உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா தயார்; புடின் உடன் சந்திப்புக்கு முன் டிரம்ப் பேட்டி

போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா தயார்; புடின் உடன் சந்திப்புக்கு முன் டிரம்ப் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ''போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா தயாராக உள்ளது. சமாதானம் செய்ய ரஷ்ய அதிபர் புடின் தயாராக இருக்கிறார்'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர் புடினை அலாஸ்காவில் சந்தித்து பேச உள்ளார். அப்போது 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் வலியுறுத்த இருக்கிறார். இந்நிலையில் நிருபர்கள் சந்திப்பில் டிரம்ப் கூறியதாவது:நான் 6 மாதங்களுக்குள் 6 போர்களைத் தீர்த்துவிட்டேன். இந்தியா-பாகிஸ்தான் போரின் போது 6 முதல் 7 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அவை அணு ஆயுதம் ஏந்தத் தயாராக இருந்தன. நாங்கள் அதைத் தீர்த்தோம். போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா தயாராக உள்ளது. சமாதானம் செய்ய ரஷ்ய அதிபர் புடின் தயாராக இருக்கிறார். அதேபோல், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சமாதானம் செய்வார் என்று நான் நினைக்கிறேன். அலாஸ்காவில் புடினுடனான ஒரு முக்கியமான சந்திப்பு. நாங்கள் உக்ரைனுக்கு எந்தப் பணத்தையும் செலுத்தவில்லை. ஆனால் நாங்கள் ராணுவ உபகரணங்களை வழங்குகிறோம். உக்ரைன்- ரஷ்யா போர் தொடங்கியது போது நான் அதிபராக இருந்திருந்தால் இந்தப் போர் ஒருபோதும் நடந்திருக்காது. இவ்வாறு டிரம்ப் கூறினார்.

உலகின் சந்தையை...!

இளைஞர்கள் உற்பத்தித்துறையில் கவனம் செலுத்த வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்தியதன் மூலம் பல கோடி மக்களின் உயிரை காப்பாற்றினோம். உலகின் சந்தையை இந்தியா ஆள வேண்டும். தகவல் தொழில்நுட்பம் முதல் சைபர் பாதுகாப்பு வரை தற்சார்பு நிலையை கொண்டு வருவோம்.அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களுக்கு கதவுகள் திறந்துள்ளன. வெளிநாடுகளின் சமூக வலைதளங்களை நாம் ஏன் சார்ந்திருக்க வேண்டும்? சொந்த நாட்டின் சமூக வலைதளம் குறித்து நமது இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

ரங்ஸ்
ஆக 16, 2025 09:51

பிள்ளையையும் கிள்ளி விடுவார். அழும்போது தொட்டிலையும் ஆட்டுவது? மாதிரி பாவ்லா செய்கிறார்.


Balasubramanian
ஆக 15, 2025 20:12

ஒரு வழியாக அவர்கள் நிறுத்திய உடன், நான் தான் நிறுத்தினேன் என்று கூற வேண்டியது தானே! பூ விழுந்த உடன் பூ என்றும் தலை ஆனால் தலை என்றும் கூறும் வரலாறு காணாத தலைவர் நம் டோனால்டு டிரமப்!


R K Raman
ஆக 15, 2025 18:30

நோபல் பரிசு உண்டு என்று சொல்லி விட்டால் பைத்தியம் தெளிந்து விடும்....


என்றும் இந்தியன்
ஆக 15, 2025 18:16

இந்தியா– பாகிஸ்தான் போர் நிறுத்தம் என்னால் தான் என்று உளறியவர் இப்படித்தான் உளறுவார். இதற்காகத்தானே வயது வரம்பு அரசு வேலைக்கு 58-60 என்று உறுதி செய்தார்கள். இந்த அரசு பதவிக்கும் அப்படி செய்யவேண்டியது தானே. Trump 79 வயது என்றால் உளறல் திசை அறியாமை இயற்கை தானே


Ravi Chandran K, Pudukkottai
ஆக 15, 2025 15:19

நீ மட்டும் ஐந்து கோடி பணம் இப்பவே தரலேன்னா உன்னோட இந்த குழந்தைய மாடிலேர்ந்து கீழே போட்டுருவேன் ஹா, ஹா, ஹா என மிரட்டும் தமிழ்ப் பட வில்லன் ரேஞ்சுக்கு இறங்கிட்டாரு டிரம்ப். இதே பாணியில போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு மட்டும் நீ சம்மதிக்கலேனா இந்தியா மேல 250 சதவீதம் வரி போடுவேன் பாத்துக்க ஹா, ஹா, ஹா என ரஷ்யாவை மிரட்டுகிறார். கடைசில வில்லன் டிரம்ப் உலக மக்கள் முன்னிலையில் காமெடி வில்லன் ஆவது நிச்சயம்.


N Srinivasan
ஆக 15, 2025 14:06

அது சரி நீ முதலில் தயாரா ? எல்லாம் நாடகம். இந்திய அரசியல் வாதிகளை மிஞ்சிய ஒரு அரசியல் வாதி


sankaranarayanan
ஆக 15, 2025 13:18

இந்த சந்திப்பிற்கு பிறகு அமெரிக்க அதிபர் எவ்வளவு வரி ரஷ்யாமீது சுமத்தப்போகிறாரோ தெரியவில்லை 50 புள்ளிகள் அல்ல 100 புள்ளிகள் உயர்த்திவிட்டேன் என்றே முழங்கிவிடுவார் இதுதான் நடக்கப்போவது நாளை மாலையே பிறகு வரி அதிபர் மன்னிக்கவும் தயாரிப் உயர்த்தும் அமெரிக்க அதிபர் பல பல புதிய கட்டளைகளை வெளியிடுவார்


Kchandra Sekaran
ஆக 15, 2025 14:18

புடின் உடன் பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தால் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிப்பாராம் டிரம்ப்.. வியட்னாம் ஆச்சு, ஈராக் ஆச்சு, ஆப்கானிஸ்த்தான் ஆச்சு, ஈரான் ஆச்சு அடுத்து இந்தியா கூட நேரடியாகவோ அல்லது பாக்கிஸ் பின்னால் ஒளிந்து கொண்டோ போர் தொடுக்கும் கெட்ட எண்ணத்தில் டிரப் உள்ளார் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது


ரங்ஸ்
ஆக 15, 2025 13:17

சண்டையை போடுறவங்க சந்தோஷமா விடாமல் சண்டை போட்டுக்கொண்டு இருக்காங்க. இவரு நடுவுல புகுந்து மிரட்டி ஏதாவது லவுட்டலாம்னு பார்க்கிறார்.


ரங்ஸ்
ஆக 15, 2025 13:10

பிள்ளையையும் கிள்ளி விடுவார். அழும்போது தொட்டிலையும் ஆட்டுவது? மாதிரி பாவ்லா செய்கிறார்.


Sun
ஆக 15, 2025 11:26

போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா தயார். டிரம்பர். இத புடின்ல சொல்லனும். நீ எதுக்கு சொல்றே? நீ என்னக்கி புடினோட ஆர்.எஸ்.பாரதி ஆனாய்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை