உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சார்லி கிர்க் படுகொலையை கொண்டாடியவர்களுக்கு ரத்தாகிறது விசா: அமெரிக்கா அறிவிப்பு

சார்லி கிர்க் படுகொலையை கொண்டாடியவர்களுக்கு ரத்தாகிறது விசா: அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்டன்: சார்லி கிர்க் படுகொலையை கொண்டாடிய அயல்நாட்டினர், நாடு கடத்தப்பட உள்ளனர் என்று அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ அறிவித்து உள்ளார்.அண்மையில் அமெரிக்காவின் உடா பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சி ஒன்றில் சார்லி கிர்க் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் அதிபர் டிரம்பின் ஆதரவாளர் மற்றும் டர்னிங் பாயிண்ட் என்று நிறுவனத்தின் இணை நிறுவனராகவும் இருந்து வந்தார். வெளிநாட்டினர் அமெரிக்காவில் குடியேறுவதற்கு எதிராகவும் பிரசாரம் செய்து வந்தார்.அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆதரவாளர் கொல்லப்பட்ட நிகழ்வு, அந்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை அரங்கேற்றிய டைலர் ராபின்சன் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில், சார்லி கிர்க் படுகொலையை, அந்த நாட்டில் வசிக்கும் சிலர் கொண்டாடினர். அப்படி கொண்டாடியவர்கள் நாடு கடத்தப்படுவதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ அறிவித்துள்ளார். அந்நாட்டின் பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் பேட்டியளித்த போது இவ்வாறு கூறி இருக்கிறார்.அவர் மேலும் கூறியதாவது;எங்களின் குடிமகன் கொல்லப்பட்ட நிகழ்வை கொண்டாடிய வெளிநாட்டினரை ஏற்கவே முடியாது. இப்படிப்பட்ட நபர்களை அமெரிக்கா வரவேற்காது. இதுபோன்ற கொலைகளை நியாயப்படுத்தும் அல்லது கொண்டாடும் நபர்களை அமெரிக்காவில் நுழையவோ அல்லது தங்கவோ அனுமதிக்கக்கூடாது.இப்படி கொண்டாடுவர்கள் இங்கே(அமெரிக்கா) இருந்தால் அவர்களுக்கு நாம் விசா வழங்கக் கூடாது. அவர்கள் ஏற்கனவே இங்கே இருந்தால் அவர்களின் விசாவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மார்க் ரூபியோ கூறினார்.தொலைக்காட்சியில் தான் பேசிய வீடியோவை அவர், எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்து கொண்டு இருக்கிறார். அதில், இங்கு விசா பெற்றுக் கொண்டு அமெரிக்கரின் படுகொலையை கொண்டாடினால், நாடு கடத்தப்பட தயாராகுங்கள், உங்களுக்கு இந்நாட்டில் அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

SP
செப் 16, 2025 21:19

இது என்ன பிரமாதம் முன்னாள் பிரதமரையே கொலை செய்ய துணை போன நபரை மாநில முதல்வரே கட்டிப்பிடித்து பாராட்டு தெரிவித்த வரலாற்றின் சொந்தக்காரர்கள் நாங்கள்


மாபாதகன்
செப் 17, 2025 12:39

பிரதம வேட்பாளர் படுகொலை செய்யப்பட்டார் என்பது பேரதிர்ச்சியான சம்பவம் மக்கள் பெரும் கொந்தளிப்புடன் இருந்ததால் நிலைமையை மட்டுப்படுத்த காவல்துறை அவசரகதியில் பிடித்து வழக்கு பதிவு செய்ய பட்டவர்களில் ஒருவர் தன் வாழ்நாள் இளமை பருவம் முழுவதையும் அநியாயமாக சிறையில் கழித்த பின்னும் அவர் மீது வஞ்சத்துடன் நடந்து கொள்வது பெரும் தவறு . உணருங்கள்


ஜெய்ஹிந்த்புரம்
செப் 16, 2025 20:39

சார்லி கிர்க்ஐ ஸ்னைப்பர் துப்பாக்கி வைத்து சுட்டுக் கொன்ற டைலர் ராபின்சன் ஒரு மார்மன் கிருத்துவ குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய குடும்பத்தினர் தலைமுறை தலைமுறையாக ரிபப்ளிகன் கட்சி சார்புடையவர்கள். சார்லி கிர்க்கின் வெறுப்புப் பேச்சுக்கள் உலக பிரசித்தம். இந்த கருத்துத் தளத்தில் இஸ்லாமியரை கழுவி ஊற்றும் நமது சங்கி நண்பர்கள் கிர்க்கின் பேச்சை கேட்டால் கோபத்தில் அவர்களுக்கு கிறுக்கே பிடித்துவிடும். செய்திகளில் பதிஙிட்ட கொலைகாரன் போட்டோக்கள் அவனது தந்தையால் அடையாளம் காணப்பட்டு கொலைகாரன் தானாகவே போலீசில் சரணடைந்தான். வெறுப்பாளர்களுக்கு என்றுமே உள்ளேயே விரோதிகள்.


Rathna
செப் 16, 2025 18:07

10 நாட்களுக்கு முன்னால் சார்லி கிர்கை கொலை செய்ய இரண்டு பாகிஸ்தானிய ஜிஹாதிகள் குண்டு வைத்து அது வெடிக்காமல் போனது. இப்போது அந்த பாகிஸ்தானிய ஜிஹாதிகள் அப்பாவும் மகனும் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட உள்ளனர். பாகிஸ்தானிய ஜிஹாதிகளுடன் கூட்டு வைக்கும் ட்ரம்பிற்கு சரியான பரிசு கிடைத்து உள்ளது.


KOVAIKARAN
செப் 16, 2025 17:50

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு நமது இந்திய நாடும், கள்ளத்தனமாக குடியேறியுள்ளவர்களையும், இந்தியாவின் இறையாண்மைக்கும் நாட்டின் பாதுகாப்புக்கு எதிராக பேசுபவர்களையம், அன்னிய கைக்கூலிகளுக்காக நாட்டை அவமதிக்கும் செயலில் ஈடுபடும், நம்நாட்டிற்கு எதிரானவர்களையும் நாடு கடத்தவேண்டும்.


மாபாதகன்
செப் 17, 2025 12:41

ஆமாம் நேபாளத்திற்கு இந்த சங் பரிவார கும்பல்களை நாடு கடத்தினால் இந்தியா செழுமையடையும்.


என்றும் இந்தியன்
செப் 16, 2025 17:48

இதை இந்தியாவில் செய்தால் ????இந்தியாவில் வசிக்கும் இந்தியாவிற்கு எதிராக இந்துக்களுக்கு எதிராக சதி வேலை செய்யும் 1 22 கோடி பாகிஸ்தானிய ஆதரவு முஸ்லிம்கள் 2 4 கோடி சிலர் தவிர்த்து கிறித்துவர்கள் 3 5.2 கோடி பங்களாதேஷிகள் 4 1.2 கோடி தமிழ் திமுக ஒட்டாளர்கள் + 5 கோடி இந்திய எதிர்ப்பாளர்கள் ஆனால் இந்தியாவில் வசிப்பவர்கள் ஆகிய எல்லோரும் குடியுரிமை இழந்து விடுவார்கள் அதாவது 37. 4 கோடி அந்நிய கைக்கூலிகள் இந்தியாவில் வசித்துக்கொண்டு இந்தியாவிற்கு எதிராக அதாவது பாக்கி 107 கோடி இந்தியர்களுக்கு எதிராக இருக்கின்றார்கள்


Easwar Kamal
செப் 16, 2025 17:31

இவனுங்களுக்கு வேற வேலையே இல்லையா ? பாக்கிஸ்தான் கரனுங்கதான் கொண்டாடுவானுங்க அவனுகளுக்கு கூப்பிட்டு விசா கொடுப்பானுங்க. நம்ம இந்தியாவிலே இப்போ தெலுங்கனுங்க கோட்டம் அதிகர்ச்சிக்கிட்டு இருக்கு. இவனுங்க அமெரிக்கர்கள் மட்டும் அல்ல மற்ற மொழி பேசும் நம் இந்தியர்களின் வேலை பல வழிகளில் தட்டி பரிகின்றனர். எப்படி 2000 ஆண்டில் தெலுங்கனுங்க என்றல் விசா நிராகரிக்கப்பட்டதோ அதையே போன்று மீண்டும் ஒரு நிலை வர வேண்டும்.


hariharan
செப் 16, 2025 17:14

Where is BBC / Human Rights. These are people who work on other country issues and keep silent on various issues in western countries.


Tamilan
செப் 16, 2025 16:13

குஜராத்தில் தீவிரவாதிகள் மோடியின் குடும்பத்தை துண்டாடியதைப்போல் அமெரிக்காவில் டிரம்மில் குடும்பத்தை துண்டாடிவிட்டார்கள்


Mecca Shivan
செப் 16, 2025 16:39

நீ தமிழன் என்றபோர்வையில் ஒளிந்துகொண்டிருக்கும் கலக மார்க்கம் என்பது தெரிகிறது


Raman
செப் 16, 2025 19:56

Paki spotted, anti-national element


பேசும் தமிழன்
செப் 16, 2025 22:05

என்னாது மோடியின் குடும்பத்தை துண்டாடினார்களா....இந்திய நாட்டு மக்கள் 140 கோடி பேரும் அவரின் குடும்பம் தான் ....அவர்களை அவரிடமிருந்து என்றைக்கும் பிரிக்க முடியாது....உங்களை போன்ற மதம் எனும் மதம் பிடித்த ஆட்களுக்கு மட்டும் தான் அவரை பிடிக்காது....இருந்தாலும் அவர் உங்களுக்கும் சேர்த்து தான் உழைத்து கொண்டு இருக்கிறார்....இருக்கும் நாட்டுக்கு கொஞ்சமாவது விசுவாசமாக இருங்கள் .


jss
செப் 16, 2025 15:55

இந்தியாவிலிருந்து கொண்டு இந்தியாவை தாக்குபவரகளையும் சீக்கிரம் வெளியேற்ற வேண்டும். தேச விரோதம் ஒரு பொல்லாததொற்று நோய். அந்த நோயை தடுக்க முடியாது ஒழிக்க வேண்டும்


Thravisham
செப் 16, 2025 15:22

இம்மாதிரி ஆட்களோ கட்சிகளோ இந்நாட்டில் ஏன் இல்லை? ரொஹிங்கியாக்களும் பங்களாதேஷிகளும் இலங்கை அகதிகளும் நம் நாட்டுக்கே கேடு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை