உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தோனேஷியாவின் முன்னாள் அதிபர் சுகார்த்தோவுக்கு தேசிய ஹீரோ அந்தஸ்து: சர்வாதிகாரிக்கு கவுரவமா என எதிர்ப்பு

இந்தோனேஷியாவின் முன்னாள் அதிபர் சுகார்த்தோவுக்கு தேசிய ஹீரோ அந்தஸ்து: சர்வாதிகாரிக்கு கவுரவமா என எதிர்ப்பு

ஜகார்த்தா: இந்தோனேஷிய முன்னாள் அதிபர் சுகார்த்தோவுக்கு, நாட்டின் 'தேசிய ஹீரோ' என்ற அந்தஸ்து வழங்குவதாக, தற்போதைய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ அறிவித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். புகழாரம் தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில், சுதந்திர போ ராட்டத்தில் உயிரிழந்த வீரர்களையும், தேசியத் தலைவர்களையும் நினைவுகூரும் விதமாக, ஆண்டுதோறும் விழா கொண்டாடப்படுகிறது. அந்நாட்டின் தேசிய ஹீரோவாக அறிவிக்கப்படுபவருக்கு 'பிந்தங் மஹாபுட்டிரா' என்ற உயரிய அந்தஸ்து வழங்கப் படுகிறது. நேற்று முன்தினம் இந்தோனேஷியாவில் 'தேசிய ஹீரோ' தினம் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்ற அதிபர் பிரபோவோ சுபியாந்தோ, முன்னாள் அதிபரும், தன் முன்னாள் மாமனாருமான சுகார்த்தோவை தேசிய ஹீரோ வாக அறிவித்தார். சுகார்த்தோவின் 32 ஆண்டு ஆட்சியை, பொருளாதார வளர்ச்சி மற்றும் தேசிய ஸ்திரத்தன்மையின் அடையாளமாகக் கருதி, இந்த அங்கீகாரத்தை வழங்குவதாகக் கூறினார். மேலும் நாட்டை வறுமையில் இருந்து மீட்டு, ஆசியாவின் பொருளாதார புலியாக மாற்றியவர் என்றும் புகழாரம் சூட்டினார். இந்தோனேஷியாவில் 1967 முதல் 1998 வரை ஆட்சி செய்த சுகர் த்தோ, சர்வாதிகாரியா க அறியப்பட்டவர். மனித உரிமை மீறல், ஊழல், உறவினர்களுக்கு சலுகை என ஏராளமான குற்றச்சாட்டுகளில் சிக்கியவர். கம்யூனிஸ்டுகள், சீன வம்சாவளியினர்களுக்கு எதிராக அடக்குமுறையை கையாண்ட அவரது ஆட்சியில், 8 லட்சம் பேர் வரை கொல்லப்பட்டனர். இதேபோன்று கிழக்கு தைமூரை ஆக்கிரமிக்க 2 லட்சம் பேரை கொன்று குவித்ததாக ஐ.நா., தெரிவித்துள்ளது. கண்டனம் சுகார்த்தோவின் ஆட்சிக்கு எதிராக 1998ம் ஆண்டு மாணவர் நடத்திய மாபெரும் போராட்டத்தை தொடர்ந்து, அவர் பதவி விலகினார். அவரை நாட்டின் தேசிய ஹீரோ என்று அறிவித்ததற்கு, இந்தோனேஷிய மனித உரிமை ஆணையம் உட்பட ஏராளமான மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை