உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காந்தி ஓவியம் ஏலத்தில் ரூ.1.7 கோடிக்கு விற்பனை!

காந்தி ஓவியம் ஏலத்தில் ரூ.1.7 கோடிக்கு விற்பனை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: போன்ஹாம்ஸில் நடந்த ஆன்லைன் ஏலத்தில், காந்தி ஓவியம் ரூ.1.7 கோடிக்கு விற்பனை ஆனது.பிரிட்டிஷ் கலைஞர் கிளேர் லெய்டனால் வரையப்பட்ட காந்தி ஓவியம், நிர்ணயிக்கப்பட்ட விலையை காட்டிலும் மூன்று மடங்கிற்கு விற்பனை செய்யப்பட்டது. ஆன்லைன் விற்பனையில் முதலிடத்தை பிடித்தது. ஓவியம் ஆன்லைனில் விற்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். 1931ம் ஆண்டு இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ள காந்தி லண்டனுக்குச் சென்ற போது அவரை கிளேர் லெய்டன் சந்தித்துள்ளார். அப்போது ஓவியம் வரைவதற்கு வசதியாக காந்தி போஸ் கொடுத்தார். தன் வாழ்நாளில் ஓவியருக்கு காந்தி போஸ் கொடுத்தது அந்த ஒரு நிகழ்வு மட்டுமே.அப்போது, லெய்டன் இந்திய சுதந்திரத்தின் தீவிர ஆதரவாளரான அரசியல் பத்திரிகையாளர் ஹென்றி நோயல் உடன் நண்பராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த கிளேர் லெய்டன்?

* கிளேர் லெய்டன், ஏப்ரல் 12ம் தேதி, 1898ம் ஆண்டு லண்டனில் பிறந்தார். இவர், 1915ம் ஆண்டில், லைட்டன் பிரைட்டன் கலைக் கல்லூரியில் படிப்பைத் தொடங்கினார்.* இவர் 1921ம் ஆண்டு முதல் 1923ம் ஆண்டு வரை ஸ்லேட் நுண்கலை பள்ளி மற்றும் மத்திய கலை மற்றும் கைவினைப் பள்ளி ஆகியவற்றில் பயிற்சி பெற்றார்.* படிப்பை முடித்த பிறகு, லீடன் ஐரோப்பா முழுவதும் பயணம் செய்ய நேரம் ஒதுக்கி, இத்தாலி, பிரான்ஸ் மற்றும் பால்கன் ஆகிய நாடுகளுக்குச் சென்றார். * அவர் நிலப்பரப்புகளையும் விவசாயத் தொழிலாளர்களையும் வரைந்து, கிராமப்புற வாழ்க்கையை சித்தரிப்பதில் ஒரு ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். பிரபலமான பிரிட்டிஷ் கலைஞர் கிளேர் லெய்டனால் வரையப்பட்ட காந்தி ஓவியம் தான், ரூ.1.7 கோடிக்கு விற்பனையாகி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Saai Sundharamurthy AVK
ஜூலை 16, 2025 17:27

எவன் வாங்கினான் என்று தெரியவில்லை..


MARUTHU PANDIAR
ஜூலை 16, 2025 15:18

காந்தி கணக்குன்னா தெரியுமா? தென்னகத்து திலகராம் கப்பலோட்டிய தமிழன், வ.உ.சி. உடல் பொருள் ஆவி அனைத்தையும் விடுதலைப் போருக்கு அர்ப்பணித்த வரலாறு போற்றும் மாபெரும் தலைவர். சிறையில் ஆங்கிலேயன் புரிந்த கொடுமைகளால் தனது கடைசி காலத்தில் உடல் நலம் குன்றி வருமானமும் குன்றி இருந்த காலத்தில் தென்னாபிரிக்க தமிழர்கள் வ.உ.சிக்கு உதவும் முகமாக காந்தி மூலம் அனுப்பிய சில ஆயிரம் ரூபாய்கள் அவரை வந்து அடையவே இல்லை. அதை கேட்கவும் யாருக்கும் துணிவில்லை- பணம் எங்கு சென்றது என்பதைத் தான் காந்தி கணக்குங்கறாங்களாம்.


மூர்க்கன்
ஜூலை 16, 2025 17:03

காந்தி அந்த பணத்தை பைசா பாக்கி இல்லாமல் திருப்பி கொடுத்து விட்டார் இதுதான் உண்மை ஆனால் அந்த கணக்கை சரி பார்க்க அவகாசம் எடுத்து கொண்டார் என்பதே குற்ற சாட்டு தனக்கு நேர்ந்த முன் அனுபவங்களால் காந்தியிடம் இருந்து யாரும் அவ்வளவு எளிதில் சல்லி பைசா கூட வாங்கிட முடியாது என்பதை அவரது வரலாறு சத்ய சோதனை படித்தவர்களுக்கு நன்கு தெரியும்.


Anbuselvan
ஜூலை 16, 2025 15:09

இந்த செயற்கை நுண்ணறிவு யுகத்தில் இந்த ஓவியமெல்லாம் இன்னும் கூட விக்குதா ? ஏதோ உள்குத்து நடக்குது


ஈசன்
ஜூலை 16, 2025 12:55

காந்தியை பற்றி மிக உயர்வாக நினைத்து கொண்டிருந்தவர்களில் நானும் ஒருவன். சமீப காலமாக அவரை பற்றிய உண்மையான விஷயங்கள் வர ஆரம்பித்ததும்


venugopal s
ஜூலை 16, 2025 13:18

அவைகள் காந்தியைப் பற்றிய உண்மைகள் அல்ல, கிளப்பி விடும் கட்டுக்கதைகள்!


chandra
ஜூலை 16, 2025 12:31

waste.


அசோகன்
ஜூலை 16, 2025 12:25

இவ்வளவு விலைக்கு விற்றதா.....


SUBBU,MADURAI
ஜூலை 16, 2025 10:39

Gandhi did not want Indians to use violence against British but wanted Indians to use violence to defend British against Germans.


MARUTHU PANDIAR
ஜூலை 16, 2025 11:03

His policies from that period until his last breadth benefited whom is any one"s guess.he held np power officially over the cabinet but led the cabinet thro the nose. To whose benefit?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை