உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் துணிகரம் ரூ. 17.50 கோடி நகைகள் 90 வினாடிகளில் கொள்ளை

அமெரிக்காவில் துணிகரம் ரூ. 17.50 கோடி நகைகள் 90 வினாடிகளில் கொள்ளை

வாஷிங்டன்: அமெரிக்காவில் பட்டப்பகலில் நகைக் கடையில் நுழைந்த முகமூடி கும்பல், வெறும் 90 வினாடிகளில், 17.5 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர, தங்க நகைகளுடன், ஆடம்பர கைக்கடிகாரங்களையும் கொள்ளையடித்துச் சென்றது. அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தின் மேற்கு சியாட்டில் உள்ளது மெனாஷே சன்ஸ்' என்ற நகைக்கடை. இந்த கடையில் நேற்று முன்தினம் மதிய நேரத்தில் ஊழியர்கள் விற்பனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முகமூடி அணிந்தபடி நான்கு பேர் வந்தனர். அவர்கள், கரடி ஸ்ப்ரே, துப்பாக்கி போன்ற டேசர் எனப்படும் மின்னழுத்த ஆயுதத்தால் ஊழியர்களை தாக்கியுள்ளனர். இதில் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. பின்னர் அங்கு ஒரு பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ஆறரை கோடி ரூபாய் மதிப்புள்ள, 'ரோலக்ஸ்' கடிகாரங்களையும், இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத நெக்லசையும் கொள்ளையடித்தனர். மேலும் அங்கிருந்த தங்க, வைர நகைகளையும் அள்ளிச் சென்றனர். பட்டப்பகலில் இந்த துணிகர கொள்ளையை வெறும், 90 வினாடிகளில் கொள்ளையர்கள் அரங்கேற்றினர். இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகியுள்ளது. அதனை வைத்து போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

peermohammednurullaraja peermohammednurullaraja
ஆக 17, 2025 20:03

இது எப்படி சாத்தியம்.


ManiMurugan Murugan
ஆக 17, 2025 18:53

இதில் உள்ள பதிவுகள் அனைத்தும் அருமை அமெரிக்கா வரி போட போட இன்னும் பல பிரச்சனை தலை தூக்கும் அமெரிக்க அதிபர் அனைவருக்கும் மனைவியை விட்டு கடிதம் எழுத சொல்வார்.


Ramesh Sargam
ஆக 17, 2025 12:50

திமு கழக கண்மணிகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி. நம்மைவிட பெரிய கொள்ளையர்கள் அமெரிக்காவிலா... என்கிற அதிர்ச்சி


Kasimani Baskaran
ஆக 17, 2025 08:31

இதென்ன பிரமாதம். தமிழகத்தில் நான் லஞ்சம் வாங்கினேன், குற்றம் செய்தேன், பணத்தை திரும்ப கொடுத்துவிட்டபடியால் நான் நிரபராதி என்று வாதாடுகிறார்கள். அதையும் நீதிமன்றம் ரசிக்கிறது. லஞ்சம் வாங்காமலா பணத்தை திரும்ப கொடுத்தீர்கள் என்ற எளிமையான கேள்வியைக்கூட நீதிமன்றம் கேட்கவில்லை என்பது மகா சோகம். பல ஏழைகள் வேலை வாங்க நிலபுலன்களை விற்று பணம் கொடுத்து இருக்கிறார்கள்.


பாரத புதல்வன்
ஆக 17, 2025 08:15

அநேகமாக திராவிட மாடலிடம் பயிற்சி பெற்ற நபராக இருக்கலாம்....


முக்கிய வீடியோ