மேலும் செய்திகள்
'வாட்ஸாப்' மூலம் மோசடி சைபர் மோசடி கும்பல் கைது
08-Oct-2025
புதுடில்லி: மியான்மரில், சீன மாபியா கும்பல் நடத்தும் சைபர் மோசடி மையங்களில் ராணுவ ஆட்சிக்குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது இந்தியர்கள் உட்பட கடத்தி வரப்பட்டு பணியாற்றிய வெளிநாட்டினர், 700 பேர் தப்பியோடினர். கைது தென்கிழ க்கு ஆசிய நாடான மியான்மரில் உலக மோசடிகளின் தலைநகரம் என அழைக்கப்படும் மியாவாட்டி பகுதி உள்ளது. தாய்லாந்து எல்லையில் உள்ள இப்பகுதியின் கே.கே.பார்க் வளாகத்தில் சீன மாபியா கும்பல் நடத்தும் சைபர் மோசடி மையங்கள், 200க்கும் மேல் உள்ளன. இங்கு, கடந்த 22ல் மியான்மரைச் சேர்ந்த ராணுவ ஆட்சிக் குழு அதிரடி சோதனை நடத்தியது. அப்போது இந்தியர்கள் உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து நல்ல சம்பளத்துடன் வேலை தருவதாக கூறி கடத்தி வரப்பட்டவர்கள் சைபர் மோசடி வேலைகளில் ஈடுபட்டது தெரியவந்தது. இவ்வாறு, 220 கட்டடங்களில், 2,200க்கும் அதிகமானோர் சைபர் குற்றங்களில் ஈடுபடுவது தெரியவந்தது. அமெரிக்கா, பிரிட்டன், சீனா நாட்டினரை குறிவைத்து கிரிப்டோ கரன்சி உள்ளிட்ட சைபர் மோசடியில் இவர்கள் ஈடுபட்டனர். எனினும் யாரும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் கைது செய்யப்படுவோம் என்ற பீதியில் இங்கு பணியாற்றும் இந்தியர்கள் உட்பட பல்வேறு நாட்டை சேர்ந்த, 700 பேர் அங்கு பாயும் மோய் ஆற்றில் குதித்து தாய்லாந்துக்கு தப்பி சென்றனர். அப்போது அலையில் சிக்கி சிலர் இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியது. அவ்வாறு தப்பி தாய்லாந்துக்கு வந்த, 618 ஆண்கள், 58 பெண்களை தாய்லாந்து ராணுவம் கைது செய்துள்ளது. வேலைவாய்ப்பு முன்னதாக கடந்த ஏப்ரலில், மியாவாட்டி பகுதியில் சைபர் குற்றத்தில் ஈடுபடுத்தப்பட்ட நான்கு இந்தியர்கள் மீட்கப்பட்டு சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டனர். இதேபோல் வேலை வாய்ப்பு தருவதாக ஏமாற்றப்பட்டு மியான்மரில் உள்ள சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி தவித்த, 500 இந்தியர்கள் கடந்த மார்ச்சில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
08-Oct-2025