உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்ய டிரோன்களை சுட்டு வீழ்த்தியது போலந்து; உக்ரைன் போரில் அடுத்த திருப்பம்

ரஷ்ய டிரோன்களை சுட்டு வீழ்த்தியது போலந்து; உக்ரைன் போரில் அடுத்த திருப்பம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வார்ஸா: உக்ரைன் போரில் அடுத்த கட்டமாக தங்கள் நாட்டில் ஊடுருவிய ரஷ்ய டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக போலந்து அறிவித்துள்ளது.அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கடும் எதிர்ப்பை மீறி உக்ரைன் மீதான போரை ரஷ்யா தொடர்ந்து நடத்தி வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு இதுவரை பலன் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் ரஷ்யாவின் தாக்குதல் நாளுக்கு நாள் உக்கிரம் அடைந்து கொண்டே செல்கிறது. ஆளில்லாத டிரோன் உதவியுடன் உக்ரைன் மீது அன்றாடம் குண்டு மழை பொழிகிறது ரஷ்யா. இவ்வாறு குண்டு வீசிய டிரோன்கள் சில, அண்டை நாடான போலந்துக்குள் ஊடுருவி விட்டன. இதைக் கண்டறிந்த போலந்து ராணுவம் அவற்றை உடனடியாக சுட்டு வீழ்த்தியது. போலந்து, ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ள நாடு. நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள முக்கிய உறுப்பினராகும். இந்தக் கூட்டமைப்பில் ஒரு நாட்டுக்கு எதிரான தாக்குதல் அல்லது போர் செயல்பாடு, ஒட்டுமொத்த கூட்டமைப்புக்கும் எதிரான செயல் என்று கருதப்படும். அந்த நாட்டுக்கு ஆதரவாக, அனைத்து நாடுகளும் போரில் களம் இறங்க வேண்டும் என்பது நேட்டோ கூட்டமைப்பின் உடன்பாடு.இதனால் போலந்துக்குள் ரஷ்ய டிரோன்கள் ஊடுருவியது, ஐரோப்பிய நாடுகளில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது இதற்கு நேட்டோ கூட்டமைப்பு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று உக்ரைன் மற்றும் போலந்து நாடுகள் வலியுறுத்தி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

M Ramachandran
செப் 10, 2025 21:41

உனக்கு சனி திசை ஆரம்பித்து விட்டது.அமெரிக்காவின் அடிமைகளைமுகாமில் சேர்த்தாச்சி.


USER_2510
செப் 10, 2025 17:01

அமெரிக்காவுக்கு எமன் வேற யாருமே கிடையாது அது புடின் மாத்திரம் தான்.


Kasimani Baskaran
செப் 10, 2025 16:00

ஏதாவது ஒரு வகையில் ஐரோப்பா சுடுகாடாவது நிச்சயம். அது அணுவாயுதப்போராகவோ அல்லது குறிப்பிட்ட மதத்தினர் மொத்த ஐரோப்பாவையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதாகவோ இருக்கலாம்.


