உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஐரோப்பா போரை நாடினால் ரஷ்யா தயார்; அதிபர் புடின் திட்டவட்டம்

ஐரோப்பா போரை நாடினால் ரஷ்யா தயார்; அதிபர் புடின் திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: 'ஐரோப்பா போரை நாடினால் ரஷ்யா தயாராக உள்ளது' என அதிபர் புடின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதித் திட்டம் குறித்து, அதிபர் டிரம்ப் தூதர்களுடன் புடின் 5 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், இது தொடர்பாக ரஷ்ய அதிபர் புடின் கூறியதாவது: ஐரோப்பா போரை நாடினால் அதற்கு ரஷ்யா தயாராக உள்ளது. உக்ரைன் மோதலுக்கான அமைதித் திட்டத்தை இறுதி செய்வதற்கான அமெரிக்கா தலைமையிலான முயற்சிகளை ஐரோப்பிய தலைவர்கள் குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றனர். அவர்களிடம் அமைதியை உருவாக்குவதற்கு எந்த திட்டமும் இல்லை. அவர்கள் போரின் பக்கம் உள்ளனர். இந்திய பயணத்தின் போது நானும், பிரதமர் மோடியும் இந்திய இறக்குமதிகள் குறித்து விவாதிப்போம். இந்திய இறக்குமதியை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை நடத்துவோம். எங்கள் தேசிய நலன்களைக் கருத்தில் கொண்டு செயல்படும், பொருளாதாரக் கொள்கையை நாங்கள் தொடர்ந்து பின்பற்றுவோம். இவ்வாறு அதிபர் புடின் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