உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இலங்கை சென்றார் பிரதமர் மோடி: வரவேற்ற அமைச்சர்கள்

இலங்கை சென்றார் பிரதமர் மோடி: வரவேற்ற அமைச்சர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொழும்பு: பிரதமர் மோடி அரசு முறை பயணமாக இலங்கை சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவரை ஆறு அமைச்சர்கள் வந்து வரவேற்றனர்.தாய்லாந்து சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் ஷின்வத்ராவை சந்தித்தார். பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்றதுடன், பல நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7cl83upt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அங்கு நிகழ்ச்சிகளை முடித்து கொண்ட பிரதமர் மோடி, இலங்கை தலைநகர் கொழும்பு வந்தடைந்தார்.அங்கு அவரை, இலங்கை அமைச்சர்கள் விஜிதா ஹெராத், நலிந்த ஜெயடிசா, அனில் ஜெயந்தா, ராமலிங்கம் சந்திரசேகர், சரோஜா சாவித்ரி பால்ராஜ், கிறிசானந்தா அபேசேனா உள்ளிட்டோர் வரவேற்றனர்.இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தில் தமிழில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கொழும்புக்கு வருகைதந்துள்ளேன். விமான நிலையத்தில் என்னை வரவேற்ற அமைச்சர்கள் மற்றும் ஏனைய பிரமுகர்கள் அனைவருக்கும் எனது நன்றி. இலங்கையில் பங்கேற்கவுள்ள நிகழ்வுகள் குறித்து ஆவலுடன் உள்ளேன் எனக்கூறியுள்ளார்.இந்த பயணத்தின் போது, இந்திய நிதியுதவியடன் அனுராதபுரத்தில் பல்வேறு நலத்திட்டங்களை மோடி துவக்கி வைக்க உள்ளார். அந்நாட்டு அதிபர் உள்ளிட்ட தலைவர்களையும் சந்தித்து பேச உள்ளார்.பிரதமர் மோடியை, அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினரும் விமான நிலையத்தில் ஒன்று கூடி வரவேற்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Barakat Ali
ஏப் 05, 2025 09:09

இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை வழங்கும்படி வற்புறுத்திவரும் ஒரே அரசு மோடி அரசு ..... 2014 முதல் இன்றுவரை ஒரே ஒரு தமிழக மீனவர் மட்டுமே இலங்கைக் கடல் எல்லையில் சுட்டுக்கொல்லப்பட்டார் ..... யூ பி ஏ ஆட்சியில் எழுநூறுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் .....


மீனவ நண்பன்
ஏப் 05, 2025 02:37

ராஜபக்ஷேயை சந்தித்து பரிசுகள் வாங்கி வந்த தமிழக MP க்கள் பிரதமருடன் சென்று கச்ச தீவை இந்தியாவுக்கு தரும்படி கேட்டிருக்கலாம்


வாய்மையே வெல்லும்
ஏப் 05, 2025 07:03

தமிழக எம்பிக்கள் பக்கடா பஜ்ஜி சமோசா தின்னு கொழுத்து வகஃபு வாரிய இல்லாத பிரச்சனையை திருட்டு மூடர் கூட்டம் சொல்லி கொடுத்து மத்தியில் ஆளும் கட்சிக்கு எதிராக கருப்பு பலூன் விளையாட்டு காட்ட டெல்லி முட்டுச்சந்தில் கூடியுள்ளனர்.


சமீபத்திய செய்தி