M Ramachandran
செப் 10, 2025 12:10

அமெரிக்காவிற்கும் இந்த போராருக்கும் சம்பந்தமில்லை. அனாவசிய தலையீடு மற்ற நாடுகள் வபுக்கிலுத்து தங்கள் நாட்டினாய் சீர்கேட்டிற்குள்ளாக்குகிறார்கள். இதனால் கோளுத்த லாப மடைய போவது அமெரிக்கா. அடுத்த நாட்டை ஏழ்மை படுத்தி அதில் குளிர் காய நினைக்கும் கேவலமான புத்தியுடைய நாட்டினை பற்றி புரிந்து கொள்ள வேண்டும் அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவுக்கும் என்ன சம்பந்தம்? நாரி புத்தியுடன் ஐரோப்பிய யூநியனைய தூண்டி விட்டு ரெஸ்ஸினாய் மிரட்ட நினைத்ததால் உக்ரேனைய கட்டுக்குள் வைக்க ரசிய உக்ணை மிரட்ட வெள்ளைக்காரன் கல் அனைவரும் சேர்ந்து ரஷ்யாவை எத்தனித்து உக்ரேனைய பகடைய காயக்கா நினைத்தார்கள். சும்மாயிருந்த சங்கை உதி கெடுத்தது யார். ஆனால் மூடர்கள் ராசியாவிடம் குறைந்தவிலையில் இயற்கை வாயுவை வாங்கிக் கொண்டிருந்தால் அதைய பிடிக்காத அமெரிக்கன் நரி வேலையை செய்து ஆதயம் தேடமுயல்கிறான். கெட்டபையன் சார் அமெரிக்கன். எப்போதுமெ நமக்கு எதிரியாகவே இருந்துள்ளான். காங்கரஸ் ஆளும் போது நம்மை அடிமை ஆக்கி வைத்திருந்தான். இப்போது முடியாதல் நம் மீதி பாய்கிறான். இதை கொஞ்சமும் மண்டையில் ஏற்றிக்கொள்ளாமல் ராகுல் அவனுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுக்க துடிக்கிறார்.


M Ramachandran
செப் 10, 2025 11:49

உங்க பக்க ஞாயம் போல் ரசிய பக்கமும் ஞாயமிருக்கு. நீஙக அனாவசியமாக அமெரிக்காவின் கைய்ய பாவையாக உக்கரையினில் நுழைந்து காலிழுத்து வம்பு செய்தீர்கள். அது சின்ன நாடக இருந்தால் பயந்து ஆடும். ரசியா அமெரிக்காவிற்கெ சவால் விடும் நாடு. நீஙக சுண்டைய்யக்காய்.


R Dhasarathan
செப் 10, 2025 11:22

ரத்த வெறி பிடித்த காட்டேரிகள்... எப்பொழுது அமைதி திரும்பும் என்று தெரியவில்லை... ஒருவர் மாற்றி ஒருவர் குறை கூறிக்கொண்டு மக்களையும் உலகத்தின் அமைதியை கெடுக்கிறார்கள்


djivagane
செப் 10, 2025 12:58

ரத்த வெறி பிடித்த காட்டேரிகள். இஸ்ரேல் பத்தி பேசுறிங்களா ?


N Sasikumar Yadhav
செப் 10, 2025 13:22

மதிப்புமிக்க இஸ்ரேல் இஸ்லாமிய பயங்கரவாதத்தை வேரடி மண்ணோடு அழித்து உலகத்திற்கு நன்மை செய்து கொண்டிருக்கிறது


ஆரூர் ரங்
செப் 10, 2025 09:40

புடின் ரொம்ப நல்லவரு. நாடு பிடிக்கும் ஆசை மட்டும்தான் பிரச்சனை.


தத்வமசி
செப் 10, 2025 15:55

புடினுக்கு உக்ரைன் நாடு வேண்டாம். ஆனால் அது நட்பு நாடாக இருக்க வேண்டும், நேட்டோவில் சேரக் கூடாது. காரணம் நேட்டோ நாட்டுப்படை ரஷ்யாவின் எல்லையில் வந்து நின்று ஆராய்ச்சி செய்யும். இந்த நிலை வரக்கூடாது என்று உக்ரைனை தாக்குகிறார். இப்பவும் புடின் சொல்வது என்னவென்றால் உக்ரைன் நாடு நேட்டோவுடன் சேர மாட்டேன் என்று உறுதி கூற வேண்டும் என்கிறார்.


ramesh
செப் 10, 2025 20:39

உக்ரைன் , USSR விடம் இருந்த 15 நாடுகளில் ஓன்று தானே . பிறகு எப்படி ரஷ்யா நேட்டோ உடன் சேர அனுமதிக்கும் . அமெரிக்கா கண்டத்தில் உள்ளவனுக்கு ஐரோப்பா கண்டத்தில் என்ன நாட்டாமை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை