உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சாக்கடையாக இருந்த சியன் நதியில் 100 ஆண்டுக்கு பின் நீச்சலடித்த மக்கள்; ரூ.1,405 கோடியில் துாய்மையானது

சாக்கடையாக இருந்த சியன் நதியில் 100 ஆண்டுக்கு பின் நீச்சலடித்த மக்கள்; ரூ.1,405 கோடியில் துாய்மையானது

பாரிஸ் : நதிகளை நாம் பாதுகாத்தால், அது நம்மை காக்கும் என்பதை உணர்த்தும் வகையில், சாக்கடையாக மாறியிருந்த பிரான்சின் சியன் நதி துாய்மை படுத்தப்பட்டுள்ளது. வெறும், 1,405 கோடி ரூபாயில் இது சாத்தியமாகியுள்ளது. 100 ஆண்டுக்குப் பின், அதில் மக்கள் நீச்சலடித்து மகிழ்கின்றனர்.

குளிக்க தடை

ஐரோப்பிய நாடான பிரான்சின் பாரிசில் உள்ளது புகழ்பெற்ற சியன் நதி. ஐரோப்பாவின் வரலாற்று சிறப்புமிக்க மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த மழைநீர் வடிகாலாக இது இருந்தது. மொத்தம், 780 கி.மீ., துாரத்துக்கு பாயும் இது, பிரான்சின் உள்நாட்டு நீர் வழி போக்குவரத்தாகவும் இருந்தது.வடகிழக்கு பிரான்சின் டிஜானில் இருந்து உருவாகும் இந்த நதி, நாட்டின் பல முக்கிய நகரங்கள் வழியாக பாய்ந்து, இங்கிலீஷ் கால்வாயில் கலக்கிறது. பாரிசின் புகழ்பெற்ற ஈபிள் டவர் உள்ளிட்டவை இதன் கரையோரத்தில் உள்ளன.ஆனால், ஒரு காலகட்டத்தில் தொழிற்சாலைகள், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் கலக்கப்பட்டு, நாட்டின் மிகப் பெரிய சாக்கடையாக மாறியது. இந்த நதியில் குளிப்பதற்கு, 1923ல் தடை விதிக்கப்பட்டது. அதன் பின், பல முயற்சிகள் மேற்கொண்டும், இந்த நதியை துாய்மைபடுத்த முடியவில்லை.கடந்த, 1990களின் இறுதியில், இந்த நதியை துாய்மைபடுத்துவது ஒரு இயக்கமாக மேற்கொள்ளப்பட்டது. இதற்காக, தொழிற்சாலைகள், வீடுகளில் இருந்து கழிவுகள் கலக்கப்படுவது முதலில் தடுக்கப்பட்டது.இவ்வாறு படிப்படியாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்தாண்டு பாரிசில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தன. அதையொட்டி, இந்த நடவடிக்கைகள் மேலும் வேகமெடுத்தன.ஒலிம்பிக் போட்டியின்போது, இந்த நதியில், படகு போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டன. தொடர்ந்து, நதியை மேலும் துாய்மைபடுத்தும் பணியுடன், அதன் கரையோரங்களை அழகுபடுத்தும் பணிகளும் நடந்தன.

மக்கள் மகிழ்ச்சி

இந்தப் பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், 100 ஆண்டுக்குப் பின், அந்த நதியில், பொதுமக்கள் நீச்சலடிக்க, கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டது.இந்த துாய்மைபடுத்தும் பணிக்காக, பிரான்ஸ் அரசு, 1,405 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்துள்ளது. அரசு நிர்வாகம் நினைத்தால், செய்து முடிக்க முடியும் என்பது, மக்கள் மகிழ்ச்சியுடன் நீச்சலடிப்பதில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

Bhaskaran
ஜூலை 10, 2025 09:59

நாங்க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கூவம் ஆற்றை பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் சுத்தம் செய்து படகு விடுவோம்


sasikumaren
ஜூலை 10, 2025 05:09

நம்ம ஊரில் நல்ல வரலாற்று புகழ் வாய்ந்த நதிகள் மட்டுமே இருக்கிறது அவ்வளவு நதிகளிலும் வெறும் இரசாயன கழிவுகள் மட்டுமே பார்க்க முடியும் இந்தியாவில் அதிக அளவில் மக்கள் பெருக்கம் வேறு இருக்கிறது ஆறுகளை சுத்தம் செய்வதாக சொல்லி முதலைகள் நிறைந்த சொல்லி நூறு கோடி பணத்தை கொள்ளை அடித்து விட்டார்கள் பாக் ஜலசந்தியில் கப்பல் விடுவதாக சொல்லி நான்காயிரம் கோடிகளை வாரி வாயில் போட்டு கொண்டான்கள் இது போன்ற மோசடிகள் மட்டுமே இங்கு நடக்கும் பூந்தமல்லி துறைமுக திட்டத்தில் எந்த வேலையும் நடக்கவில்லை அதற்கே ஒரு ஆயிரம் கோடி காலி இப்போது நாட்டை பள்ளம் போடும் மெட்ரோ ரயில் நாசகார திட்டம் போகிறது ஆறுகளில் பாலங்களை கட்டினால் அடுத்த மாதமே வீழ்ந்து விடுகிறது கொள்ளைக்காரன்களை மட்டுமே நம்பும் அரக்க குணம் கொண்டு மக்கள்


Mummoorthy Ayyanasamy
ஜூலை 09, 2025 15:36

நாமும் நதிகளை தூய்மை படுத்தனும்


vijai hindu
ஜூலை 09, 2025 14:07

தமிழ்நாட்டில் இருக்கிற மாதிரி அங்கு விடியல் ஆட்சி இருந்தா கேவலமா ஆயிட்டு இருக்கும்


ஆரூர் ரங்
ஜூலை 09, 2025 12:42

கங்கை யமுனா நதிகளை ஒட்டி நூற்றுக்கணக்கான பெருநகரங்களும் ஆயிரக்கணக்கான ஆலைகளும் உள்ளன. அனைத்தின் கழிவுகளையும் ஆற்றில் கலக்க விடாமல் சுத்திகரித்து மறுசுழற்சிக்கு விடுவது மிகவும் கடினமானது. ஆனால் கூவம் அடையாறு வைகை தாமிரபரணி அசுத்தமாக ஆக்கிரமிப்புகளே முக்கிய காரணம். வாக்குவங்கி அரசியல் ஆக்கிரமிப்பு அகற்றல், தூய்மைப்படுத்துவதைத் தடுக்கிறது. மீண்டும் மீண்டும் வெள்ளம் ஏற்படக் காரணமாகிறது.


Anand
ஜூலை 09, 2025 11:33

இந்த நதியை திராவிஷத்திடம் ஒப்படடைத்து பாருங்கள், ஒரே வருடத்தில் மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு வந்துவிடுவார்கள்...


Manalan
ஜூலை 09, 2025 11:21

கூவத்தை வைத்தே நாங்க பல கோடி சம்பாதிப்போம் . திராவிடத்தை வைத்தே பல தலைமுறைக்கு சொத்து சேர்த்தாகிவிட்டது .


அப்பாவி
ஜூலை 09, 2025 11:17

இங்கே நல்லா இருந்த கங்கையை நாறடிப்பாங்க. அதிலேயே குளிப்பாங்க.


lana
ஜூலை 09, 2025 11:03

இதன் மூலம் சகலவிதமான மக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் பாரிஸ் இல் நதி சுத்தப்படுத்த 100 ஆண்டு ஆனது. ஆனால் இங்கு உளுத்தம்பருப்பு உதவி யால் நாங்கள் ஆட்சிக்கு வந்து 60 ஆண்டு மட்டுமே ஆகிறது. எனவே இன்னும் 40 ஆண்டு என்னை எனக்கு பின் என் மகன் அவனுக்கு பின் மகன் என்று சமூகநீதி படி முதல்வர் ஆக்கினால் நீங்கள் கூவத்தில் கும்மாளம் போடலாம். வா உடனடியாக வா உடன் பரு‌ப்பு.


Matt P
ஜூலை 09, 2025 10:07

மக்களுடைய உழைப்பால் இந்தியா முன்னேறியிருக்கிறது என்கிறார் ஒருவர். பிள்ளைங்களை படித்து வெற்றி பெற்றால் நாங்க தான் அவங்களை படிக்க வைச்சு முன்னேறினார்கள் என்கிறார்கள். உழைத்து குடும்பங்கள் முன்னேறினால் நாங்கள் தான் உழைத்து அவர்கள் முன்னேறினார்கள் என்கிறார்கள். இலவசமாக பேரு வாங்கணும்னா வாங்குவார்கள் தவிர கூவத்தையெல்லாம் கழுவி சுத்தமாக்கி பேரு வாங்கணும்னா அவர்களால் இயலாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை