உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவை விட வலுவான உறவுக்கு தயார்: ரஷ்ய அதிபரிடம் பாக்., பிரதமர் உறுதி

இந்தியாவை விட வலுவான உறவுக்கு தயார்: ரஷ்ய அதிபரிடம் பாக்., பிரதமர் உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்: ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடினை சந்தித்து பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப், இந்தியா, ரஷ்யா இடையான உறவை நாங்கள் மதிக்கிறோம்; அதைவிட வலுவான உறவை வைத்திருக்க நாங்கள் விருப்புகிறோம், என, குறிப்பிட்டார். நம் அண்டை நாடான சீனாவில் நடக்கும் நிகழ்ச்சிகளில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உட்பட பல நாட்டுத் தலைவர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டங்களுக்கு இடையே, ரஷ்ய அதிபர் புடினை, நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் சந்தித்து பேசினார்.

அப்போது ஷெபாஸ் ஷெரிப் கூறியதாவது:

இந்தியாவுடனான ரஷ்யாவின் உறவை நாங்கள் மதிக்கிறோம். அதே நேரத்தில் நாங்கள் ரஷ்யாவுடன் வலுவான உறவை கட்டமைக்க விரும்புகிறோம். இது நாட்டின் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கு துணையாக இருக்கும். ரஷ்ய அதிபர் புடின் மிக துடிப்பான தலைவர். மேலும் தெற்காசியாவில் ரஷ்யாவின் சமநிலைப்படுத்தும் செயலை பாராட்டுகிறேன். பல்வேறு வகையில் பாகிஸ்தானுக்கு தொடர்ந்து உதவும் ரஷ்யாவுக்கு நன்றியை தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

SP
செப் 04, 2025 14:24

இவர் இப்படி பேசுவது பாகிஸ்தான் ராணுவத்திற்கு தெரியுமா?


Muralidharan S
செப் 04, 2025 12:58

அவரவர் எண்ணம் போல் அவரவர் வாழ்வு..


Shivakumar
செப் 04, 2025 12:16

இந்தியாவை விட வலுவான உறவுக்கு நீ என்னய்யா செய்யமுடியும். இந்தியகூட உன்னை ஒப்பிடாதே . இந்தியாவும் ரஷ்யாவும் ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள் மாதிரி. அதுசரி இப்போ நீ எதுக்கு புடின் கூட வலுவான உறவுக்கு தயார் உதார் விட்டுகிட்டு இருக்கே...


தத்வமசி
செப் 04, 2025 11:59

சவூதி அரேபியாவில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பாகிஸ்தானியர்களை வெளியேற்றியது. இது போலவே இன்னும் சில நாடுகளில் பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப் பட்டார்கள். காரணம் இதே தான். பாகிஸ்தானில் இன்று என்ன இருக்கிறது ? இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத செயல்களில் ஈடுபட பல்வேறு குழுக்களாக தீவிரவாத பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைனுக்கு எதிராக போராட இவர்களை அனுப்ப இயலாது. அமெரிக்காவுக்கு கோபம் வரும். அப்ப எப்படி வலுவான நட்பை உறவினை ஏற்படுத்துவார்கள் ?


Rathna
செப் 04, 2025 11:32

ஜிஹாதி நாட்டு பிரதமரின் பிச்சை எடுக்காத குறை. பாகிஸ்தானிய ஜிஹாதிகள் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் செய்யும் அலப்பறை ரொம்ப அதிகம். காலையில் வேலைக்கு செய்யும் நேரத்தில் ரோட்டை வழிமறித்து வழிபாடு செய்கிறேன் என்ற போர்வையில் கார்களை, ஆம்புலன்சை மறிக்கிறான் ரயில் புறப்படும் நேரத்தில் ரயிலை வழிமறித்து வழிபாடு செய்கிறான். ஒரு மதத்திற்காக உண்டான நாடு உள்ளேயே பிளவுபட்ட கிடக்கிறது. பலூசிஸ்தான், கைபேர்பகுதன்வா மாநிலங்களில் தினமும் குண்டு வெடித்து அமைதி வழி மக்கள் இறக்காத நாளே கிடையாது.


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 04, 2025 11:20

தமிழக அரசு ஸ்டிக்கர் ஒட்டி கொள்வது போல பாக்கிஸ்தானும் இந்தியா எங்கு சென்றாலும் பின்னால் போய் நின்று கொள்கிறது. நானும் ரவுடி தான் பாணியை விட்டு விட்டு இந்தியாவோடு உள்ளார்ந்து இணைந்து இருந்தால் இன்று இந்தியாவும் பாகிஸ்தானும் உலகை ஆண்டு கொண்டு இருக்கும். 1970 1980 இந்த காலகட்டத்தில் சொல்லுவார்கள் என்னவென்றால் இந்திய கிரிக்கெட் அணியும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் இணைந்து ஒரு டீமை உருவாக்கினால் அந்த டீமை யாராலும் வெல்ல முடியாது என்று. அந்த கால கட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் டாப்பில் இருந்தது. இந்தியா சுயமாக முன்னேறி கிரிக்கெட்டில் உலகையே ஆண்டு கொண்டு உள்ளது. பொருளாதாரத்தில் ஐந்தாவது இடம் மூன்றாம் இடம் நோக்கி முன்னேறிக்கொண்டு உள்ளது. இந்தியா பாகிஸ்தான் இலங்கை பர்மா பாங்காளதேஷ் போன்ற நாடுகளை ஆண்ட இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியா பெருமையுடன் தலைநிமிர்ந்து நிற்கிறது. இங்கிலாந்து அரசாங்கத்தின் வரி வருமானத்தில் பெருமளவு இந்திய கம்பெனிகள் தான் கொடுக்கிறது. பாகிஸ்தான் இன்னமும் யாரிடம் கையேந்தலாம் என்று அலைந்து கொண்டு உள்ளது. மதம் என்னும் அரக்கன் பழமைவாத சிந்தனைகள் அடுத்த நாட்டின் மீது பொறாமை வெறுப்பு உணர்ச்சி அந்த நாட்டை அழித்து விடும்.


Ramesh Sargam
செப் 04, 2025 09:46

பாகிஸ்தானின் பேச்சை யாரும் நம்பமாட்டார்கள்.


அப்பாவி
செப் 04, 2025 09:43

உன் கிட்டே விக்குறதுக்கு என்ன இருக்கு? ஆயில், ஏவுகணை வாங்குறதுக்கு துட்டு வெச்சிருக்கியா?


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
செப் 04, 2025 09:36

படுத்தே விட்ட பாக்


கண்ணன்
செப் 04, 2025 09:31

பாவம், ட்ரம்ப் இவரை அழைத்துச் சாப்பாடு கொடுக்கவில்லை- அதனால் இப்படி ட்ரம்பிற்கு எச்சரிக்கை!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை