உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வெனிசுலா அதிபர் கைதுக்கு ரூ.415 கோடி சன்மானம் அறிவிப்பு

வெனிசுலா அதிபர் கைதுக்கு ரூ.415 கோடி சன்மானம் அறிவிப்பு

மியாமி : தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று, வெனிசுலா. அந்நாட்டில் மூன்றாவது முறையாக நிகோலஸ் மதுரோ அதிபராக உள்ளார். இவர், உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராகச் செயல்படுவதாகவும், போதைப்பொருள் கும்பல்களுடன் இணைந்து அமெரிக்காவிற்குள் போதைப் பொருட்களை சப்ளை செய்வதாகவும் கடந்த 2020ம் ஆண்டு அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டினார். அவருக்கு எதிராக மன்ஹாட்டன் கூட்டாட்சி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, நிக்கோலஸ் மதுரோவை கைது செய்ய உதவுவோருக்கு, 131 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது. பின்னர், ஜோ பைடன் அரசு அந்தத் தொகையை 200 கோடி ரூபாயாக உயர்த்தியது. இந்தத் தொகை, இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின் சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனைப் பிடிக்க அமெரிக்கா அறிவித்த பரிசுத்தொகைக்கு நிகரானதாகும். இவ்வளவு பெரிய பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டபோதிலும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி மதுரோ பதவியில் நீடித்து வருகிறார். இந்தநிலையில், தற்போது மதுரோவை கைது செய்வதற்கான சன்மானத்தை டொனால்டு டிரம்ப் அரசு இரட்டிப்பாக்கி 415 கோடி ரூபாயாக அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Thravisham
ஆக 09, 2025 11:35

விநாயகரின் திருவுருவ படத்திற்கு செருப்பு மாலையணிவித்து ஊர்வலம் சென்ற சொரியார் குடும்ப த்ரவிஷன்களுக்கு கடவுளின் தண்டனை எப்போ?


Anand
ஆக 09, 2025 11:32

பதிலுக்கு, ட்ரம்பை கைது செய்தால் ஒரு டாலர் சன்மானம் என சொன்னால் முகத்தை எங்கு கொண்டு போய் வைப்பான்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை