உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தென் ஆப்ரிக்கா அதிபருடன் பிரதமர் சந்திப்பு: வர்த்தகம், ஏஐ குறித்து ஆலோசனை

தென் ஆப்ரிக்கா அதிபருடன் பிரதமர் சந்திப்பு: வர்த்தகம், ஏஐ குறித்து ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜோகன்னஸ்பெர்க்: ஜி20 மாநாட்டில் பங்கேற்க தென் ஆப்ரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் சிறில் ரமபோசாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தென் ஆப்ரிக்காவில் நடக்கும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஜோகன்னஸ்பெர்க் சென்றுள்ளார். மாநாட்டின் இடையே பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.இந்நிலையில், இன்று அவர் தென் ஆப்ரிக்கா அதிபர் சிறில் ரமபோசாவை சந்தித்து இரு தரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: இந்தியா - தென் ஆப்ரிக்கா இடையிலான உறவை ஆய்வு செய்தோம். குறிப்பாக வர்த்தகம், கலாசாரம், முதலீடு , தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, செயற்கை நுண்ணறிவு, முக்கியமான கனிமங்கள் உள்ளிட்டவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஜி20 மாநாட்டை தலைமை ஏற்று வெற்றிகரமாக நடத்திய தென் ஆப்ரிக்கா அதிபர் சிறில் ரமபோசாவை வாழ்த்தினேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி