| ADDED : ஜன 25, 2025 10:57 AM
கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் இளைய மகன் யோஷிதா ராஜபக்சேவை போலீசார் கைது செய்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=isvv4wo7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்தா ராஜபக்சே, பிரதமராகவும் பதவி வகித்தவர். விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டு போர் நடந்த காலத்தில் இவர் தான் அதிபராக இருந்தார். இலங்கை அரசியலில் இவரது குடும்பம் அசைக்க முடியாத செல்வாக்குடன் இருந்தது. இவர் பிரதமராகவும், இவரது ஒரு அண்ணன் கோத்தபயா அதிபராகவும் இருந்தனர். மேலும் இரு சகோதரர்கள் அமைச்சராகவும் இருந்தனர். அத்தகைய காலகட்டத்தில், கோவிட் பாதிப்பு, அதைத்தொடர்ந்து பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றால் இலங்கையில் நெருக்கடி நிலை ஏற்பட்டது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் கொந்தளித்த மக்கள் போராட்டத்தில் இறங்கினர். வேறு வழியில்லாத சூழலில் ராஜபக்சேவின் மொத்த குடும்பமும் பதவியை ராஜினாமா செய்து விட்டு தப்பி ஓடினர்.அதன்பிறகு, கடந்த 2024ல் நடந்த பொதுத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ச கட்சி மீண்டும் போட்டியிட்டு தோல்வியை தழுவியது. அந்தத் தேர்தலில் போட்டியிட்ட ராஜபக்சவின் மூத்த மகன் நமல் ராஜபக்ச, ஊழல் குற்றச்சாட்டுகளால் தோற்கடிக்கப்பட்டார்.இந்நிலையில், மஹிந்த ராஜபக்சவின் இளைய மகன் யோஷித ராஜபக்சே, பெலியட்டாவில் வைத்து இலங்கை குற்றப் புலனாய்வுத்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டரகாமாவில் சட்டவிரோதமாக சொத்து சேர்த்த குற்றத்திற்காக அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.