உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நெடுந்தொலைவு பாயும் ஏவுகணைகளை வீசி ரஷ்யா மீது தாக்குதல்; உக்ரைன் செயலால் தீவிரமாகும் போர்!

நெடுந்தொலைவு பாயும் ஏவுகணைகளை வீசி ரஷ்யா மீது தாக்குதல்; உக்ரைன் செயலால் தீவிரமாகும் போர்!

மாஸ்கோ: அமெரிக்கா தயாரித்த நீண்ட தூர ஏவுகணைகளை ரஷ்யா மீது ஏவி, உக்ரைன் தாக்குதல் நடத்தியது. 'நாங்கள் 5 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திட்டோம்' என ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் 1000வது நாளை எட்டி உள்ளது. உக்ரைனுக்கு அமெரிக்கா, உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. பதில் தாக்குதல் நடத்துவதற்கு தேவையான ஆயுதங்களையும் வழங்கி உதவுகின்றன.இந்நிலையில், ரஷ்யாவிற்குள் தொலைதூரத்திற்கு சென்று இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்கா அனுமதி அளித்தது. இதனால் கோபம் அடைந்த, ரஷ்ய அதிபர் புடின் கடும் கண்டனம் தெரிவித்தார். அதுமட்டுமின்றி அவர் ரஷ்ய படைகள் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கி அதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டார். தற்போது இரு நாட்டுகள் போர் தீவிரமடைந்தது. இந்த சூழலில், அமெரிக்கா தயாரித்த 6 நீண்ட தூர ஏவுகணையை ரஷ்யாவின் பல பகுதிகளில் ஏவி, உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இது குறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளில், அமெரிக்கா தயாரித்த 6 நீண்ட தூர ஏவுகணையை உக்ரைன் ஏவி தாக்குதல் நடத்தியது. இதில் 5 ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டது. மற்றொரு ஏவுகணை சேதமடைந்தது. ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டத்தில், அதில் உள்ள பாகங்கள் கீழே விழுந்து தீ விபத்து ஏற்பட்டது. இதனால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதற்கிடையில், அமெரிக்கா அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், 'உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி வரும் ஆதரவு நிறுத்தப்படும். நடந்து வரும் போர் முடிவுக்கு கொண்டு வரப்படும்' என உறுதியளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

அப்பாவி
நவ 20, 2024 21:05

இது போருக்கான நேரமில்லைன்னு சொல்லி கட்டிப் புடிச்சாலும் கேக்க மாட்டேங்குறாங்களே. எக்கேடோ கெட்டுப் போங்க.


அப்பாவி
நவ 20, 2024 21:04

ஜனவரி 20 க்குள் ஒரு முடிவு தெரிஞ்சாகணும்.


Columbus
நவ 20, 2024 12:06

No use blaming Biden or his administration. It is the Deep State and Arns manufacturers who are terrified of Trump are in action. Biden is a puppet in their hands.


kantharvan
நவ 20, 2024 11:43

என்னாச்சு சுப்பு உக்ரைன் ஆதரவு அவ்ளவுதானா?? நம்ம அகில உலக பேமஸ் ஆண்டி போரை நிறுத்திடுவாருன்னு சொன்னதெல்லாம் என்னாச்சு?? மணிபூர் மக்களுக்கு சொன்ன மாதிரியே பிம்பிளிக்கி பிளாப்பித்தானா??


M Ramachandran
நவ 20, 2024 10:14

அமெரிக்காவின் ஆயுதங்கள் தயாரிப்பின் field ஆக மற்ற நாடுகளை உபயோக படுத்துவது மிருக தனமானது. அரக்கன் pydan என்ற மலை பாம்பு அமெரிக்கா மக்களால் விழுங்க பட்டு விட்டது அது ஜீரணமாக ஜனவரி மாதம் வரை பொறுத்திருக்க வேண்டும்.


sankaranarayanan
நவ 20, 2024 10:12

நடக்கும்போதே தள்ளாடி தடுக்கி விழும் வாழ்க்கையின் இந்த கடைசி கால ஜனாதிபதிக்கு இந்த புத்தி எங்கிருந்து வந்தது தான் விரைவில் அழிவதும் இல்லாமல் உலகத்தை மனித வர்க்கத்தையே அழிக்க நினைத்து இந்த ஏவுகணைகளை வீச சொல்லி உளறுகிறார்


Palanisamy T
நவ 20, 2024 15:44

இவ்வளவு தெளிவாக பேசும் நீங்கள் தன் நாட்டிற்குள் மோசமான வடகொரியா ராணுவத்தை அனுமதித்து வரவேற்று அவர்களை பயன்படுத்தி உக்ரேன் மீது தாக்குதல் நடத்த அனுமதி தந்த புடின் அவர்கள் செய்தது சரிதானா? உக்ரேன் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய போர்க் குற்றங்கள் செய்த புட்டின்மீது ICC கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது உங்களுக்கு தெரியாதா? அவர் குற்றமற்றவர் என்றால் ஏன் இப்போது பிரேசிலில் நடந்த G 20 மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. கைதுவாரன்ட் இருக்கும் நிலையில் எப்படி கலந்துக் கொள்வார்? அவ்வளவு தைரியசாலி


Rpalnivelu
நவ 20, 2024 10:08

காமெடியனின் கையில் சிக்கிய பூமாலை உக்ரைன்.


SUBBU,MADURAI
நவ 20, 2024 09:39

உக்ரைன் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டு மிகப் பெரிய அழிவை நோக்கிய பயணத்தை துவங்கி விட்டது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை