வாசகர்கள் கருத்துகள் ( 1 )
when this war comes to an end what do councils do, they want money from the USA and Russia so keeping quite disgusting
கீவ்: உக்ரைனில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில், பஸ்சில் பயணம் செய்த 9 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 4 பேர் பலத்த காயம் அடைந்தனர்.ரஷ்யாவும், உக்ரைனும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முதல் நேரடி அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்த உள்ளன. ரஷ்ய அதிபர் புடின் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தார். இதனை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஏற்றுக்கொண்டார். இருநாட்டு பிரதிநிதிகளும் நேரடி அமைதிப் பேச்சுவார்த்தைக்காக நேற்று துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் கூடினர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rr3awgz5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பாதுகாப்பு அமைச்சர் ருஸ்டெம் உமரோவ் தலைமையிலான உக்ரைன் தூதுக்குழு, அதிபரின் உதவியாளர் மெடின்ஸ்கி தலைமையிலான ரஷ்ய குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இந்தச் சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நடந்தது. இந்நிலையில், இன்று (மே 17) உக்ரைனின் வட கிழக்கு சுமி பகுதியில், ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில், பஸ்சில் பயணம் செய்த 9 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். உக்ரைனும், ரஷ்யாவும் முதல் முறையாக நேரடி பேச்சுவார்த்தை நடத்திய சில மணி நேரங்களுக்கு பிறகு, இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
when this war comes to an end what do councils do, they want money from the USA and Russia so keeping quite disgusting