உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாகிஸ்தானில் எஸ்.சி.ஓ., மாநாடு: மோடிக்கு பாகிஸ்தான் அரசு அழைப்பு

பாகிஸ்தானில் எஸ்.சி.ஓ., மாநாடு: மோடிக்கு பாகிஸ்தான் அரசு அழைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பாகிஸ்தானில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க வருமாறு நம் பிரதமர் மோடிக்கு,பாகிஸ்தான் அரசு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நம் அண்டை நாடான சீனாவை தலைமையிடமாக வைத்து செயல்படும் எஸ்.சி.ஓ. எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உட்பட எட்டு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை கடந்த 2021ல் இந்தியா ஏற்றது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3qodf42h&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் வரும் அக்டோபர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அத்துடன் எஸ்.சி.ஓ. அமைப்பு நாடுகளின் அமைச்சர்கள் மாநாடும் நடைபெறுகிறது.இதில் இந்தியா சார்பில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக இன்று ( ஆக.,29) பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மும்தாஜ் ஜஹாரா பலோஜ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

venugopal s
ஆக 29, 2024 22:58

அவரைத் திருப்பி இந்தியாவுக்கு அனுப்பி வைக்க மாட்டீர்கள் என்று உறுதிமொழி கொடுத்தால் மகிழ்ச்சியாக அனுப்பி வைப்போம்!


N Sasikumar Yadhav
ஆக 30, 2024 02:33

பாகிஸ்தான்மீது பாசமாக இருக்கும் திருட்டு திமுக தலைவரை அனுப்புவதுதான் சரியாக இருக்கும் கூடவே நீயும் சென்றுவிடு திரும்ப வரவேண்டாம் நீங்க உங்க பாசமாக இருக்கும் நாட்டீலேயே தங்கிவிடுங்க பாரதநாட்டிற்கு நன்மையாக இருக்கும்


Ramesh Sargam
ஆக 29, 2024 22:43

பாக்கிஸ்தான் பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்கும்வரை இந்தியாவிலிருந்து ஒரு அரசியல் தலைவரும் அங்கு செல்லக்கூடாது.


GMM
ஆக 29, 2024 21:28

பிரதமர் பாதுகாப்பிற்கு உகந்த நாடு பாகிஸ்தான் அல்ல. பாக்கினால், தீவிரவாதிகளை கட்டுப்படுத்த முடியாது. பின்லேடன் நினைவு கொள்க. எதிர் கட்சி தலைவர் ராகுல் விருப்பம் பெற்று இந்தியா சார்பாக அனுப்ப முடியாதா? காங்கிரஸ் கட்சிக்கு பிரிவினைக்கு முன்பும் நல்ல உறவு உண்டு.


R S BALA
ஆக 29, 2024 20:14

பாரத பிரதமர் போகவே கூடாது இதுவே நம் மக்களின் விருப்பம்..


M Ramachandran
ஆக 29, 2024 20:08

நம் நாடு,பாகிஸ்தானையும், சீனாவையும் நம்பகத்தனமை அற்ற நாடு என்று பட்டியலில் சேர்க்க வேண்டும் அவர்களுடன் ஏதும் உறவு ஐந்து கொள்ள கூடாது


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 29, 2024 20:05

பாதுகாப்பை காரணம் காட்டி புறக்கணிக்க முடியாது ..... பாகிஸ்தான் திவாலாகிவிட்ட காரணத்தால் இப்போது அது அர்த்தமற்ற அமைப்பு ..... .


தமிழ்வேள்
ஆக 29, 2024 19:58

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் பங்களாதேஷ் இவை மூன்றுமே இண்டி புள்ளி கும்பலின் ரத்த உறவு நாடுகள்... அங்குள்ள இவர்களின் மூர்க்க சொந்தங்கள் மூலம் தாக்குதல் முன்னெடுக்கப்பட வாய்ப்புகள் அதிகம்...பிரதமர் இந்த மிலேச்ச நாடுகளை தவிர்க்க வேண்டும்.... நம்மை மூர்க்கம் காஃபிர் என இழித்து குறிப்பிடும் போது இதுகளை நாம் ஏன் நமது புராதன கிரந்தங்களில் கூறிய படி மிலேச்சன் என்று சொல்லக்கூடாது?


Senthil Arun Kumar D
ஆக 29, 2024 19:26

பிரதமர் இந்த மாநாட்டை புறக்கணிக்க வேண்டும். பாகிஸ்தானில் நம் பிரதமரின் பாதுகாப்பிற்கு உத்திரவாதமில்லை


புதிய வீடியோ