உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஹங்கேரி செல்லும் போது தங்கள் நாட்டு வான்வெளியை பயன்படுத்தக் கூடாது: புடினுக்கு போலந்து எச்சரிக்கை

ஹங்கேரி செல்லும் போது தங்கள் நாட்டு வான்வெளியை பயன்படுத்தக் கூடாது: புடினுக்கு போலந்து எச்சரிக்கை

மாஸ்கோ: ஹங்கேரிக்கு செல்லும் வழியில், ரஷ்ய அதிபர் புடின் தங்கள் நாட்டு வான்வெளி வழியாக பறந்தால் கைது செய்யப்படுவார் என போலந்து எச்சரிக்கை விடுத்துள்ளது.அமெரிக்க அதிபர் டிரம்புடன் ஹங்கேரியில் நடைபெறும் உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் புடின் பங்கேற்க இருக்கிறார். அப்போது இரு நாட்டுத் தலைவர்களும் உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து முக்கிய பேச்சு நடத்த இருக்கின்றனர். இந்த சூழலில், ஹங்கேரியில் நடைபெறும் உச்சிமாநாட்டிற்காக தனது வான்வெளி வழியாக ரஷ்ய அதிபர் புடின் பயணிக்க கூடாது என்று போலந்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து, போலந்து வெளியுறவு அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி கூறியதாவது: ஹங்கேரிக்கு செல்லும் வழியில் புடின் தனது வான்வெளியை பயன்படுத்தக் கூடாது. மீறி பயன்படுத்தினால், சர்வதேச கைது வாரண்டை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும். அவர் கைது செய்யப்படுவார். இந்த உச்சிமாநாடு நடைபெற வேண்டுமானால், விமானம் வேறு பாதையைப் பயன்படுத்தும் என்று நம்புகிறோம். தாக்குதல்கள் தொடர்வதால், புடினின் விமானம் தரையிறக்கப்படலாம். இவ்வாறு அவர் கூறினார். உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. போலந்து வான்வெளியில் அத்துமீறி நுழைந்த ரஷ்ய டிரோன்களை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்பாவி
அக் 22, 2025 09:31

அதான் மாநாட்டையே கேண்சல் பண்ணிட்டாங்க.


Santhosh Kumar
அக் 22, 2025 06:13

அவன் ஏரியாவில் அத்துமீரி trone விட்டது சரியா? போலாந்து அமைதியான நாடு..சாது மிரண்டால் காடு கொள்ளாதுனு சொல்லுவாங்க...யாராக இருந்தாலும் மற்ற நாட்டின் இறையன்மையை மதிக்க கற்று கொள்ள வேண்டும்..அமெரிக்கா ரஷ்யா சீனா இவர்களுக்கு அந்த பழக்கமே கிடையாது.


visu
அக் 22, 2025 06:55

போலந்து நேட்டோ உறுப்பினர் என்ற ஆணவத்தில் எல்லை மீறி ரஷ்யாவை சீண்டுகிறது என்றைக்கு உண்மையில உதை வாங்க போறாங்க தெரியலை .கூடுதல் தகவல் இஸ்லாமிய குடியேறிகளை போலந்து அனுமதிக்க மறுத்துவிட்டது இப்ப நம்ம உள்ளூர் போராளிகள் ரஷ்யாவைற்கு ஆதரவு தெரிவிப்பாங்க


Subramanian Suriyanarayanan
அக் 22, 2025 01:51

Putin mind voice: புள்ளபூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்னு நான் என்ன கனவாடா கண்டேன்....


manu putthiran
அக் 21, 2025 22:52

போலந்து நாட்டிற்கு நேரம் சரியில்லை