உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவுக்கு கூடுதல் வரியா? டிரம்ப் நிலையில் மாற்றம்

இந்தியாவுக்கு கூடுதல் வரியா? டிரம்ப் நிலையில் மாற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது கூடுதல் வரி விதிப்பது குறித்து தற்போது பரிசீலனை செய்யப்போவதில்லை எனவும், 2- 3 வாரங்களுக்கு பிறகு முடிவு செய்யப்படும் என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.இந்தியா மீது 25 சதவீத வரி விதித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி அபராதமாக மற்றொரு 25 சதவீத வரி விதிப்பதாக அறிவித்து இருந்தார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இதனை ஏற்க முடியாது எனத் தெரிவித்து இருந்தது. ரஷ்யாவிடம் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இதனை நிறுத்தியதாக தெரியவில்லை. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=krbjobi2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதன் பிறகும், உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்துவது தொடர்பாக ரஷ்யா அதிபர் புடினுடன் டிரம்ப் நடத்தும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா கூறியிருந்தது. இந்நிலையில் நேற்று (ஆக.,16) அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் புடினை, அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்து பேசினார். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. அதேநேரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என இரு நாட்டு தலைவர்களும் தெரிவித்தனர்.இதன் பிறகு அமெரிக்கா மீடியாவுக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் கூறியதாவது: அலாஸ்காவில் நடந்த சந்திப்பு நன்றாக இருந்தது. இதற்கு 10க்கு 10 மதிப்பெண் வழங்கலாம். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது கூடுத் வரி விதிப்பது தொடர்பாக, உடனடியாக எந்த முடிவும் எடுக்கப்போவதில்லை. இரண்டு அல்லது மூன்று வாரத்தில் முடிவெடுக்க வாய்ப்பு உள்ளது. தற்போது கூடுதல் வரி விதிக்கப்பட்டால், அது அவர்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும். அமெரிக்கா விதித்த வரி விதிப்பு காரணமாக ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய்வாங்குவதை நிறுத்திவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

எஸ் எஸ்
ஆக 17, 2025 14:33

டிரம்ப் திராவிட கட்சி அரசியல்வாதி போல் ஆகி விட்டார்


SP
ஆக 17, 2025 08:17

பொய்தான் மூலதனம் அதை வைத்து அரசியல் செய்து வருகிறார் ட்ரம்பர்


K.Ravi Chandran , Pudukkottai
ஆக 16, 2025 23:22

இவர் ஏதோ வேறு ஒரு உலகத்தில் கற்பனையில் இருக்கிறார். இவரது தவறான கொள்கைகளால் பேரழிவு அமெரிக்காவுக்குத்தான். இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கவில்லை என உன்னிடம் யார் சொன்னது ? உமக்கும் பப்புவிற்கும் உள்ள தொடர்பால் பப்பு இங்கு அரசியல் செய்ய பொய் மூட்டையாக அவிழ்த்து விடுகிறார். இந்தியா மறுத்த நிலையிலும் ஆபரேசன் சிந்தூர் என்னால் தான் நிறுத்தப்பட்டது என தொடர்ந்து கூறி வருகிறார். எங்கே உம்மிடத்தில் அதற்கான ஆதாரம் இருந்தால் சொல். இரண்டாம் உலக யுத்தத்தில் கோயாபல்ஸ் பொய் என பாடத்தில் படித்திருக்கிறோம் அந்த கோயாபல்ஸ்க்கே நீதான் குருநாதர்.


ManiMurugan Murugan
ஆக 16, 2025 23:17

அமெரிக்க அதிபர் எதற்காக இப்படி பொய் சொல்கிறார்?பாரதம் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டது என்றுகூறுவது நாகரிக மற்ற செயல்


rajkumar
ஆக 16, 2025 22:37

bro this is MODI JI


Iyer
ஆக 16, 2025 22:18

அடல்ஜி அணுசோதனை செய்தவுடன் அமரிக்கா - பாரதம் மீது சாங்க்ஷன்ஸ் அமலாக்கினார்கள் ஆனால் ஒன்றும் கிழிக்க முடியவில்லை


Vijay D Ratnam
ஆக 16, 2025 21:50

ஒரு மனுஷன் பொய் பேசலாம், ஆனா இப்படி ஏக்கர் கணக்குல அவுத்து உடக்கூடாதுப்பா. தற்போது இந்தியா மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டால், அது அவர்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும். அமெரிக்கா விதித்த வரி விதிப்பு காரணமாக ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய்வாங்குவதை நிறுத்திவிட்டது. இவ்வாறு அவர் கூறினார். பிரேசில் அதிபர் போன வாரம் சொன்னது உண்மைதானோ என்று தோன்றுகிறது. அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போல ஒரு தற்குறி அதிபரை உலகம் பார்த்தது இல்லை என்றார்.


நிக்கோல்தாம்சன்
ஆக 16, 2025 21:29

அமேரிக்கா எல்லா நாடுகளையும் உடைக்கிறது , அந்த நாசமாய் போன நாட்டை யார் தான் உடைப்பார்களோ ? முஸ்லிம்கள் அங்கே பெரும்பான்மை ஆகின்றனர் என்று சந்தோஷப்பட்டேன் , ஆனால் அரபு நாடுகளை இன்னமும் துண்டாடி வேட்டையாடி வருகிறது . சரி போகட்டும் சீனா உடைக்கும் என்று நினைத்தேன் , நாசமா போயிட்டுது எனது நினைப்பு , இப்போ என்னதான் செய்வது ?


aaR Kay
ஆக 16, 2025 22:11

மோடிஜி உடைப்பார். கவலை வேண்டாம்.


Iyer
ஆக 16, 2025 22:13

நிக்கோல் , அமெரிக்காவை உடைப்பது பற்றி தெரியாது. ஆனால் மோதி அமெரிக்காவின் திமிர் , ஆணவம் எல்லாவற்றையும் அடக்கி ஒடுக்குவார்


நிக்கோல்தாம்சன்
ஆக 17, 2025 13:45

நிஜத்தில் அது அவ்ளோ ஈஸி இல்லை , மோடிஜி ரிட்டையர் ஆகும் தருணம் வந்துவிட்டதாக சூசகம் தெரிவிக்கின்றனர் , அந்த பதவியின் ஆசையில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் முதல் அனைவரும் அலைகின்றனர், அப்படியிருக்கையில் மோடிஜி கன்டினியூ பண்ணினாள் விடமாட்டார்கள்


தமிழ்வேள்
ஆக 16, 2025 20:44

டிரம்ப்பின் வரி விதிப்பு அமெரிக்கா வியாபாரத்துக்குத்தான் ஆப்பு...பிற நாட்டு உற்பத்தி பொருட்களை நம்பியுள்ளது அமெரிக்கா... கிறிஸ்துமஸ் காலத்தில் ஆண்டின் ஒட்டுமொத்த டார்கெட் ன் மிச்சம் மீதியை முடிக்க வேண்டிய நெருக்கடியில் இவரது வரிவிதிப்பு அமெரிக்க மக்கள் வணிக நிறுவனங்களின் வருமானம் மற்றும் லாபத்தை பதம் பார்க்கும் என்பதால் இப்படி பம்முகிறார்... இதுவும் சிலகாலம்..


SS Shiv
ஆக 16, 2025 20:27

இந்த டிரம்ப் போன ஜென்மத்துல திராவிட கூமுட்டையா இருந்திருப்பானோ.... பொய்மூட்டையா அவுத்து உடுறானே


புதிய வீடியோ