உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போப் பிரான்சிஸ் காலமானார்!

போப் பிரான்சிஸ் காலமானார்!

ரோம்: கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ், 88, வாடிகனில் இன்று (ஏப்ரல் 21) காலமானார்.உலகம் முழுதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப் பிரான்சிஸ். இவருக்கு வயது 88. வாடிகன் நகரத்தில் வசித்து வந்தார். பல்வேறு உடல்நலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்த அவர், 38 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்தார். உடல் நலம் சற்று தேறிய நிலையில் மார்ச் 23ல் மீண்டும் வாடிகன் திரும்பினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mvsgm84i&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வழக்கமான பணிகளை பார்க்கவும் தொடங்கினார். நேற்று ஈஸ்டர் முன்னிட்டு கத்தோலிக்கர்களுக்கு ஆசி வழங்கியிருந்தார். இந்நிலையில், இன்று (ஏப்ரல் 21) காலை போப் பிரான்சிஸ், 88, காலமானதாக, வாடிகன் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. அவரது மறைவிற்கு, பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்து வந்த பாதை!

* அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் ஐரிஸ் நகரில் 1936ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி பிறந்தார்.* 1969ம் ஆண்டு கத்தோலிக்க பாதிரியராக பணியில் சேர்ந்தார். பல்வேறு பதவிகளை பெற்ற இவர் 2001ம் ஆண்டில் கார்டினல் ஆக பதவி உயர்த்தப்பட்டார். * 2013ம் ஆண்டு போப் ஆக இருந்த பெனடிக்ட் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய போப் ஆக பிரான்சிஸ் தேர்வு செய்யப்பட்டார்.

தலைவர்கள் இரங்கல்

போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோரும் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கை: உலகம் முழுவதும் இருக்கும் கத்தோலிக்க சமுதாயத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கிறிஸ்துவின் கொள்கைகளுக்காக சிறுவயது முதலே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் போப் பிரான்சிஸ்.ஏழை, எளிய மக்களுக்காகவும் ஒடுக்கப்பட்டோருக்காகவும் அவர் சேவை ஆற்றினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை ஒளியாக இருந்து வழிகாட்டினார். அவருடன் எனது சந்திப்பை நினைவுகூர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவால் ஆழ்ந்த வருத்தமடைந்தேன். இரக்கமுள்ள முற்போக்கான குரலாக ஒலித்தவர் போப் பிரான்சிஸ். அவரது மறைவால் வருத்தமடைந்தேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

சிந்தனை
ஏப் 21, 2025 22:41

பாவம். அவர் நரகத்திற்கு போவதை நான் நேரில் பார்த்தேன்


Ashok Subramaniam
ஏப் 21, 2025 21:54

உத்தராயாண புண்ணியகாலம் போல்... ஈஸ்டர் புண்ணியகாலத்திலே போய் சேர்ந்த புண்ணியவானோ


மீனவ நண்பன்
ஏப் 21, 2025 19:20

Potential successors to Pope Francis are Ghana’s Peter Turkson, Luis Tagle of the Philippines and Hungary’s Peter Erdo.


மீனவ நண்பன்
ஏப் 21, 2025 18:31

மூணு நாலாவது லீவு விடவேண்டாமா ?


Ramanujadasan
ஏப் 21, 2025 18:06

ஏங்க நம்ம நாட்டில் இருக்கும் எத்தனையோ கிறித்துவ பாதிரிகள் சென்று ஜபம் செய்து இவரை காப்பாற்றி இருக்கலாமே ?


Tiruchanur
ஏப் 21, 2025 17:31

சிறிய, சூடான் நாடுகளில் உள்ள கிறிஸ்தவர்களை காக்க முடியாத ஏசு மற்றும் அவரின் சீடரான போப் இருந்தா என்ன இல்லாவிட்டால் என்ன?


Nallavan
ஏப் 21, 2025 15:35

ஆழ்ந்த இரங்கல்


Kulandai kannan
ஏப் 21, 2025 15:09

உதயநிதிக்கு துக்கம் தொண்டைக்குழி அடைத்துக் கொள்ளுமே


john
ஏப் 21, 2025 17:15

குழந்தை கண்ணன் நீ மனித பிறவி என்று உன்னை மதிக்காது


RAMAKRISHNAN NATESAN
ஏப் 21, 2025 14:44

இறைவனின் திருப்பாதம் அடையட்டும் .....


Ramesh Sargam
ஏப் 21, 2025 14:42

Pope Francis avargal aanmaa saandhi adaiyattum.கிறிஸ்துவ மதத்தின் முதல் குருவே காலமானார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை