உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / எல்லாவற்றுக்கும் காரணம் வரிகள்; தம்பட்டம் அடிக்கிறார் அதிபர் டிரம்ப்!

எல்லாவற்றுக்கும் காரணம் வரிகள்; தம்பட்டம் அடிக்கிறார் அதிபர் டிரம்ப்!

வாஷிங்டன்: 'அமெரிக்கா செல்வந்த நாடாகவும், சக்தி வாய்ந்த நாடாகவும் இருப்பதற்கு காரணம் வரிகள் தான்' என அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே, உலக நாடுகளுக்கு வரி விதிப்பதில் மும்முரம் காட்டி வருகிறார். அவர் வரி விதிக்காத துறையே இல்லாத அளவுக்கு அனைத்திற்கும் வரி விதித்துள்ளார். மருந்து பொருட்கள் தொடங்கி சினிமா வரை அனைத்திற்கும் அதிக வரி விதித்து டிரம்ப் அதிரடி காட்டி உள்ளார். இந்த சூழலில் வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் டிரம்ப, எனக்கு வரிகள் ரொம்ப பிடிக்கும் என வெளிப்படையாக பேசியிருக்கிறார்.இந்நிலையில் இன்று அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்கா மீண்டும் செல்வந்த நாடாகவும், சக்திவாய்ந்த நாடாகவும், தேசிய அளவில் பாதுகாப்பாகவும் உள்ளது. எல்லாவற்றுக்கும் காரணம் வரிகள். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

அப்பாவி
அக் 25, 2025 06:23

இங்கே அப்புடி பேசினா பெருமிதம்.


ஜெய்ஹிந்த்புரம்
அக் 25, 2025 00:08

போன மாதம் வரைக்கும் ஜி.எஸ்.டி வரியை போட்டு விட்டு இதையே தான் சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.


மணிமுருகன்
அக் 24, 2025 22:53

அமெரிக்க அதிபர் மக்களுக்கு வர்த்தகம் என்று வரி போடுபவர் இவருடைய சொத்துகளுக்கு வரி கட்டுகிறாரா அமெரிக்காவில் சொத்துவரி உண்டா இல்லையென்றால் ஏற்படுத்தி அதிபரிடம் வாங்குங்கள்


Thangavel
அக் 24, 2025 21:31

உலக நாடுகளுக்கு விதிக்கும் வரியை யாரு கட்டுறா?? அந்த பொருளை வாங்கும் அமெரிக்கா காரன் தானே????


சமீபத்திய செய்தி