உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரூ.3,400 கோடி சொகுசு விமானம்; டிரம்பிற்கு கத்தார் அரசு பரிசு

ரூ.3,400 கோடி சொகுசு விமானம்; டிரம்பிற்கு கத்தார் அரசு பரிசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ரியாத்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கு ஆசிய நாடுகளுக்கு நான்கு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் நாடாக நேற்று சவுதிக்கு சென்றார். இன்று சவுதியின் ரியாத்தில் நடக்கும் வளைகுடா ஒத்துழைப்பு மன்ற உச்சி மாநாட்டில், ஈரானின் அணுசக்தி திட்டம், காசா போர் மற்றும் சவுதி - இஸ்ரேல் உறவு குறித்து விவாதிக்கப்பட உள்ளது.இந்நிலையில், கத்தார் மன்னர் குடும்பம், அதிபர் டிரம்புக்கு 3,400 கோடி ரூபாய் மதிப்பிலான 'போயிங் 747-8' என்ற ஆடம்பர விமானத்தை பரிசாக வழங்க முன் வந்துள்ளது. இதற்கு, அமெரிக்க எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி, டிரம்பின் குடியரசு கட்சியைச் சேர்ந்த சிலரே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vbrv2ev4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர் அளித்த பதிலில், ''இந்த மாதிரியான பரிசை நான் ஒருபோதும் நிராகரிக்க மாட்டேன். இதை மறுப்பதற்கு நான் முட்டாள் இல்லை. தற்காலிக 'ஏர் போர்ஸ் ஒன்' விமானமாக இது செயல்படும். என் பதவிக்காலத்துக்கு பின் அதிபர் அருங்காட்சியகத்துக்கு நன்கொடையாக வழங்குவேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Kulandai kannan
மே 14, 2025 11:10

அப்பட்டமான லஞ்சம். அமெரிக்கா என்றுமே ஊருக்குதான் உபதேசம்.


Karthik
மே 14, 2025 08:23

என்னதான் அமெரிக்காவுக்கு அதிபராக இருந்தாலும், அடிப்படையில் ஒரு அரசியல்வாதி.. உள்ளுக்குள் ஒரு பிசினஸ் மைண்ட் .. இருக்கத்தானே செய்யும். இவர் ஒன்றும் புத்தர் அல்லவே..


Dumilan
மே 14, 2025 07:16

திட்டமிட்ட கொலை நடக்கலாம்!!!


Mani . V
மே 14, 2025 06:54

இதெல்லாம் ஜுஜுபி. "அப்பா" குடும்பம் சொத்தில் 10 சதவிகிதம்தான் இது.


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 14, 2025 06:28

என்ன காரியம் ஆகணுமோ ??


MUTHU
மே 14, 2025 08:28

கணபதி ஐயர் பேக்கரி காமெடி நினைவுபடுத்தி கொள்ளுங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை