UPDATED : நவ 21, 2024 05:38 PM | ADDED : நவ 21, 2024 05:30 PM
கீவ்: கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பயன்படுத்தி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி உள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, 2022 பிப்., 22ல் ரஷ்யா போர் தொடுத்தது. 1,000 நாட்களை கடந்து நடக்கும் இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் உதவி வருகின்றன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=h713znf0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உக்ரைனுக்கு அமெரிக்கா சக்திவாய்ந்த மற்றும் நீண்ட துார இலக்குகளை துல்லியமாக தாக்கக்கூடிய, ஏ.டி.ஏ.சி.எம்.எஸ்., எனப்படும் ஒலியின் வேகத்துக்கு இணையாக செல்லக்கூடிய ஏவுகணையை வழங்கியது.இந்த ஏவுகணையை உக்ரைன் நேற்று முன்தினம் ரஷ்யாவுக்கு எதிராக ஏவியது. ரஷ்யாவின் பிரயார்க் பிராந்தியத்தின் மீது உக்ரைன் ஏவிய ஆறு ஏவுகணைகளில், ஐந்தை வானிலேயே தடுத்து அழித்தது ரஷ்யா. ஒன்று சேதமடைந்தது. இதனால், ரஷ்யாவில் பெரிய சேதம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. உக்ரைனின் இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி தருவோம் என ரஷ்யா தெரிவித்து இருந்தது.இதனிடையே , ரஷ்யாவுக்கு எதிரான போரில் கண்ணிவெடிகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி வழங்கியது. இதற்கு நன்றி தெரிவித்து இருந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இதன் மூலம் ரஷ்ய படைகளை தடுக்க முடியும் எனக்கூறி இருந்தார்.இந்நிலையில், கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணையை பயன்படுத்தி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி உள்ளது. அஷ்த்ராகான் பகுதியில் இருந்து இந்த ஏவுகணையை ரஷ்யா ஏவியது தெரியவந்துள்ளது. உக்ரைன் மீதான தாக்குதல் துவங்கிய பிறகு, சக்திவாய்ந்த ஏவுகணையை பயன்படுத்தி ரஷ்யா தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறையாகும். இதனிடையே, உக்ரைன் ஏவிய பிரிட்டனை சேர்ந்த ஏவுகணை மற்றும் ராக்கெட்களை தாக்கி அழித்ததாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.