உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நிலநடுக்கத்தால் உருக்குலைந்த மியான்மர், தாய்லாந்து: 154 பேர் பலி: உதவிக்கு ஐ.நா., தயார்

நிலநடுக்கத்தால் உருக்குலைந்த மியான்மர், தாய்லாந்து: 154 பேர் பலி: உதவிக்கு ஐ.நா., தயார்

சகாய்ங்: மியான்மரில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் தாய்லாந்தின் பாங்காங்கிலும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுக்குமாடி கட்டடம் தரைமட்டமானதில் 40 பேர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மியான்மரில் 154 பேர் உயிரிழந்து உள்ளனர். தாய்லாந்தில் கட்டடங்களுக்கு மத்தியில் ஏராளமானோர் சிக்கி உள்ளனர். மியான்மரின் வடகிழக்கு நகரமான சகாய்ங்கில் இருந்து 16 கி.மீ., தொலைவில் 10. கி.மீ., ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவானது. தொடர்ந்து, மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 பதிவாகியது. பிறகு 4.8 ஆக உணரப்பட்டது. ஒரே சமயத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் அண்டை நாடுகளிலும் உணரப்பட்டது. இந்தியாவின் உத்தரகண்ட்டிலும், கோல்கட்டாவிலும் வங்கதேசம், லாவோஸ், தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளிலும் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக, கட்டடங்கள் குலுங்கியதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

தாய்லாந்து

குறிப்பாக, தாய்லாந்தின் பாங்காங்கில் அடுக்குமாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து தரைமட்டமானது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த கட்டடத்தின் கீழே இருந்த மக்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன. இந்த கட்டிட இடுபாடுகளில் 80 ஊழியர்கள் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் 10 பேர் உயிரிழந்து உள்ளனர்.அதேபோல, பல இடங்களிலும் கட்டடங்கள் சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் பெரும்பாலானவை கட்டுமானத்தில் உள்ளவை என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால், அங்கு அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதேபோல், பாங்காக் நகரில் வானுயர்ந்த கட்டடத்தின் உச்சியில் இருந்து நிலநடுக்கம் காரணமாக தண்ணீர் மேல் இருந்து கீழே விழுந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளன.

150 பேர் பலி

இந்த நிலநடுக்கம் காரணமாக மியான்மரில் 150 பேர் உயிரிழந்து உள்ளனர். 750க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். மண்டலே நகரில் உள்ள மசூதியில் இருந்தவர்களும் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மீட்பு பணிகள் நடப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

மின்சாரம் துண்டிப்பு

மியான்மரில் பல இடங்களில் நிலநடுக்கம் காரணமாக பல மணி நேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவைகளும் பாதிக்கப்பட்டு உள்ளன.

உதவி கோரும் மியான்மர்

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ள மியான்மருக்கு சர்வதேச அமைப்புகள் உதவ வேண்டும் என அந்நாட்டு ராணுவ அரசு வேண்டுகோள் விடுத்து உள்ளது. அதேநேரத்தில் இந்த உதவியை சர்வதேச அமைப்புகள் வழங்கவேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறி உள்ளன.

கட்டடங்கள் சேதம்

மியான்மரின் மண்டலே நகரில் உள்ள பல கட்டடங்கள் சேதமடந்துள்ளன. இரண்டு மாடி கட்டடம் ஒன்று சரிந்து பக்கத்து வீட்டின்மேல் விழுந்த காட்சிகள் வெளியாகி உள்ளது. பழைய பாலம் ஒன்றும் இடிந்து விழுந்து உள்ளது. அதேபோல் தலைநகர் நயிபிடாவ் நகரில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றும் சேதமடைந்தது. இதனால், அங்கிருந்த பார்வையாளர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.நயிபிடாவ் நகரில் ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவமனை பூகம்பத்தால் கடுமையான சேதத்தை சந்தித்து உள்ளது. இதனால், எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற தகவல் வெளியாகவில்லை. அம்மருத்துவமனையில் இருந்த மக்கள், தெருக்களில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மியான்மர் தாய்லாந்து எல்லையில் உள்ள புத்தமத வழிபாட்டு தலங்கள் பலத்த சேதத்தை சந்தித்து உள்ளன.இரு நாடுகளிலும் மீட்புப் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஐ.நா., தகவல்

மியான்மருக்கு உதவி செய்வதற்கு தேவையான அனைத்து வளங்களையும் ஒன்றிணைத்து வருவதாக ஐ.நா., பொதுச்செயலர் ஆண்டனியோ குட்டரெஸ் கூறியுள்ளார்.

அமெரிக்கா எச்சரிக்கை

அமெரிக்காவை சேர்ந்த அமைப்பு ஒன்று மியான்மரில் பூகம்பத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டும் என எச்சரித்து உள்ளது.மியான்மரின் மத்திய பகுதியில், இந்த நிலநடுக்கம் காரணமாக கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது தெரியவந்துள்ளது.

வெளியேற உத்தரவு

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் வாழ பாதுகாப்பற்றதாக கருதப்படும் கட்டடத்தில் வாழும் நூற்றுக்கணக்கான மக்களை வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

அணைகள் குறித்து கவலை

நிலநடுக்கத்தால் மியான்மரின் அணைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என செஞ்சிலுவை சங்கம் கவலை தெரிவித்து உள்ளது.

இந்திய தூதரத்தின் அவசர உதவி எண்கள்

தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்கள், அங்குள்ள இந்திய தூதரக அலுவலகத்தை +66 618819218 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உதவி கோரலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்குள்ள சூழ்நிலை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் கூறியுள்ளது.

பிரதமர்உறுதி

இந்த நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மர் மற்றும் தாய்லாந்துக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.Galleryஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், 'மியான்மர் மற்றும் தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் கவலையளிக்கின்றன. ஒவ்வொருவரும் பாதுகாப்பாகவும், நலமாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன். அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக இருக்கிறோம். இதற்காக, எங்களின் அதிகாரிகளை தயார்நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அதேபோல, இரு நாடுகளுடன் தொடர்பில் இருக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு அறிவுறுத்தியுள்ளேன்,' இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

நிக்கோல்தாம்சன்
மார் 29, 2025 04:49

மாண்டலே மசூதியில் மொபைல் போனில் பதிவு செய்கிறேன் என்று பலரும் முயன்று கொண்டு வெளியேற முயற்சிக்கும் நபர்களுக்கு இடையூறு செய்த காட்சியும் வெளியாகியுள்ளது , முதலில் அடுத்தவர் உயிரையும் மதியுங்கடா அப்புறம் உங்களின் வைரல் வீடியோக்கள் ஆசையை பூர்த்தி செய்யுங்க


கிஜன்
மார் 29, 2025 03:46

கட்டிடங்களின் சரிவை காணொளியில் கண்டது .... பயமூட்டுவதாக இருந்தது .... அனைத்து நாடுகளும் உதவ வேண்டும் ...


Appa V
மார் 29, 2025 05:59

அரபு நாடுகள் குறிப்பாக கத்தார் சவுதி போன்ற பணக்கார நாடுகள் மவுனம்


Appa V
மார் 29, 2025 02:47

ஐ நா வுக்கு யார் உதவுவது ?


Ganesh
மார் 29, 2025 02:22

மோடி ஜி முதல வரியை குறைக்கட்டும்


Appa V
மார் 29, 2025 05:56

முதல வரியா ?


THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
மார் 28, 2025 17:46

இயற்கையின் எதிர்பாராத சீற்றம் மக்கள் நலமுடன் இருக்க இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.


Palanisamy Sekar
மார் 28, 2025 16:52

தாய்லாந்து நிலநடுக்கத்தால் ராகுலின் பட்டாயா பயணம் பாதிக்க்காத அளவுக்கு இருக்கும் என்று நம்புவோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய பிரதமரின் உதவி என்கிற சொல் அவர்களுக்கு மிகுந்த ஆறுதலை கொடுக்கும்.


GALAXY MARKETING
மார் 28, 2025 16:31

SO SAD.,


Kulandai kannan
மார் 28, 2025 16:10

பட்டாயாவுக்கு பாதிப்பு உண்டா??


rama adhavan
மார் 28, 2025 18:16

ஏன் நண்பர் பற்றிய கவலையோ?


Kasimani Baskaran
மார் 28, 2025 14:39

மகா சோகம்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை