உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்ய அதிபர் புடின் இன்று வட கொரியா பயணம்

ரஷ்ய அதிபர் புடின் இன்று வட கொரியா பயணம்

மாஸ்கோ: இரு நாள் பயணமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர்புடின், இன்று (ஜூன் 18) வடகொரியா செல்கிறார். ரஷ்யாவின் நட்புறவு நாடாக வட கொரியா உள்ளது. வட கொரியா அதிபரான கிம்ஜோங் உன் ஏற்கனவே ரஷ்யாவிற்கு அரசு முறைப்பயணம் சென்றிருந்தார்.இந்நிலையில் இன்று (ஜூன்18-) ரஷ்ய அதிபர் விளாடிமிர்புடின் இரு நாள் பயணமாக வட கொரியா செல்கிறார். வடகொரியா அதிபர் கிம்ஜோங் உன் ஐ சந்தித்து பேசுகிறார். அங்கு நடைபெற உள்ள முக்கிய மாநாடு ஒன்றில் புடின் பங்கேற்று இருவரும் முக்கிய ஆவணங்களில் ஒப்பந்தம் மேற்கொள்கின்றனர் என செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை மறுத்த ரஷ்யா அரசு நிர்வாகம் புடினின் வட கொரியா பயணம் நட்புறவு ரீதியான பயணம் தெரிவிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sankaranarayanan
ஜூன் 18, 2024 05:48

சீனாவும் அங்கே சென்றிருந்தால் முத்தரப்பு மாநாடு அங்கே நடந்திருக்குமே ஓங்கோல் அரசரும் அங்கே சென்றிருந்தால் நாற்பதிலும் வென்ற நார்தரப்பு மாநாடு வெகு சிறப்பாக நடந்தேறி இருக்கும்


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி