13-Jul-2025
சனா:ஏமனில் தினமும் 19 மணிநேரம் மின்வெட்டு செய்யப்படுவதால் கொதிப்படைந்த மக்கள், அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் இறங்கியுள்ளனர்.மேற்காசிய நாடான ஏமனில், ஏடனை தலைமையிடமாக வைத்து சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட அரசு நடந்து வருகிறது. சனா மற்றும் வடக்கு ஏமன் பகுதிகள் ஹவுதி பயங்கரவாதி களின் கட்டுப்பாட்டில் உள்ளன. இங்கு மின்சார உற்பத்திக்கு தேவையான பெட்ரோல், டீசல் எரிபொருள் பற்றாக்குறை, மின்நிலையங்கள் மூடல், ஊழல் போன்ற காரணங்கள் தடையற்ற மின்சாரத்தை வழங்க முடியாமல் அரசு தவித்து வருகிறது. இதன் காரணமாக தினமும் 19 மணிநே ர மின்வெட்டை மக்கள் எதிர்கொள்கின்றனர். தற்போது அங்கு கோடை காலத்தின் உச்சம் என்பதால் மின்வெட்டால் மக்கள் வீடு, அலுவலகங்களில் இருக்க முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில், மின்வெட்டு பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வலியுறுத்தி ஹத்ரமவுத் மாகாணத்தின் மக்கள் மூன்றாவது நாளாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
13-Jul-2025