உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சவுதி அரேபியாவில் ஒரே நாளில் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

சவுதி அரேபியாவில் ஒரே நாளில் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ரியாத்: சவுதி அரேபியாவில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சவுதி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கஞ்சா கடத்திய குற்றத்திற்காக, நாட்டின் தெற்கு பகுதியான நஜ்ரானில் 4 சோமாலியர்கள் மற்றும் 3 எத்தியோப்பியர்கள் நேற்று தூக்கிலிடப்பட்டனர். மேலும், ஒரு சவுதி குடிமகனுக்கு, தனது தாயைக் கொலை செய்த குற்றத்திற்காக மரணதண்டனை நிறைவேற்றப்பட்டாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து சவுதி அரேபியாவில் 230 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் 154 பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக தூக்கிலிடப்பட்டனர். 2022ல் 19 பேருக்கும், 2023ல் 2 பேருக்கும், 2024ல் 117 பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக தூக்கிலிடப்பட்டனர். கடந்த 2024ம் ஆண்டு 338 மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டன.சவுதி அரேபியா 2022ம் ஆண்டு இறுதியில் போதைப்பொருள் குற்றங்களுக்கு மரணதண்டனையை மீண்டும் அமல்படுத்தியது. இதற்கு முன் மூன்று ஆண்டுகளுக்கு இத்தகைய குற்றங்களுக்கு மரணதண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை