உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் தேசிய விருது வழங்கி கவுரவிப்பு

பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் தேசிய விருது வழங்கி கவுரவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அக்காரா: உலகளாவிய தலைமைத்துவத்திற்காக கானாவின் 'ஆபீசர் ஆப் தி ஆர்டர் ஆப் தி ஸ்டார்' என்ற தேசிய விருதைப் பிரதமர் மோடி பெற்றார். 'இந்த விருது ஒரு தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல, 140 கோடி இந்திய மக்களின் சார்பாக நான் பெற்றுக் கொண்டது' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.கானா, டிரினிடாட் டுபாக்கோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஆப்ரிக்காவில் உள்ள கானா நாட்டிற்கு பிரதமர் மோடி சென்றார். அக்காராவில் விமான நிலையத்திற்கு வந்த அந்நாட்டு அதிபர் மஹாமா பிரதமர் மோடியை வரவேற்று அழைத்து சென்றார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=oexuu52j&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அங்கு மோடியை கவுரவிக்கும் வகையில் 21 குண்டுகள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த 3 தசாப்தத்தில் கானா நாட்டிற்கு செல்லும் முதல் பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ள பிரதமர் மோடியை பார்க்க, அங்கு வசிக்கும் இந்தியர்கள் ஒன்று கூடினர். அவர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.இதையடுத்து கானா நாட்டின் அதிபர் மஹாமாவை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:அதிபர் மஹாமாவுடனான பேச்சுவார்த்தைகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன. எங்கள் உறவுகள் இருநாட்டு மக்களுக்கு பயனளிக்கும். வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது குறித்து நாங்கள் விவாதித்தோம். நிதி தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, சுகாதாரம் மற்றும் பிற துறைகளில் உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

உயரிய விருது

இதற்கிடையே, உலகளாவிய தலைமைத்துவத்திற்காக கானாவின் 'ஆபீசர் ஆப் தி ஆர்டர் ஆப் தி ஸ்டார்' என்ற தேசிய விருதைப் பிரதமர் நரேந்திர மோடி பெற்றார்.'இந்த விருது ஒரு தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல, 140 கோடி இந்திய மக்களின் சார்பாக நான் பெற்றுக் கொண்டது' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். விருது பெற்ற பிறகு சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது; 'தி ஆபீசர் ஆப் தி ஆர்டர் ஆப் தி ஸ்டார் ஆப் கானா' விருதை எனக்கு வழங்கியதற்காக கானா மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் நான் நன்றி கூறுகிறேன். இந்த கவுரவம் நமது இளைஞர்களின் பிரகாசமான எதிர்காலம் மற்றும் இந்தியாவிற்கும் கானாவிற்கும் இடையிலான வரலாற்று உறவுகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது. இந்த கவுரவம் ஒரு பொறுப்பாகும்; வலுவான இந்தியா-கானா நட்புறவை நோக்கி தொடர்ந்து பாடுபடுவது. இந்தியா எப்போதும் கானா மக்களுடன் நிற்கும். மேலும் நம்பகமான நண்பராகவும் மேம்பாட்டு கூட்டாளியாகவும் தொடர்ந்து பங்களிக்கும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

spr
ஜூலை 03, 2025 18:33

மோடி பெற்ற விருதுகளுக்குப் பின்னால், பல கோடிகள் ஆதாயம் அவர்களுக்கு உள்ளது அது இந்திய முதலீடாக இருக்கலாம் அல்லது திருப்பித் தரப்பட வேண்டாத கடனாக இருக்கலாம் ஆனால் மோடியின் இந்த அணுகுமுறையினால் நமக்கு பல நண்பர்கள் கிடைக்கிறார்களோ இல்லையோ வெளிப்படையாகப் ஏசும் எதிரிகள் குறைவே மோடி பெற்ற இந்த விருதுகள் ஏலத்தில் விடப்பட்டுக் கிடைக்கும் பணம் நல்ல செயல்களுக்கு உதவுகிறதாம்


venugopal s
ஜூலை 03, 2025 15:54

இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா? இப்போது சந்தோஷமா?


கானா பாட்டுக்காரன்
ஜூலை 03, 2025 11:40

சும்மா போனதுக்கே உயரிய விருது குடுத்து ஜமாய்ச்சுட்டாங்க. வாழ்த்துக்கள் ஆப்பீசர்.


Mario
ஜூலை 03, 2025 09:33

உபியில் இந்து அல்லாதவர்கள் கடை போட கூடாது என்ற விவரம் உள்ளது, சரியா


pmsamy
ஜூலை 03, 2025 09:08

gana is poor country with low life standards.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 03, 2025 09:02

எங்க மாநில காமெடி தர்பார் கிங் கிற்கு யாராச்சும் ஏதாச்சும் விருது கொடுங்களேன்...


அப்பாவி
ஜூலை 03, 2025 08:53

சீக்கிரமா விருது பெறுவதில் கின்னஸ் ரிகார்ட் உருவாகும்.


விவேகா
ஜூலை 03, 2025 08:51

நான் தான் சொன்னேனே... விருது ரெடியானாத்தான் கெளம்புவாரு.


கண்ணன்,மேலூர்
ஜூலை 03, 2025 09:01

இனி வயித்தெரிச்சல் கோஷ்டி வாயிலேயும் வயித்திலயும் அடிச்சிக்கிட்டு ஒப்பாரி வைக்க வரிசை கட்டி ஓடி வருவான்கள் அதை பார்த்து ரசிக்க ஆவலாக இருப்போம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை