உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈரானுக்கு உதவ தயார்: ரஷ்ய அதிபர் புடின் அறிவிப்பு

ஈரானுக்கு உதவ தயார்: ரஷ்ய அதிபர் புடின் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில் ஈரானுக்கு உதவ தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் புடின் கூறினார்.ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி ரஷ்யா சென்றுள்ளார். அவர் மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேசினார். இருவரும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது குறித்து பேசினர்.அப்போது புடின் கூறியதாவது:மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் நெருக்கடிக்கு மத்தியில் ஈரானிய மக்களுக்கு ஆதரவாக ரஷ்யா தீவிரமாக இருந்து வருகிறது.ஈரானுடன் பல ஆண்டுகளாக நெருங்கிய உறவுகள் ஆழமாக இருக்கிறது. அதே நேரத்தில் இஸ்ரேலுடன் கலாச்சார உறவுகள் மற்றும் மக்கள் தொடர்புகள் உள்ளது. இஸ்ரேலில் 20 லட்சம் ரஷ்ய மொழி பேசும் வாழ்கிறார்கள் என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளுடன் ரஷ்யா வரலாற்று நட்பு உறவுகளை கொண்டிருக்கிறது. இங்குள்ள மக்கள் தொகையில் 15 சதவீதம் பேர் முஸ்லிம்கள் இங்குள்ளனர்.ஆகவே, இஸ்ரேல், அமெரிக்காவுடன் மோதல் நடைபெறும் நிலையில் ஈரானுக்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்யவும் இரு நாடுகளுக்கு இடையே சமரசம் செய்து வைக்கவும் தயாராக இருக்கிறோம். அதே நேரத்தில் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்காவை வன்மையாக கண்டிக்கிறேன்.இவ்வாறு புடின் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தாமரை மலர்கிறது
ஜூன் 24, 2025 01:54

புடினுக்கு உதவ யாருமில்லாத நிலையில் அவர் தவித்து வருகிறார். இந்த லட்சணத்தில் இவர் கொமைனிக்கு உதவபோகிறாராம். கஞ்சன் ஜங்கா சீனாவை நம்பி ப்ரயோஜனம் இல்லை என்று ஒவ்வொரு நாட்டிற்கு புரியவருகிறது.


Ganapathy
ஜூன் 23, 2025 20:19

ஏற்கனவே ஆரம்பிச்ச பஞ்சாயத்தே இன்னும் 3 வருசமா முடியல...


Ramesh Sargam
ஜூன் 23, 2025 19:41

உக்ரைன் போர் முடிந்துவிட்டதா? ஏன் இப்பொழுது புடின் ஈரானுக்கு உதவ முன்வருகிறார்? ஒருவேளை இவருடைய பரம எதிரி டிரம்ப் இஸ்ரேலுக்கு உதவுவதால், இவர் ஈரானுக்கு உதவ முயற்சிக்கிறாரா? இவர்கள் இருவரும் அவரவர் நாட்டின் அதிபர்களாக அவர்கள் நாட்டு மக்களுக்காக என்னதான் செய்கிறார்கள்? போரிலேயே கவனமாக இருக்கிறார்கள் தவிர, தங்கள் நாட்டு மக்களுக்காக என்னதான் செய்கிறார்கள்?


Kasimani Baskaran
ஜூன் 23, 2025 19:12

அரபிகளை விட பல லட்சம் இஸ்ரேலின் இருக்கும் ரஷ்யர்கள் முக்கியம்... ஆகவே ஒன்றும் நடக்காது. ஈரானுக்கு துருக்கி வேண்டுமானால் ஆதரவாக ஒன்று அல்லது இரண்டு விமானம் அளவுக்கு சீன டிரோன்களை கொடுக்கும். லாவகமாக அமெரிக்காவுக்கு வாலைக்காட்டி தப்பித்து விடும். பாகிஸ்தானின் அணுவாயுதங்கள் எல்லாம் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதால் பாகிஸ்தான் அடக்கியே வாசிக்கும்.


RAJ
ஜூன் 23, 2025 18:57

Putin...the. man with courage..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை