உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கேரள பாதிரியாருக்கு கவுரவம்; கார்டினலாக நியமனம்; பிரதமர் மோடி ஏற்பாட்டால் இந்தியக் குழு வாடிகன் செல்கிறது

கேரள பாதிரியாருக்கு கவுரவம்; கார்டினலாக நியமனம்; பிரதமர் மோடி ஏற்பாட்டால் இந்தியக் குழு வாடிகன் செல்கிறது

புதுடில்லி : கேரள பாதிரியார் ஒருவர் மிக மதிப்புமிக்க கார்டினலாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான பதவியேற்பு விழாவில் பங்கேற்க இந்தியாவில் இருந்து மத்திய அமைச்சர் தலைமையில் ஒரு குழு வாடிகன் செல்ல பிரதமர் மோடி பச்சை கொடி அசைத்துள்ளார். இது கிறிஸ்தவ சமூகத்தின் மக்களுக்கு மிக பெரிய கவுரவம் என பாராட்டை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் கத்தோலிக்க தலைமை குருவாக போற்றப்படுபவர் போப் பிரான்சிஸ். இவருக்கு ஆலோசனை கூறவும், கத்தோலிக்க சமய முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவதிலும் கார்டினல்களுக்கு முக்கிய பங்கு உண்டு. போப் தேர்வில் ஓட்டு போடும் தகுதியும் கார்டினல்களுக்கு உண்டு. பல்வேறு மறை மாவட்டத்திற்கு தலைமையாக கார்டினல் செயல்படுவார். உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட கார்டினல்கள் தேர்வு செய்யப்பட்டு போப்பால் நியமனம் செய்து உத்தரவிடப்படும்.இந்த முக்கிய கார்டினல் பொறுப்பில் இந்தியாவில் இருந்து கேரளாவின் செங்கனாச்சேரியை சேர்ந்த மான்சிக்னார் ஜார்ஜ் ஜேக்கப் கோவாக்காட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது பதவியேற்பு நிகழ்ச்சி நாளை (டிச.7) வாடிகனில் நடக்கிறது.இந்த விழாவில் பங்கேற்க இந்திய குழுவினர் செல்ல பிரதமர் மோடி ஆணையிட்டுள்ளார். இதன்படி மத்திய மீன்வளத்துறை அமைச்சர் ஜார்ஜ் குரியன் தலைமையில் காங்கிரஸ் எம்பி கொடிக்குனில் சுரேஷ், ராஜ்யசபா எம்பி சதம்சிங் சாந்து, பாஜ., வை சேர்ந்த அனில் ஆண்டனி, அனூப் ஆண்டனி, தாம் வடக்கன், ஆகியோர் வாடிகன் சென்றுள்ளனர். ' கார்டினல் பொறுப்பேற்பு நிகழ்வில் இந்திய அரசு சார்பில் ஒரு குழுவினர் பங்கேற்பது , கிறிஸ்துவ சமூகத்திற்கு கிடைத்த பெரும் மரியாதை ஆகும். மேலும் இந்தியர்களை இது கவுரவப்படுத்துகிறது. இந்த ஏற்பாட்டை செய்துள்ள பிரதமர் மோடிக்கு நன்றி. ' இவ்வாறு வாடிகன் செல்லும் குழுவில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

அப்பாவி
டிச 07, 2024 05:11

அடுத்த போப்பே ஜீ கை காட்டும் நபர்தான்.


venugopal s
டிச 06, 2024 22:17

கடைசியில் இப்படி ...


நிக்கோல்தாம்சன்
டிச 06, 2024 20:22

மதம் சார்ந்து இயங்காமல் இந்தியா சார்ந்து இயங்கும் ஒரு நல்ல தலைவர் மோடி என்பதை கூறுவதில் பெருமை கொள்கிறேன் , அருமையான மதிப்பு மிக்க செயலை செய்துள்ளீர் அய்யா


எவர்கிங்
டிச 06, 2024 16:27

விரைவில் இதிலும் இட ஒதுக்கீடு கேட்டு பராடலாமா என விவாதிக்கப்படுமா?


Raj Kamal
டிச 06, 2024 16:20

என்ன கண்றாவியோ... எமனுக்கு தான் வெளிச்சம். இப்படத்தை தான் நம்மவர்களும் கிண்டல் செய்கிறார்கள். நாம் எப்படி நடக்கிறோமோ அப்படியே மற்றவர்களும்.


sundarsvpr
டிச 06, 2024 15:55

ஒரு மதத்தின் அடையாளைத்தை அழித்து அதில் விரும்பிய அடையாளத்தை நிர்மாணம் செய்வது தவறு என்பதனை முஸ்லீம் மற்றும் கிருஸ்துவ மத குருமார்கள் உணரவேண்டும். இதனை போப் ஆண்டவரும் அறிவார். பாரத தேசத்தில் பல திருக்கோயில்கள் இடிக்கப்பட்டு அதன்மேல் சர்ச் மசூதிகள் கட்டப்பட்டுள்ளன. பாபர் மசூதி பல ஆண்டுகள் போராடி வெற்றிபெற்றோம். கார்டினலாக செல்லும் பாதிரியார் போப் கவனத்திற்கு கொண்டுசெல்லவேண்டும்.


அப்பாவி
டிச 06, 2024 15:53

இதுக்கெல்லாம் பிரதமர் சொல்லித்தான் வாடிகன் கிட்டே அனுமதி கேக்கணுமா? இவிங்களே போய்ப் பாக்க முடியாத லட்சணம். பரவாயில்க. வாட்டிகனில் கூட நமக்கு ஆளுங்க இருக்காங்க. அடுத்து மக்கா, மதீனாதான்.


பாரதி
டிச 06, 2024 15:40

கிறிஸ்தவம் என்றால் கடவுளை வழிபடும் மதம் என்கிறார்கள்... ஆனால் அமைப்பை பார்த்தால்... அரசியலமைப்பாக இருக்கிறது.... என்ன கண்ணராவியோ... எமனுக்கு தான் வெளிச்சம்...


naranam
டிச 06, 2024 14:37

மக்களின் வரிப்பணம் வீண்.


RAMAKRISHNAN NATESAN
டிச 06, 2024 13:31

மீரு கேட்டீங்களா விடியல் சுல்தான் ஜி... நம்மளை ஆட்சியில் அமர்த்தினவங்களோட கிருபை இனி மோடியின் பாஜகவுக்கு கிடைச்சுடும் போலிருக்கே ?


முக்கிய வீடியோ