பிரிட்டன் சீக்கிய டாக்சி டிரைவர்கள் மீது இனவெறி தாக்குதல்
லண்டன்:பிரிட்டனில் ரயில் நிலையத்துக்கு வெளியே நின்றிருந்த இரு சீக்கிய டாக்சிடிரைவர்கள் மீது, இளைஞர் ஒருவர் மோசமான இனவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் தெரியவந்துள்ளது.ஐரோப்பிய நாடான பிரிட்டனில், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட சீக்கியர்கள் வசிக்கின்றனர். அங்குள்ள மக்கள் தொகையில், மதத்தின் அடிப்படையில் சீக்கியர்கள் நான்காவது இடத்தில் உள்ளனர். இந்நிலையில், அங்கு உள்ள வால்வர்ஹாம்டன் ரயில் நிலையம் வெளியே சீக்கிய டாக்சி டிரைவர்கள் இருவர் சாலையோரம் நின்றிருந்தனர். அவர்களை பிரிட்டன் இளைஞர் ஒருவர் கடுமையாக தாக்கியுள்ளார். மதம் தொடர்பாக கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த தாக்குதலில், ஒரு சீக்கிய டிரைவரின் தலைப்பாகை கழன்று விழுந்தது. சாலையில் விழுந்து கிடந்த மற்றொருவரின் முகம் மற்றும் மார்பில் அந்த இளைஞர் மிதிக்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.