உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 14 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்கும் பணி நிறுத்தம்: ஹஜ் நெரிசல் தவிர்க்க சவுதி நடவடிக்கை

14 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்கும் பணி நிறுத்தம்: ஹஜ் நெரிசல் தவிர்க்க சவுதி நடவடிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ரியாத்: இந்தியா உள்பட 14 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு குறுகிய கால விசா வழங்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது. 2024ம் ஆண்டு ஹஜ் யாத்திரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் அதிக வெப்பம் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து பதிவு செய்யப்படாத யாத்ரீகர்கள் ஹஜ்ஜில் பங்கேற்பதை தடுக்க கடும் விதிகளை நடைமுறைப்படுத்த சவுதி அரேபியா முடிவு செய்தது.அதன் ஒரு கட்டமாக இம்முறை இந்தியா உள்பட 14 நாடுகளின் விசாக்களுக்கு அனுமதி வழங்கும் பணியை நிறுத்த சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க, இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஏப்.13க்கு பின்னர் இந்நடவடிக்கை அமலாக இருக்கிறது. அதன் பின்னர் ஹஜ் யாத்திரை முடியும் வரை, பட்டியலிடப்பட்ட 14 நாடுகளுக்கு விசா தரப்படாது. இந்தியாவுடன் இடம்பெற்றுள்ள மற்ற நாடுகளின் விவரம் வருமாறு; எகிப்து பாகிஸ்தான் ஏமன்துனிஷியா மொராக்கோ ஜோர்டான் நைஜீரியா அல்ஜீரியா இந்தோனேசியா ஈராக் சூடான் வங்கதேசம் லிபியா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அப்பாவி
ஏப் 08, 2025 09:19

அழுக்கு தேசங்களோட இந்தியாவையும் சேத்தாச்சு. ஸ்ரீலங்கா கூட சுத்தமா இருக்கு


Sundar
ஏப் 12, 2025 11:47

எதுக்கு விசா நிருத்தினாங்க?


நிக்கோல்தாம்சன்
ஏப் 08, 2025 04:10

இதில் குறிப்பிட்டுள்ள எல்லா நாடுகளும் மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகள் ,


Kumar Kumzi
ஏப் 08, 2025 01:49

இவ்வளோ தான் மரியாதையா ஹாஹாஹா டூப்ளிகேட் மூர்க்கன்ஸ் ஐயோ பாவம்


Sree
ஏப் 07, 2025 22:46

சபாஷ் ஒரு 10 வருடம் தொடர்ந்து ஹஜ் பயனாளிக்கு விசா விசா ரத்து செய்யவும்


மீனவ நண்பன்
ஏப் 08, 2025 00:41

இறையருள் கிடைப்பதை விரும்பாதவரா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை