உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தேர்தல் முடிவுகள் வெளியான தினமே மக்கள் அச்சம் விலகி விட்டது; சொல்கிறார் ராகுல்

தேர்தல் முடிவுகள் வெளியான தினமே மக்கள் அச்சம் விலகி விட்டது; சொல்கிறார் ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: இந்தியா அனைவருக்கும் சொந்தமானது என்பதை பா.ஜ., புரிந்து கொள்ளவில்லை என லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான ராகுல் தெரிவித்தார்.அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் ராகுல் பேசியதாவது: லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான சில நிமிடங்களிலேயே பா.ஜ., மீதும், இந்திய பிரதமர் மோடி மீதும் மக்கள் கொண்டிருந்த அச்சம் விலகிவிட்டது. இந்த பயத்தின் சூழலைத் தூண்டுவதற்கு அவர்களுக்கு பல ஆண்டுகள் ஆகியது. ஆனால் அது சில நொடிகளில் மறைந்துவிட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=51zj1glp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

சித்தாந்தம்

ஆர்.எஸ்.எஸ்., சொல்வது என்னவென்றால், சில மாநிலங்கள் மற்ற மாநிலங்களை விட தாழ்ந்தவை. சில மொழிகள் மற்ற மொழிகளை விட தாழ்ந்தவை. சில மதங்கள் மற்ற மதங்களை விட தாழ்ந்தவை. சில சமூகங்கள் மற்ற சமூகங்களை விட தாழ்ந்தவை. எல்லா மாநிலத்துக்கும் அதன் வரலாறு, பாரம்பரியம் உண்டு. தமிழ், பெங்காலி, மணிப்பூரி ஆகியவை தாழ்ந்த மொழிகள் என்பது ஆர்.எஸ்.எஸ்., சிந்தாந்தம்.

வங்கி கணக்குகள்

இந்தியா அனைவருக்கும் சொந்தமானது என்பதை பா.ஜ., புரிந்து கொள்ளவில்லை. இந்தியா ஒரு ஒன்றியம் என்பதை நமது அரசியலைப்பு சட்டம் எடுத்துரைக்கிறது. லோக்சபா தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன்பு, எங்களது வங்கி கணக்குகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டது. நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என அவர்கள் நினைத்தனர். ஆனால் நாங்கள் தைரியமாக தேர்தலை எதிர்கொண்டோம். இவ்வாறு ராகுல் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 102 )

Natarajan Ramanathan
செப் 29, 2024 07:45

உண்மைதான். ஊழல் காங்கிரஸ் மீண்டும் உயிர் பெற்றுவிடுமோ என்ற அச்சம் விலகிவிட்டது.


Dharmavaan
செப் 26, 2024 09:41

உண்மை ராகுல்கான் தேசத்துரோக காங்கிரஸ் பதவிக்கு வராது என்று


Mohan
செப் 24, 2024 17:41

ராகுல்இந்து புத்தகங்களை எல்லாம் படித்தாராம்...அதுல எதுலயும் வெறுப்பு பற்றி சொல்லலயாம் ... என்ன புஸ்தகம்னு சொல்லலை சரி. அந்த புஸ்தகங்களில்.. எல்லோரையும் சமமா நடத்தணும், உயிர்களிடம் அன்பு செலுத்தணும், நீ வாழ பிறரை அழிக்க கூடாது, அவரவர்களுக்கு பிடித்த கடவுளை வணங்கலாம்இப்படியெல்லாம் சொல்லியிருக்குதே அதை உங்க சொந்தக்காரங்களான முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவ மக்கள் கிட்ட சொல்லறத்துக்கு முடியலயா ?? பாஜகவுக்கு உபதேசம் பண்றதைப்போலஅவுங்களுக்கும் அறிவுரை சொல்லுங்களேன் பார்ப்போம். அப்ப நீங்க """இந்து புஸ்தகங்கள்""" படிச்சதை நாங்களும் நம்புறோம். அப்படியே டுபாக்கூர் பேர்ல எழுதும் உங்க கட்சி சம்பள ஆசாமிகளுக்கு கொஞ்சமாவது புத்தி வரட்டும்.


kumarkv
செப் 23, 2024 16:31

ஆமாம் மக்கள் நிம்மதி ஆயிட்டாங்க, இனிமேல் இந்த ராகுகாலம் ராகுல்காந்தி வராது என்று.


RAMKUMAR
செப் 21, 2024 04:54

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் ராகுல் பேசியதாவது புரியல . திரு ராகுல் அவர்களே இந்திய வம்சாவளி தான சார்.


Sivasankaran Kannan
செப் 11, 2024 15:03

உண்மை.. இந்த கரப்பான் பூச்சிகள் ஆட்சிக்கு வராது என்று தெரிந்து நிம்மதி..


I am a Sanghi + Kafir…but not a Family slave
செப் 11, 2024 09:20

கரெக்ட் டா சொன்னார் பப்பு.... முடிவு வந்தவுடன் காங்கிரெஸ் ஆட்சி வராதுன்னு தெரிந்ததும் மக்கள் அச்சம் போச்சு


kumarkv
செப் 10, 2024 20:34

நீ ஒழிந்து விடுவாய் என்று மக்களுக்கு நம்பிக்கை


kumarkv
செப் 10, 2024 20:32

நேஷனல் ஹெரால்ட் கேஸ் யென்ன ஆச்சு


எஸ் எஸ்
செப் 10, 2024 16:47

வெளிநாட்டில் போய் இந்த மாதிரி உள்நாட்டு விவகாரங்களை பேசுவது முறையற்ற செயல் என்பதை இவனுக்கு எப்போதுதான் புரிய போகுதோ?


புதிய வீடியோ