உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிரதமர் மோடி லண்டன் சென்றடைந்தார்

பிரதமர் மோடி லண்டன் சென்றடைந்தார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: பிரிட்டன், மாலத்தீவு ஆகிய 2 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மோடி இன்று (24.07.25) நள்ளிரவு 12 30 மணிக்கு லண்டன் சென்றடைந்தார். பிரதமர் மோடிக்கு லண்டன் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அரசுமுறை பயணமாக, றே்று(ஜூலை 23) பிரதமர் மோடி டில்லியில் இருந்து பிரிட்டன் புறப்பட்டு சென்றார். அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டாமரை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சு நடத்த உள்ளார்.இரு நாடுகளுக்கு இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் வாயிலாக, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கார்கள், துணிகள், வேளாண் உட்பட 99 சதவீத பொருட்களுக்கு வரி விலக்கு கிடைக்கும்.பிரிட்டன் பயணத்தை வெற்றிகரமாக முடித்து விட்டு, நம் அண்டை நாடான மாலத்தீவுகளுக்கு ஜூலை 25, 26 ஆகிய இரண்டு நாட்கள், பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக செல்ல உள்ளார். அந்நாட்டின் 60வது தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் அவர், அந்நாட்டு அதிபர் முஹமது முய்சுவை சந்திக்கிறார்.இதன் வாயிலாக, அதிபராக முஹமது முய்சு பதவியேற்ற பின் மாலத்தீவுக்கு முதன்முறையாக மோடி செல்ல இருப்பதால், இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Gnana Subramani
ஜூலை 24, 2025 11:20

நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடக்கும் போது தான் போகணுமா.


விருதுகுமார்
ஜூலை 24, 2025 06:21

விக்டோரியா விருது உண்டா ஏற்கனவே வாங்கியாச்சா? மாலத்தீவு ஏற்கனவே குடுத்தாச்சாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை