உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிரதமர் மோடி-ஜி ஜின்பிங் சந்திப்பு: இந்திய வெளியுறவு செயலாளர் உறுதி!

பிரதமர் மோடி-ஜி ஜின்பிங் சந்திப்பு: இந்திய வெளியுறவு செயலாளர் உறுதி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கஜன்: பிரிக்ஸ் மாநாட்டையொட்டி, பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே நாளை இரு தரப்பு சந்திப்பு நடைபெறும் என வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.பிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடின் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆகியோரை இன்று சந்தித்து பேசினார். இதனையடுத்து நாளை(அக்-23) சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசுகிறார்.மாநாட்டில் கலந்து கொள்ளும் சீன அதிபர் ஜின்பிங்கும், பிரதமர் மோடியும் இரு தரப்பு உறவு குறித்து பேச்சு நடத்தலாம் என சில நாட்களாக தகவல்கள் கசிந்து வந்தன. இந்த நிலையில், சீன வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் லின் ஜியான், அப்படி ஏதாவது இருந்தால் தகவல் தெரிவிக்கப்படும் என்று நேற்று கூறியிருந்தார்.இந்நிலையில் இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது:இரு தலைவர்களும் ரஷ்யாவின் கஜனில் உள்ளனர். நாளை சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கிறார். பேச்சு வார்த்தை நடக்க உள்ளது. இந்தியா-சீனா உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இந்த சந்திப்பு அடிக்கோடிட்டுக் காட்டும். இருவருடைய சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.இவ்வாறு விக்ரம் மிஸ்ரி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Gokul Krishnan
அக் 23, 2024 13:51

கூட இருந்து புற முதுகில் குத்தும் அமெரிக்காவை விட முகத்தில் குத்தும் சீனா மேல் ஆனால் இந்த சந்திப்பின் மூலம் இரு நாடுகள் உறவில் நெருக்கம் ஏற்பட்டால் ஆசியா கண்டத்துக்கே மிக நல்லது


கிஜன்
அக் 22, 2024 23:53

இந்த அதிபர் கை கொடுப்பாரு .... அவங்க கம்மிஸ் குரூப்பு பின்னால வேற ஒண்ண பண்ணும் .... பேசுறது ஒன்னு ...பண்றது ஒன்னு ...


Priyan Vadanad
அக் 22, 2024 23:11

இந்த நிகழ்ச்சி உண்மையிலேயே பாராட்டப்படவேண்டியதொன்று. அண்டை நாடுகளுடன் நட்புணர்வுடன் உறவுகொண்டு வாழ்வது மிகவும் நல்லது. இது குறித்து திரு ராகுல் பேசினாலும் பாராட்டும் மனம் வேண்டும்.


hari
அக் 23, 2024 10:36

இவன் ஒருத்தன் நடுநடுவுல ராகுல் ஜோக் வேற.... போயியா... அங்கிடு சும்மா வடை


RAJ
அக் 22, 2024 23:04

Be mindful... they never change


Priyan Vadanad
அக் 22, 2024 22:52

சீனா என்கிற பெயரை கேட்டாலே வெறி கொண்டு பாயும் கூட்டம் இப்போது எங்கே போனது?


N Sasikumar Yadhav
அக் 22, 2024 23:28

சீனக்கைக்கூலிகளான உங்கள மாதிரியான ஆட்களுக்கு உங்களுக்கு பிடித்த பிரியாணி வாங்கிவர போயிருக்கிறார்கள்


சுந்தர்
அக் 22, 2024 22:31

சிறப்பு. நல்லதையே நினைப்போம். சீன மக்களும் இந்திய மக்களும் ஒன்றிணைந்தால்.....!


Senthoora
அக் 23, 2024 07:03

உங்கள் கருத்து வரவேக்கதக்கது. சில வாசகர்கள் இன்னும் பிரச்னையை உருவாக்குங்க என்றுதானே எழுதுராங்க, என்னமோ தங்கள் வீட்டு பிரச்னையை விட்டுவிட்டு, நாட்டைத் திருத்தப் போறாங்களாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை