உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உடல் நலம் தேறிய போப் பிரான்சிஸ்: படம் வெளியிட்டது வாடிகன்

உடல் நலம் தேறிய போப் பிரான்சிஸ்: படம் வெளியிட்டது வாடிகன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ரோம்: போப் பிரான்சிஸ் உடல் நலம் தேறிய நிலையில், தேவாலயத்தில் நடந்த திருப்பலி நிகழ்ச்சியில் பங்கேற்ற படத்தை வாடிகன் வெளியிட்டுள்ளது.வாடிகனின் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ், 88, வயது முதுமை காரணமாக உடல் நலம் குன்றியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக உடல்ரீதியாக பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறார்.கடந்த பிப்.,14ம் தேதியன்று ரோமில் உள்ள அகஸ்டினோ ஜெமெலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. முதலில் அவர் கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். பின்னர் அவரது உடல்நிலை முன்னேற்றம் கண்டு வருகிறது என்று டாக்டர்கள் கூறினர்.தற்போது போப் பிரான்சிஸ் உடல்நலம் தேறி உள்ளார். அவர் ஜெமெல்லி பாலிகிளினிக்கில் உள்ள தேவாலயத்தில் நடந்த திருப்பலி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இந்த புகைப்படத்தை வாடிகன் வெளியிட்டுள்ளது. அவர் உடல் நலம் பாதிக்கப்பட்ட பிறகு, தற்போது தான் முதல் படம் வெளியாகி உள்ளது. படத்தில் போப் பிரான்சிஸ், 'ஊதா நிற சால்வை அணிந்து தேவாலயத்தில் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Barakat Ali
மார் 17, 2025 15:40

குணமடைந்தது மருத்துவதினாலா அல்லது பிரார்த்தனையாலா ????


Ramesh Sargam
மார் 17, 2025 12:54

பரமபிதா ஏசுவுக்கு நன்றி.


Priyan Vadanad
மார் 17, 2025 08:42

ஒரு நல்ல மக்கள் நலனை விரும்பும் ஆன்மீகவாதியை நல்ல மனதுடன் வாழத்தலாமே.


தமிழ்வேள்
மார் 17, 2025 11:59

ஆப்பிரிக்காவின் பாதிரி கொடுமைகளுக்கு மன்னிப்பு கேட்ட மனம் ஹிந்து என்றபோது கல்லாக மாறிவிட்டதா ?


ராஜாராம்,நத்தம்
மார் 17, 2025 17:20

தான் ஆடா விட்டாலும் தன் தசையாடும் என்பது போல் போப்புக்கு உடம்பு சரியில்லைன்னா வடநாட்டுல இருக்கிற உனக்கு மனசு சரியில்லாம போகுது.


முக்கிய வீடியோ